Monday, January 5, 2026

எடப்பாடியின் நடவடிக்கையை உன்னிப்பாக கண்காணிக்கிறது டில்லி


 தமிழகத்தில் வலுவான கூட்டனி என் எடப்பாடி அடிக்கடி சொல்கிறார். ஆனால், கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதாவை அவர் கண்டுகொள்வதில்லை என் டில்லியில் புகார் சொல்லப்பட்டிருக்கிறது. பாரதீய ஜனதாவுடன் அதிமுக கைகோர்த்து சுமார் எட்டு மாதங்கள் முடிவடைந்து விட்டது.ஆனால், எடப்பாடியின் நடவடிக்கை நேர் மாறாக  உள்ளது,பங்காளிக் கட்சியான பாரதீய ஜனதாவை எடப்பாடி கண்டு கொள்வதில்லை என  குற்றம் சுமத்தப்படுகிறது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதிக பெரும்பான்மையுடன் தனித்து ஆஅட்சி அமைக்கும் என எடப்பாடி போகும்  இடம் எல்லாம் சொல்லி வருகிறார்.  கூட்டணி சேந்த மாநிலக் கடிகளுகு நடந்த சம்பவங்களைப் பார்த்த பின்னரும்  பாரதீய ஜனதாவை எடப்பாடி நம்புகிறார். பாரதீய ஜனதாவை எடப்பாடி மதிக்கவிலை. திராவிட முன்னேறக் கழகத்துடன் இருகும் காங்கிரஸுக்கு அங்கு உரிய மரியாதை கொடுப்படுகிறது. எஅடப்பாடியிடம் அப்படி ஒரு பக்குவம் இல்லை.

  எடப்பாடி பழனிசாமியின்  தனிவழி அங்கு பல சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது.அவரது கட்சியில் பல்வேறு மட்டங்களில் உள்ள பல தலைவர்கள் விலகி வருகின்றனர். செங்கோட்டையன் விலகியது எல்லாம் அந்த கட்சிக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும். இது கழகத்தின்  உட்கட்சி கட்டமைப்பைப் பாதித்து, கட்சி பலவீனமடைந்து வருகிறது. திமுகவுக்கு எதிராக ஒரு வலுவான கருத்தை உருவாக்க அவர் தவறிவிட்டார்.

 ஸ்டாலினுக்கு எதிரான  பிரசாரத்தை எடப்பாடி காத்திரமாகச் செய்வதில்லை. விஜய் இந்த இடத்தில் முன்னேறிவிட்டார்.கடந்த எட்டு மாதங்களில் இந்தக் கூட்டணி முன்னேறாமல்,   பின்தங்கியுள்ளது என்றே அரசியல் விமர்சகர்கள்,     தமிழக அரசியலின் மிகப்பெரிய அரசியல் தோல்வியாளராக டெல்லியால்  எடப்பாடி பார்க்கப்படுகிறார். அவரை தமிழக அரசியல் வெற்றி ரீதியாக ராகுல் காந்தியை விட விட மோசமானவர் என்றும் டெல்லியில் சிலர் குறிப்பிடுகின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி என்பது கடுமையாகத்தான் இருக்க போகிறது. ஏனென்றால் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும்! திமுக ஆட்சி அமையக் கூடாது என்பதில் அதிமுக கூட்டணி கடுமையாக போராடி வருகிறது. இதற்காக என்னென்ன வித்தைகள், வியூகங்களை இறக்க முடியுமோ அதையெல்லாம் ஆலோசனை செய்து வைத்துள்ளதாம்.

 200 தொகுதிகளில் வெற்றி பெற்ற்து தனிப் பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்க திமுக  விரும்புகிறது. அதிக தொகுதிகளைக் கேட்க  வேண்டும் என்பதில் காங்கிரஸ் கடுமையாக உள்ளது. அதிக தொகுதிகளை ஸ்டாலின் தரவில்லை என்றால் விஜயின் பக்கம் வண்டியைத் திருப்புவதற்கு காங்கிரஸ்  தயாராக இருக்கிறது.திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருப்பதால் தமிழகத்தில் காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

பல்வேறு மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 40 தொகுதிகளை கேட்டு பிடிவாதம் பிடிப்பதால் 18 அல்லது 20 தொகுதிகளை கொடுப்போம். திருப்திப்பட்டால் வைத்துக் கொள்வோம், இல்லாவிட்டால் அவர்கள் கூட்டணியை விட்டு கூட வெளியேறி கொள்ளட்டும் என்ற முடிவுக்கு திமுக வந்துவிட்டதாம்.

தமிழகத்தில் ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என உறுதியோடு களத்தில் இறங்கியுள்ளது பாஜக, அந்த வகையில் பிரம்மாண்ட மோடி பொங்கல் விழாவில் தொடங்கி அடுத்த 2 மாதங்களுக்கு தமிழகத்தை குறிவைத்து செயல்பட அமித்ஷா திட்டமிட்டு களம் இறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 100 முதல் 120 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்தவகையில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க திமுக திட்டமிட்டு வருகிறது. ஆனால் இதற்கு வாய்ப்பே கொடுக்க கூடாது என அதிமுக- பாஜக கூட்டணி காய நகர்த்தி வருகிறது. அதில் மற்றொரு பக்கம் திரைத்துறையில் இருந்து அரசியலில் கால் பதித்துள்ள நடிகர் விஜய் இளம் தலைமுறை வாக்காளர்களை வைத்து மிரட்டி வருகிறார். இதுவரை பார்த்திராத தேர்தலாக தமிழக சட்டசபை தேர்தல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்த பாஜகவால் தமிழகத்தில் கால் பதிக்க முடியவில்லை.

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளாராக தனது நம்பிக்கைக்குரிய நபரான பியூஸ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை நியமித்துள்ளார். இதனையடுத்து அதிமுக- பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் புதிய கட்சிகளை கூட்டணியில் இணைக்கவும் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஜனவரி 4ஆம் திகதி  தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, அன்றைய தினம் புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தி வரும் 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற பாதையாத்திரை இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளார்.  இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பாஜக நிர்வாகிகளோடு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்த ஆலோசனையில் திமுகவை வீழ்த்த எடுக்கப்படவுள்ள வியூகங்கள் தொடர்பாக கேட்டறிவதோடு, ஆலோசனையும் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஜனவரி 5 ஆம் திகதி ஸ்ரீரங்கத்தில் 'மோடி பொங்கல்' நிகழ்ச்சியிலும் அமித்ஷா கலந்துகொள்ளவுள்ளார். காலை 11 மணி அளவில் மன்னார்புரம் ராணுவத்திடலில் 3 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் "மோடி பொங்கல்" விழாவில் பங்கேற்க பாஜக கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாகவோ அல்லது நிகழ்ச்சிக்கு பிறகோ அமித்ஷாவுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசவுள்ளார்.

அப்போது கூட்டணியில் இடம்பெறவுள்ள கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு, பாஜகவிற்கு தொகுதிகள் எத்தனை, ஓபிஎஸ்- டிடிவியை மீண்டும் இணைப்பது தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியை பிடித்தாக வேண்டும் என உறுதியாக இருக்கும் அமித்ஷா, தித்திக்கும் பொங்கல் பண்டிகை முதல் அடுத்த 2 மாதங்களுக்கு தமிழகத்தை டார்கெட் செய்து களத்தில் இறங்க முடிவு செய்துள்ளதாக பாஜக வட்டார தகவல் கூறப்படுகிறது.

மோடியா, லேடியா என்ற கோஷம் ஜெயலலிதாவின் காலத்தில் ஓங்கி ஒலித்தது. ஸ்டாலினா, மோடியா, விஜயா என்ற எதிர்பார்ப்புத் தமிழகத்தில் உருவாகி உள்ளது.

 

ரமணி

4/1/26

  

No comments: