Saturday, May 23, 2026

உலகக்கிண்ண உதைபந்தாட்டத் திருவிழா களை கட்டியது


 மூன்று நாடுகள்.

16 நகரங்கள்.

48 அணிகள் .

104 போட்டிகள் 

 உதைபந்தாட்ட ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த உலகக்கிண்ண உதைபந்தாட்டத்திருவிழா ஜூன் மாதம் 11 ஆம் திகதி  ஆரம்பமாக உள்ளது. ஜூலை 19 ஆம் திகதி இறுதிப் போட்டி நடை பெறும் வரை ரசிககளின்  கொண்டாட்டம் உலகையே அதிர வைக்கும்.

அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்துகின்றன.  உலகக்கிண்ண உதைபந்தாட்ட ஆரம்பப் போட்டியை நடத்த  மெக்ஸிகோ  மிகச் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது.  தொடக்கப் போட்டியை  நடத்தும் முதல் மைதானமாக மெக்சிகோ சிட்டி ஸ்டேடியம் திகழ்கிறது. . 1970 , 1986 ஆம் ஆண்டுகளின் உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளையும் தொடக்க ஆட்டங்களையும் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க மைதானத்தில் போட்டிகள் தொடங்குகின்றன.

இறுதிப் போட்டி  அமெரிக்காவில் , நியூயார்க் ஜெயண்ட்ஸ் ,நியூயார்க் ஜெட்ஸ்  ஆகிய அணிகளின் சொந்த மைதானமான நியூயார்க் நியூ ஜெர்சி (மெட்லைஃப்) ஸ்டேடியத்தில் நடைபெறும்.

 உலகக்கிண்ணப் போட்டியில் தகுதி பெறும் அணிகளின் தொகை இந்த முறை முதல் அதிகரிக்கப்பட்டுளது. முன்னதாக்ல 32 நாடுகள் பங்குபற்றி 64 போட்டிகள் நடைபெற்றன. இம்முறை 48 நாடுகள்  தகுதிபெற்றுள்ளன. 104 போட்டிகள் நடைபெற உள்ளன.  அமெரிக்காவில் 11 இடங்களிலும், மெக்சிகோவில் மூன்று இடங்களிலும், கனடாவில் இரண்டு இடங்களிலும்  போட்டிகள் நடைபெற உள்ளன.

போட்டிகளை நடத்தும் நாடுகள் நேரடியாகத் தகுதி பெற்று, தங்களின் குழுநிலைப் போட்டிகள் மூன்றையும் சொந்த மண்ணில் விளையாடும்.

உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள்:

அமெரிக்கா:

அட்லாண்டா மைதானம்,• பாஸ்டன் மைதானம்,• டாலஸ் மைதானம்,• ஹூஸ்டன் மைதானம்,• கேன்சஸ் சிட்டி மைதானம்,• லாஸ் ஏஞ்சல்ஸ் மைதானம்,• மியாமி மைதானம்,• நியூயார்க் நியூ ஜெர்சி மைதானம்,

பிலடெல்பியா மைதானம்,• சான் பிரான்சிஸ்கோ பே ஏரியா மைதானம்,• சியாட்டில் மைதானம்

மெக்சிகோ:

எஸ்டாடியோ அஸ்டெகா மெக்சிகோ சிட்டி,• எஸ்டாடியோ குவாடலஹாரா,• எஸ்டாடியோ மான்டேரி,

கனடா:

டொராண்டோ மைதானம்,• பிசி பிளேஸ் வான்கூவர் மைதானம்

 

ரமணி

24/5/26 

No comments: