Wednesday, March 10, 2021

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் குழப்பம் வியஜகாந்தும் ராமதாஸும் வெளியேறினர்

தமிழக, பாண்டிச்சேரி சட்டசபைத்தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும்  கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றன. தமிழகத்தில் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணியில் விஜயகாந்தும், பாண்டிச்சேரியில் ராமதாஸும் முறித்துக்கொண்டனர். இதனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டனிக்கு பெரும் பின்னடைவாக அமைய உள்ளது.

தேர்தல் திகதி அரிவிக்க முன்னரே கூட்டணிப் பேச்சு  வார்த்தையை ஆரம்பியுங்கள் என விஜயகாந்தின் மனைவி நச்சரித்தார்.அதனை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள்  எவரும் கண்டு கொள்ளவில்லை.தமிழமெங்கும் சூறாவளி சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு தனது கழகத் தொண்டர்களை பிரேமலதா உற்சாகப்படுத்தினார்.

தேர்தல் திகதி அரிவிக்கப்பட்டது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தங்களை அழைத்துப் பேசும் என பிரேமலதா எதிர் பார்த்தார். தேசிய முற்போக்கு திராவிடக் கட்சிதான் தமிழகத்தின் மூன்றவது பெரிய கட்சி என பிரேமலதா நம்புகிறார். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிட கட்சி ஆகியன  இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள்.

தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் சொந்த சின்னத்தில் போட்டியிடும் தகுதி மூன்று கட்சிகளுக்குத்தான் உள்ளது. அதனால்தான் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி என பிரேமலதா சொல்கிறார். ஒரு காலத்துல் 10 சதவீத வாக்கு வங்கி உள்ள கட்சியாக விஜயகாந்தின் கட்சி விளங்கியது. உலக்கை தேய்ந்து உளிப்பிடியானதுபோல்   இரண்டு சத வீத வாக்கு மாத்திரமே  தற்போது விஜயகாந்தின் கட்சிக்கு உள்ளது.

தமிழக சட்ட மன்றத் தேர்தலில் ஆறு சதவீத வாக்கு கிடைக்க வேண்டும் இரண்டு தொகுதிகளில்  வெற்றி பெற்ற வேண்டும் என்ற தர்மசங்கடமான நிலையில்  விஜயகாந்தின் கட்சி உள்ளது.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணிப் பேச்சு  வார்த்தைக்கு அழைக்கும் என பிரேமலதா எதிர் பார்த்து காத்திருந்தார். முதலில் ராமதாஸுடன் தொகுதிப்பங்கீட்டை முடித்துக் கொண்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பின்னர் பாரதீய ஜனதாவடன் ஒப்பந்தம் செய்தது.

ராமதாஸுடன் முதலில் ஒப்பந்தம் செய்ததை  பிரேமலதா விரும்பவில்லை. அரசியலில் ஒரே கட்சியில் கூட்டணி சேர்ந்தாலும் ராம்தாஸை விட தனக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்பதே விஜயகாந்தின் கொளகை. ராமதாஸுக்குக் கொடுத்ததை விட அதிக தொகுதிகளைப் பெற  வேண்டும் என பிரேமலதா  சபதம்  செய்தார். பிரேமலதா எதிர் பார்த்த அந்த நாளும் வந்தது கூட்டணிப் பேச்சு வார்த்தை ஆரம்பமானது. விஜயகாந்தின் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். 41 தொகுதிகள் வேண்டும் எஅன் விடாப்பிடியாக நின்றனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கொஞ்சமும்  இறங்கி வரவில்லை.

கூட்டணிப் பேச்சு வார்தைக்கு கட்சியின் முக்கியஸ்தர்களான பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. கடைசியாக நடந்த பேச்சு வார்த்தையில்  சுதீஷ் கலந்துகொண்டார். 13 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா பதவியும் தரபப்டும் என அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தெரிவித்தது.  ராமதாஸுக்கு இணையாக தொகுதிகள் ஒதுக்கப்பட  வேண்டும் என்பதில் சுதீஷ் குழுவின்ழ்ர்  உறுதியாக நின்றனர்.  அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் கையை விரித்தது.

“வெளியேறுவோம்” என்ற விஜயகாந்தின் குறுஞ்செய்தியுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியுடனான  இணைப்பு கைவிடப்பட்டது. இதனால் இரண்டு கட்சிகளும் பாதிப்படையப் போகின்றன. விஜயகாந்திக் ஆதரவாளர்களின் வாக்கு வங்கி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு  மிகவும் அவசியம் அதே போல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றுக்கு  உதவி செய்யும்.

2011 ஆம் ஆண்டு ஒன்றாக  இணைந்ததால்  வெற்றி பெற்ற இரண்டு கட்சிகளும் 2021 ஆம் ஆண்டு பிரிந்து விட்டன. ஒரே கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகளின் வாக்குகள் சிதறப் போவதால் திராவிட முன்னேற்றக் கூட்டணியின் வெற்றி சுலபமாகி உள்ளது. பிரேமலதா, விஜய பிரபாகரன், சுதீஷ் ஆகியோரின் பேச்சுகள்  நடுநிலையாளர்களை  முகம் சுழிக்கவைத்துள்ளன. அரசியல் யதார்த்தம் தெரியாத தொண்டர்கள் பட்டாசு கொளுத்தி சந்தோஷப்பட்டனர். எதிர் கால தோல்வியை சந்தோஷமாகக்கொண்டாடிய தொண்டர்களின் அறியாமையை தேர்தல் முடிவின் பின்னர் தெரியவரும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய சரத்குமார் 10 வருடங்களாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து தேர்தல்களைச் சந்தித்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தபோது வெற்றி பெற்ற சரத்குமாரால் அண்ணா திராவிட முன்னாற்றக் கழக்த்தில் இணைந்த பின்னர் வெற்றி பெறமுடியவில்லை. தமக்குப் பின்னா பெரும் தொகையான தொண்டர்கள் இருப்பதாக சரத்குமாரும் மனைவி ராதிகாவும் நினைக்கிறார்கள். சரத்குமார் கமலுடன் இணைந்துள்ளார்.

கருணாஸ், தனியரசு, தமீம் அன்சாரி ஆகியோர் கடந்த தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் இம்முறையும் தமக்கு இடம் கிடைக்கும் என எதிர் பார்த்தனர்.  அழைப்பு வராததால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தனர். தனியரசும், கருணாஸும் திராவிட முன்னேற்றக் கழகத்துகு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தனர். பின்னர் கருணாஸ் தனது ஆதரவை வாபஸ் பெற்றார்.

புதிய நீதிக் கட்சியின் தலைவர்  ஏ.சி சண்முகம் ஐந்து தொகுதிகள் கேட்டார் அண்ணா திராவிட முன்னேற்ர்க் கழக மறுத்ததால் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார்.

கார்த்திக்,ஜான்பாண்டியன்,ஜெகன்மூர்த்தி, ஷேக்தாவூத்  ஆகியோரும் அதிக தொகுதிகளைகேட்டுள்ளனர். ஒடுப்பதர்கு தொகுதிகள் இல்லாததனால் தமக்கு ஆதரவ்ளிக்கும் கட்சிகள் என 13 கட்சிகளின் பெயரைக் குறிப்பிட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதிர்ச்சியளித்துள்ளது.

தமிழ்கத்தில் கைகோர்த்த அண்னா திராவிட முன்னேற்றக் கழகமு, பாரதீய ஜனதாவும் பாண்டிச்சேரியில் பாட்டளிமக்கள் கட்சியை புறம் தள்ளியுள்ளன.பாண்டிச்சேரியில் ந்ந்ன்கு தொகுதிகளை ராமதாஸ் கேட்டார். அங்கு ஒரே ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது.  இதனால் கோபமடைந்த ராமதாஸ் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். இது தமிழக தேர்தலிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெறும் ஒரு சத வீத வாக்குகளால் திராவிட முன்னேற்ற கழகம் தோல்வியடைந்தது.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலால் திராவிட முன்னேற்றக் கழக்த்தின்  வெற்றிவாய்ப்பு அதிகரித்துள்ளது.

No comments: