Thursday, April 4, 2019

சென்னையை வீழத்திய கடைசி இரண்டு ஓவர்கள்


மும்பை இந்தியன், சென்னை சுப்பர் கிங்ஸ் ஆகியவற்றுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற  15 ஆவது ஐபிஎல் போட்டியில் 37 ஓட்டங்களில்  மும்பை வெற்றி பெற்றது. மும்பை அணிக்கு எதிராக சென்னை வீரர்கள் வீசிய கடைசி இரண்டு ஓவர்களில் அதிகளவான ஓட்டங்களை மும்பை வீரர்கள் அடித்ததால்சென்னை தோல்வியடைந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணித்தலைவர் களத்தடுப்பைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுட்தாடிய மும்பை ஐந்து விக்கெற்களை இழந்து 170 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென்னை 20 ஓவர்களில் எட்டு விக்கெற்களை இழந்து 133 ஓட்டங்கள் எடுத்தது.

டிகொக்4,ரோஹித் சர்மா 13, யுவராஜ் சிங் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.சென்னை வீரர்கலின் பந்து வீச்சில் விக்கெற்கள் வீழ்ந்தபோது சூரியகுமார் யாதவ் அடித்தாடினார். சூரையகுமார் யாதவுடம் க்ருனால் பாண்டையா இணைந்தா இருவரும் 50 ஓட்டங்கள் எடுத்தனர். சூரையகுமார் 59 ஓட்டங்களிலும் க்ருனால் 42 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். மும்பை 18 ஓவர்களில் ஐந்து விக்கெற்களை இழந்து 125 ஓட்டங்கள் எடுத்தது. இரண்டு ஓவர்கள் மட்டுமே இருப்பதால் 140 ஓட்டங்களுக்குள்  மும்பை அடங்கிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. பண்டையா, பொலட் ஜோடி கடைசி இரண்டு  ஓவர்களில் 45 ஓட்டங்கள் அடித்து சென்னைக்கு அதிர்ச்சியளித்தது.

எட்டு பந்துகளில் பண்டையா 25  ஓட்டங்களும், ஏழு பந்துகளில் பொலட் 17 ஓட்டங்களும் அடித்தனர். ஷர்துர் தர்கூரின் 19 ஆவது ஓவரில் 16 ஓட்டங்களியும் பிராவோவின் 20 ஆவது ஓவரில் 20 ஓட்டங்களையும் மும்பை வீரர்கள் அடித்தனர். க்ருனாலில் இலகுவான கச் ஒன்றை மோகித் சர்மா தவறவிட்டார். க்ருனாலை ரன் அவுட் செய்யும் வாய்ப்பை ஷ்ர்துர் தாக்கூர் தவறவிட்டார். 20 ஓவர்களில் எட்டு விக்கெற்களை இழந்த மும்பை 170 ஓட்டங்கள் எடுத்தது.


பலமான துடுப்பாட்ட வீரர்கலைக்கொண்ட சென்னை வெற்றி பெற்றுவிடும் என்ற எதிர்பார்ப்பை   மும்பை வீரர்கள் தகர்த்தனர். மும்பையின் பந்து வீச்சும் களத்தடுப்பும் சென்னையை அசையவிடவில்லை. வட்சன் தூக்கி அடித்த பந்தை இலகுவாக ஒற்றைக் கையினால் பிடித்த  பொலாட், சிக்ஸரை நோக்கி ரெய்னா அடித்த பந்தை அந்தர்த்தில் எழும்பி ஒற்றைக் கையினால் பிடித்து குத்துக்கரணம் அடித்து வெற்றியைக் கொண்டாடினார்.
ராயுடு ஓட்டம் எதுவும் எடுக்காஅலும் வட்சன் ஐந்து ஓட்டங்களுடனும் ரெய்னா  16 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். ஐந்து ஓவர்களில் மூன்று விக்கெற்களை இழந்த சென்னை 33 ஓட்டங்கள் எடுத்தது.  டோனி 12 ஓட்டங்களிடனும் ஜடேஜா ஒரு ஒட்டத்துடனும் வெளியேறினர்.  கேதார் ஜாதவ் அதிக அப்ட்சமாக   58 ஓட்டங்கள் எடுத்தார்.ஆட்ட நாயகன் விருதை பண்டையா பெற்றார்.

No comments: