அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 66-வது லீக் ஆட்டம் நடைபெற்றது.சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து விளையாடிய இதில் குஜராத் டைட்டன்ஸ் 89 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. .
நாணயச் சுழற்சியில் வெற்றி
பெற்ற சென்னை கப்டன் ருதுராஜ் பந்து வீச்சைத்
தேர்வு செய்தார்.
குஜராத் அணிக்காக கப்டன்
ஷுப்மன் கில் , சாய் சுதர்ஷன் ஜோடி இன்னிங்ஸை
தொடங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 125ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
ஷுப்மன் கில், 37 பந்துகளில் 64 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களத்துக்கு
வந்த பட்லர் உடன் இணைந்து 82 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் சாய் சுதர்ஷன்.
53 பந்துகளில் 84 ஓட்டங்கள்
எடுத்து சாய் சுதர்ஷன் வெளியேறினார். ராகுல் தெவாட்டியா 0, வாஷிங்டன் சுந்தர் 7 ஓட்டங்கள்
எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ஓட்டங்கள் எடுத்தது
குஜராத் அணி. ஜாஸ் பட்லர், 27 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல்
இருந்தார்.
230 ஓட்டங்கள் என்ற இலக்கை
சிஎஸ்கே விரட்டியது. இரண்டாவது இன்னிங்ஸின் முதல் பந்தில் ஓட்டம் எடுக்காமல் ஆட்டமிழந்தார் சஞ்சு சாம்சன்.
பவர்பிளே முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 58 ஓட்டங்கள் எடுத்தது சிஎஸ்கே. ருதுராஜ்
கெய்க்வாட் 16, உர்வில் படேல் 0, மேத்யூ ஷார்ட் 24 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்த இன்னிங்ஸில் சிஎஸ்கே அணிக்காக சஞ்சு சாம்சன் உடன் மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக
மேத்யூ ஷார்ட் விளையாடினார்.
தொடர்ந்து சீரான இடைவெளியில்
சிஎஸ்கே வீரர்கள் விக்கெட்டை இழந்தனர். கார்த்திக் சர்மா 19, ஷிவம் துபே 47 (17 பந்துகள்),
அன்ஷுல் காம்போஜ் 19, பிரேவிஸ் 8, நூர் அகமது 1, ஸ்பென்சர் ஜான்சன் 0 ஓட்டங்கள் எடுத்தனர்.
13.4 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த சென்னை 140 ஓட்டங்கள் எடுத்தது.
இந்த தோல்வியின் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து சிஎஸ்கே அணி வெளியேறி
உள்ளது. இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய சிராஜ், ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
தொடர்ந்து மூன்றாவது
சீசனாக முதல் சுற்றோடு சிஎஸ்கே வெளியேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023 சீசனில்
சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பிறகு தொடர்ச்சியாக முதல் சுற்றோடு நடையை
கட்டி வருகிறது. நடப்பு ஐபிஎல் சீசனில் காயம் காரணமாக சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்கள்
இந்த சீசனை முழுமையாகவும், பாதியிலும் விலகினர். நேதன் எல்லிஸ், கலீல் அகமது, ஆயுஷ்
மாத்ரே, டோனி உள்ளிட்ட வீரர்கள் இந்த காய பட்டியலில் அடங்குவர்.
சாய் சுதர்சன் உடனடியாக
தனது ஆட்ட வேகத்தை அதிகரிக்க, ஜிடி அணி 10வது ஓவரில் 100 ரன்களை எட்டியது. மேலும்,
சாய் சுதர்சனும் கில்லும் இணைந்து 10வது முறையாக மூன்று இலக்க ஓட்டங்களைக் கடந்தனர்.
இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக 100-க்கும் மேற்பட்டஓட்டங்கள் பார்ட்னர்ஷிப்களை
அமைத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விராட் கோலி , ஏபி டி வில்லியர்ஸ் ஜோடியை சமப்படுத்தினர்.

No comments:
Post a Comment