இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 5 ரி20 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய மகளிர் அணி புதிய சாதனை படைத்தது.
திருவனந்தபுரத்தில்
நடைபெற்ற 5 ஆவதி டி20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெற்களை ஈழந்து 175 ஓட்டங்கள் எடுத்தது. 176 வெற்றி இலகுடன்
களம் இறங்கிய இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெற்களை இழந்த இலங்கை 160 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய
மகளிர் அணியில் வலது கை ஸ்பின்னரான தீப்தி சர்மா
133 போட்டிகளில் 152 விக்கெற்களை வீஅத்தியுள்ளார். மகளிர் ரி20 கிரிக்கெட்டில்
அதிக விக்கெட்டுகள் சாய்த்த வீராங்கனை என்ற புதிய உலக சாதனையை தீப்தி படைத்துள்ளார்.
முன்னதாக
அவுஸ்திரேலியாவை சேர்ந்த மேகன் ஸ்கட் 123 போட்டிகளில் 511 விக்கெற்டுகள் எடுத்ததே முந்தைய
சாதனை. கடந்த போட்டியிலேயே அந்த சாதனையை சமன் செய்திருந்த தீப்தி இப்போட்டியில் முழுமையாக
முறியடித்தார். இது மட்டுமின்றி 2025ஆம் ஆண்டில்
நடைபெற்ற மகளிர் ஒருநாள் போட்டிகளில் அவர் 23 இன்னிங்ஸில் 39 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
2025 சர்வதேச மகளிர் ஒருநாள் போட்டிகளில் அதிக எடுத்த விக்கெட்டுகள் வீராங்கனை என்ற உலக சாதனையையும் தீப்தி படைத்துள்ளார்: அந்த பட்டியல்: 1. தீப்தி சர்மா (இந்தியா): 39 2. ம்லபா (தென் ஆப்பிரிக்கா): 35 3. சோபி எக்லஸ்டன் (இங்கிலாந்து): 28 3. ஸ்னே ராணா (இந்தியா): 28 4. அலனா கிங் (அவுஸ்திரேலியா): 25

No comments:
Post a Comment