Tuesday, July 16, 2024

எடப்படிக்கு எதிராக போர்க்கொடி உச்சம் அடைந்த உட்கட்சி மோதல்


 

எடப்பாடிக்கு எதிராக  போர்க்கொடி  உச்சம் அடைந்த உள் கட்சி  மோதல்

 

ஜெயலலிதாவின்  மறைவின்  பின்னர் அண்ணா திராவிட  முன்னேற்றக்  கழகத்தின் தலைமைப் பதவியைக் கைப்பற்ற  சசிகலா முயன்றார்ஜெயலலிதாவின் விசுவசியான . பன்னீர்ச்செல்வம் தர்மயுத்தத்தை ஆரம்பித்தார். அந்தத் தர்மயுத்தம்  இன்று வரை தொடர்கிறது. கழகத் தலைமைப் பதவி கைக்கு எட்டாத தூரத்துக்குச் சென்று விட்டது.

 சந்தர்ப்ப சூழ்நிலையால்   எடப்பாடியை முதல்வராக்கினார் சசிகலா. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்றதால், கட்சியைக்  கையகப்படுத்தினார். தனக்கு இடைஞ்சலாக  பன்னீர் இருப்பார் என நினைத்தஎடப்பாடி அவரையும் கட்சியை விட்டுத் தூக்கினார்.

அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகம் எடப்பாடியின் கையில் உள்ளதுதொடர்ச்சியாக 10  தேர்தல்களில் எடப்பாடியின் தலைமையிலான  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடைந்ததுகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தமிழகத்தின் 39  தொகுதிகளிலும்  வெற்றி பெற்றதுபாண்டிச்சேரியிலும்  திமுக கூட்டணியின் கொடி உயர்ந்தது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள்   உட்கட்சி மோதல் உச்சம் அடைந்துள்ளதால்  எடப்பாடி கையைவிட்டு  அதிமுக செல்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

 அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திடீரென அரசியல் புரட்சி ஏற்பட தொடங்கி உள்ளது. அதிமுகவின் தொடர் தோல்வி காரணமாக கட்சியினர் சிலர் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்முன்னாள் அமைச்சர்கள் ஆறு பேர் எடப்பாடியை சந்தித்து இருக்கிறார்கள்.

 நாடாளுமன்றத்  தேர்தலில் வென்று காட்டுகிறேன் என்று நம்பிக்கையாக இருந்தார். பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்ததால் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கும். திமுக கூட்டணி உடையும் என்று எடப்பாடி நினைத்தார். ஆனால் அவர் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. அதிமுக படுதோல்வி அடைந்தது. அதோடு இல்லாமல் எடப்பாடியை 10 தோல்வி பழனிசாமி என்று அழைக்கும் நிலை ஏற்பட்டது.

அதிமுகவில்  முக்கிய  தலைவர்கள் பலரும் அவருக்கு எதிராக திரும்பி உள்ளனர்எடப்பாடியுடன்  இருக்கும் நிர்வாகிகளே அவரை எதிர்க்க தொடங்கி உள்ளனர்ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என்று  முக்கிய தலைவர்கள் அவரிடம் சொல்ல தொடங்கிவிட்டனர். கடந்த  நாடாளுமன்ற்த் தேர்தலில் அதிமுகவில் வேட்பாளர் தேர்வில் குழப்பம்பல தொகுதிகளில் உள்ளூர் ஆட்களுக்கே தெரியாதவர்கள் வேட்பாளர்கள் ஆனார்கள்.

எடப்பாடியின் பிரச்சாரம் பெரிதாக எடுபடவில்லை. அவரின் பிரச்சாரம் பெரிதாக கொங்கில் கூட மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. அப்படி இருக்க அவருக்கு மாஸ் இமேஜ் இல்லை என்ற விமர்சனங்கள் கட்சிக்குள் வைக்கப்பட்டு வருகிறது. . எடப்பாடி இத்தனை காலம் கட்சியை கட்டுப்படுத்த காரணமாக  தலைவர்களே அவருக்கு எதிராக திரும்பி உள்ளனர். அப்படி இருக்க அவர் இனி எப்படி கட்சியை கட்டுப்படுத்துவார் என்ற கேள்வி எழுந்துள்ளதுதென் மண்லடத்தில் அதிமுக கடுமையான சரிவை சந்தித்து உள்ளது. கட்சி படுமோசமான பின்னடைவை சந்தித்து உள்ளது. அங்கே உட்கட்சி மோதலும் உச்சத்தில் உள்ளது.   பன்னீர்செல்வம், சசிகலா உள்ளே வருவதை ஏற்றுக்கொள்ள மாட்டார். எடப்பாடி இல்லாத அதிமுக உருவாக்கி விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.. கிட்டத்தட்ட தென் மண்டலம், கொங்கு மண்டலம், வடமண்லடம் என்று மூன்று மண்டலங்களை சேர்ந்து 10 தலைவர்கள்,சுமார் 25 எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு இதில் பிரஷர் கொடுக்க தொடங்கி உள்ளனராம்கடந்த 1 வாரமாக எடப்பாடி மட்டுமே பன்னீர்செல்வத்தின் விமர்சனங்களுக்கு பதில் சொல்கிறார். மற்ற நிர்வாகிகள் யாரும் பன்னீர்செல்வத்திற்கு பதில் சொல்லவில்லை. அப்படி இருக்க எடப்பாடி தனித்து விடப்பட்டு விட்டாரோ என்று கேள்வி எழுந்துள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர் காலம் பற்றிய செய்தி  வெளிவரும் நிலையில் 2026 தமிழக சட்ட சபைத்  தேர்தலில் பலமான கூட்டணியை அமைக்க எடப்பாடி முயற்சிக்கிறார். பாஜக அல்லாத கூட்டணியை அமைப்போம். மிகவும் வலுவான கூட்டணியை அமைப்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது கட்சித் தலைவர்களிடம் உறுதிபடக் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தலுக்கு முன்பு சில மாதங்களுக்கு முன்பே அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் விட்டு விட்டது. பாஜகவை கூட்டணியிலிருந்து விலக்குவதாக அதிமுக அறிவிக்கவே பரபரப்பு கூடியது. மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக மேலிடம் விரும்பினாலும் கூட எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை இடையிலான கருத்து மோதலால் இது நடக்காமல் போய் விட்டது.

இரு கட்சிகளும் கூட்டணியாக தேர்தலை சந்திக்கும் இணைந்து களம் காணலாம் என்று ஆர்வத்துடன் காத்திருந்த பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் பெரும் குழப்பமடைந்தன. கடைசியில் பாமகவை, பாஜக தன் பக்கம் இழுக்க, தேமுதிகவை அதிமுக கொண்டு போய் விட்டதுஇப்படி பலம் சிதறி போட்டியிட்டன இரு கூட்டணிகளும். விளைவு.. பெரும் தோல்வியை சந்தித்தனர். இந்த நிலையில் தேர்தல் தோல்விக்கு கூட்டணி சரியில்லாமல் போட்டதே காரணம் என்று அதிமுக தரப்பிலும், பாஜக தரப்பிலும் கருத்துக்கள் கிளம்பின. அதிமுகவிலிருந்துதான் முதல் குரல் கிளம்பியது. இதை பாஜகவிலிருந்து தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கூறினார்கள்.

இந்தக் குரல்கள் தற்போது அடங்கி விட்ட நிலையில் அடுத்து அதிமுகவை இணைக்க வேண்டும் என்ற குரல்கள்  புறப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிச்சாமி விலக வேண்டும். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை சசிகலா, .பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் கையில் எடுத்துள்ளனர். ஆனால் இந்தக் கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி நிராகரித்து விட்டார். மேலும் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தையும் அவர் நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில்தான் பாஜகவுடன் கூட்டணி கிடையாது, வலுவான கூட்டணியுடன் 2026 தேர்தலை சந்திப்போம் என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இதுதான் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி அமைக்க வேண்டும். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். அப்போதுதான் திமுகவை வீழ்த்த முடியும் என்பதுதான் பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் பலரின் கருத்தாக உள்ளது. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் கூட இதே கருத்தில்தான் உள்ளன. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருப்பது பலரையும் குழப்பியுள்ளது.

  நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அதிமுக 8 சட்டசபைத் தொகுதிகளிலும், தேமுதிக 2 தொகுதிகளிலும் முன்னிலை வகித்தது. பாஜக கூட்டணியில் பாமக மட்டும் 3 தொகுதிகளில் முன்னிலை வகித்தது.

கூட்டணிக் கட்சிகள் கூட ஒரு சில தொகுதிகளில் முன்னிலை வகித்த நிலையில் கூட்டணிக்குத் தலைமை தாங்கிய பாஜகவால் ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்க முடியாமல் போயிருக்கிறது. அப்படிப்பட்ட கட்சி நமக்கு தேவையா அதற்கு பாஜகவின் கூட்டணிக் கட்சிகளை நம் பக்கம் இழுத்தால்தான் நமக்கு லாபம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகவும் சொல்கிறார்கள்.

சசிகலவையும், தினகரனையும் தவிர்த்து பன்னீரை கட்சியில் இணைத்தால் பலமாக  இருக்கும் என எடப்பாடியிடம்  சொல்லப்பட்டிருக்கிறது.

பாஜக கூட்டணியிலிருந்து பாமகவை தன் பக்கம்  இழுக்கஅதிமுக திட்டமிட்டுள்ளதாம். இதனால்தான் விக்கிரவாண்டி தொகுதியில்  போட்டியிடாமல் விட்டுக் கொடுத்து விட்டதாகவும் சொல்கிறார்கள். அதிமுகவினர் பாமகவுக்கு வாக்களித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. காரணம், கடந்த தேர்தலை விட இந்த முறை அங்கு வாக்குப் பதிவு சற்று அதிகமாகவே நடந்துள்ளது. எனவே கணிசமான அதிமுகவினர் பாமகவுக்கு வாக்களித்திருப்பதாக நம்பப்படுகிறது. எனவே வருகிற சட்டசபைத் தேர்தலில் பாமக கேட்கும் தொகுதிகளைக் கொடுத்து கூட்டணிக்குள் இழுத்து விட்டால் வட மாவட்டங்களில் அதிமுக கூட்டணி வலுப்பெறும் என்பது எடப்பாடியாரின் நம்பிக்கையாகும்.

  நாம் தமிழர் கட்சியையும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தையும் கூட்டணியில் இணைப்பதும் எடப்பாடியாரின் திட்டம்.. இது சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால் நடந்தால் நிச்சயம் அதிமுக கூட்டணி வலுப்பெற்று விடும். விஜய் கூட்டணிக்கு வருவாரா அதுவும் அதிமுக கூட்டணிக்கு வருவாரா என்பது சந்தேகம்தான். ஒரு வேளை வந்தால் அது அதிமுகவுக்கு நல்ல பூஸ்ட்டாக அமையும்  பகுஜன் சமாஜ் கட்சியையும் தனது கூட்டணியில் இணைக்க அதிமுக அக்கறை காட்டும். காரணம், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையால் அந்தக் கட்சி மீதான அனுதாபம் மக்களிடையே உள்ளது. குறிப்பாக வட மாவட்ட தலித் மக்களிடையே ஆம்ஸ்ட்ராங் படுகொலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை அறுவடை செய்யவும் அதிமுக முயலலாம். எனவே ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கோ அல்லது அவரது குடும்பத்தில் யாருக்கேனுமோ சீட் கொடுத்து கட்சியை கூட்டணியில் இணைக்கவும் அதிமுக முயலலாம்.

இன்னொரு தேர்தலில் எடப்பாடி தோல்வியடைந்தால் அவர் கட்சியில் இருந்து தூக்கி  எறியப்படுவார்.

 

ரமணி

No comments: