Tuesday, August 8, 2023

அண்ணாமலையின் பாத யாத்திரையை புறக்கணித்த கூட்டணிக் கட்சிகள்

தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவரான அண்ணாமலை, பாதயாத்திரை செல்லப்போவதாக தடல்புடலாக விளம்பரம் செய்யப்பட்டது. கட்சியை வளர்ப்பதர்கான  முயற்சிகளில்  பாதயாத்திரையும் ஒன்று. ரதயாத்திர மூலம்  மத்தியில் ஆட்சியைப் பிடித்த  பாரதீய ஜனதா அண்ணாமலையின்  யாத்திரைக்கு  ஆதரவு தெரிவித்தது.

ராமேஸ்வரத்தில் இருந்து காஷ்மீர் வரை  ராகுல் காந்தி பாதயாத்திரை சென்றதால் அவருடைய செல்வாக்கு அதிகரித்திருப்பதாக கருத்துக் கணிப்பு சொல்கிறது.அவருடைய  யாத்திரையின் பயனாக காங்கிரஸ் கட்சியின்  செல்வாக்கும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தாமைரையை மலரவைக்க   மோடியும், அமித் ஷாவும்  பெரும்  முயற்சிகள் செய்து பார்த்தனர். எதுவும் பயன் தரவில்லை. இப்போது அண்ணாமலையின் பாத யாத்திரையை மலைலபோல் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள வாஜ்பாய் திடலில் இருந்து பாரதீய ஜனதாக் கட்சியில்தமிழகத்  தலைவர் அண்ணாமலைகடந்த ஜூலை 28 ஆம் திக்லதி பாத யாத்திரையைத் தொடங்குகினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நடைபயணத்தை தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 4 கட்டங்களாக 168 நாட்கள் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் அண்ணாமலை பாத யாத்திரை  செல்கிறார்.

வாஜ்பாய் திடலில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பா.ஜ.க தொண்டர்கள் விழாவில் பங்கேற்கின்றனர். அமித்ஷா வருகையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமையில் சுமார் 2000க்கும் மேற்பட்ட  பொலிஸார்ர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அண்ணாமலை பாத யாத்திரை செல்ல பிரத்யேக வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது. அமித்ஷா வருகையையொட்டி மண்டபம் முகாமில் வாகன அணிவகுப்பு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. அண்ணாமலை பாத யாத்திரை தொடங்க விழாவில் பங்கேற்க தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணில் அங்கம் வகிக்கும்  கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

பாதயாத்திரை விழாவிற்காக அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் பிரதமர் மோடி, அமித் ஷா, ஜெ.பி நட்டா, அண்ணாமலை ஆகியோரின் புகைப்படங்களை தவிர கூட்டணிக் கட்சி தலைவர்களின் படங்கள் இடம்பெறவில்லை.

 அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பங்கேற்றார். அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் இந்நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்வில்லை. ஜெயலலிதா பற்றி அண்ணாமலை அவதூறாகப் பேசியதால்  ஓ. பன்னீர்ச்செல்வம் பங்குபற்றவில்லை.  பாரதீய ஜனதவை பன்னீர்  பெரிதும் நம்பி இருந்தார்.  பன்னீரை பாரதீய ஜனதா கைவிட்டதால் பன்னீர் பங்குபற்ரவில்லை.தினகரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.  அவரும்  கலந்க்டுகொள்ளவில்லை.

2024- ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து அடுத்தடுத்துக் கூட்டங்களை நடத்தி வருகிறது. அதேபோல், பாரதீய ஜனதாக் கட்சியும் ஆட்சியைத் தக்க வைக்கும் தலைமையில், கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் செல்லும் பாத யாத்திரை, அடுத்தாண்டு ஜனவரி 11- ஆம் திகதி சென்னையில் நிறைவடைகிறது. இந்த நிறைவு விழாவில், பாரதீய ஜனதாவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கலந்து கொள்ளவிருக்கிறார். இந்த நிலையில், அண்ணாமலை நடத்தும் பாத யாத்திரை பா.ஜ.க.வுக்கு எந்த அளவுக்கு கைகொடுக்கப் போகிறது என பரவலாகக் கேள்வி எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடத்திய ஒற்றுமை நடைப்பயணத்தை விமர்சித்தவர்களில் ஒருவர் அண்ணாமலை, அப்படி இருக்கையில் இந்த யாத்திரை, அவருக்கு எப்படி கைக்கொடுக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நேரடியாக செல்லத் திட்டமிட்டுள்ள அண்ணாமலை, மத்திய அரசின் திட்டங்கள், மக்களை முழுமையாகச் சென்றடைந்திருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது. 

அதுமட்டுமின்றி, தமிழக அரசின் குறைகளையும் பொதுமக்களிடம் எடுத்துரைத்து, பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாத யாத்திரையின் இடையில் மத்திய அமைச்சர்கள், நேரடியாக களமிறங்கி பொதுக்கூட்டங்களை நடத்தவும் முடிவு செய்துள்ளதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாரதீய ஜனதாவை வளர்ப்பதற்காக நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு எஅடப்பாடி மறுத்துவிட்டார். பாரதீய ஜனதாவையும், அண்ணாமலையையும்  முதன்மைப்படுத்தும்  கூட்டத்தை   கூட்டணிக்கட்சிகள்  புறக்கணித்துள்ளன.  அண்ணாமலை யாத்திரையைத் தொடங்கிய ஜூலை 28-ம் திகதி  அண்ணா  திராவிட முன்னேற்றக் கழக  மூத்த நிர்வாகிகள்  ராமநாதபுரத்தில்  நடந்த  ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.  அவர்கள் விரும்பி இருந்தால் எட்டிப் பார்த்திருக்கலாம்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது, அண்ணாமலை அழைக்காமலேயே கமலாலயம் வரை சென்று தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியவர் ஓ.பன்னீர்செல்வம்.  அமித் ஷா பங்கேற்ற யாத்திரை தொடக்க விழாவுக்கு அண்ணாமலை அழைத்தும் அவர் செல்லவில்லை.  எடப்பாடியின் பக்கம் பாரதீய ஜனதா சாய்துள்ளதை அவரால் ஏற்றுக்கொள்ள  முடியவில்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பிரசாரக் கூட்டம்தான் இந்த யாத்திரை தொடக்க விழா. இதில், கூட்டணித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுமென்பதில் டெல்லி தீர்மானமாக இருந்தது. கூட்டணித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அண்ணாமலை திலைபேசி மூலம் அனைவரையும் அழைத்தார்.  அண்ணாமலைக்கும்  கூட்டணிக் கட்சித்தலைமைகளுக்கும் இடையிலான  உரசல் , பாரதீய ஜனதாவின்  வளர்ச்சிக்கான  ஏற்பாடு  என்பனவற்றால்  கூட்டணிக் கடித் தலைவர்கள்  புறக்கணித்தனர்.

  அமித் ஷா தமிழகத்துக்கு வந்திருந்த போதுதான், என்.எல்.சி-க்கு எதிராகப் போராட்டத்தை நடத்தினார் அன்புமணி. தேனியில் இருந்துகொண்டே பன்னீரும் வரவில்லை. அமித் ஷா எதிர்பார்த்த அளவுக்கு மக்கள்  கூடவில்லை.  இதனால் அமித் ஷா  ஏமாற்றமடைந்தார்.

No comments: