ஈரோடு கிழக்கு தொகுதியின் உறுப்பினரான கே.வி.எஸ்.இளங்கோவன் மரணமானதால் பெப்ரவரி 05ம் திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்
தேர்தலில் ஆளும் கட்சியே வெற்றி பெறுவது என்பது எழுதப்படாத சட்டமாக
உள்ளது. ஆளும் கட்சியின் மீது வெறுப்பு இருக்கும் சில சந்தர்ப்பங்களில் எதிர்க்
கட்சி வெற்றி பெற்ற வரலாறும் உள்ளது.
இடைத்
தேர்தலில் ஆளும் கட்சியை எடை போட சந்தர்ப்பம் கிடைக்கும். கடந்த தேர்தலில் ஆளும் கட்சி
பெற்ற வாக்கு, சதவீதம் குறைவடைந்தால் எதிர்க்
கட்சிகள் சற்று உசாராகி விடும். தமிழகத்தின்
பிரதான எதிர்க் கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும்,தமிழகத்தின் பிரதான எதிர்க்
கட்சி என்ற நினைப்பில் உள்ள பாரதீய ஜனதாக் கட்சியும் ஈரோடு கிழக்கு
இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
தமிழக
சட்ட மன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு வருட காலமே இருப்பதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தை எடை பார்க்கும் சந்தர்ப்பம்
நழுவிவிட்டது. இடைத்தேர்தலைப் புறக்கணித்த எதிர்க்கட்சிகள்
ஈரோடு
கிழக்கு தொகுதியின் உறுப்பினரான கே.வி.எஸ்.இளங்கோவன் மரணமானதால் பெப்ரவரி 05ம்
திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ்
கட்சியின் வசம் இருந்த ஈரோடு தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் களம் இறங்க உள்ளது.தமிழக
சட்ட சபைத் தேர்தலுக்கு இன்னமும் ஒரு வருடமே
உள்ளநிலையில் அங்கு போட்டியிடுவதை காங்கிரஸ் தவிர்த்துள்ளது.
தமிழக மக்களிடம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு
இருக்கும் செல்வாக்கை ஈரோடு இடைத் தேர்தல் வெளிப்படுத்த உள்ளது. அரசாங்கத்தின் எதிர்ப்பு
வாக்குகளை அருவடை செய்யும் வாய்ப்பை எதிர்க் கட்சிகள் இழந்துள்ளன.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதீய ஜனதாக் கட்சி, விஜயகாந்தின் கட்சி ஆகியன தேர்தலிப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட விரும்பவில்லை. 2026 என்ற தொலைதூர இலக்குடன் விஜய் அமைதியாக இருக்கிறார்.
வி.சி.சந்திரகுமாரை
வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. நாம் தமிழர் தேர்தலில் போட்டியிடப்
போவதாக அறிவித்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்ப்பு வாக்குகள் அனைத்தையும்
அறுவடை செய்யும் தகுதி சீமானுக்கு இல்லை. தனது கட்சி வேட்பாளரை பொது வேட்பாளராக்க சீமான்
முயற்சி செய்கிறார். எடப்பாடி,ராமதாஸ்,அண்ணாமலை ஆகியோர் சீமானுக்கு வெளிப்படையாக ஆதரவு
தெரிவிக்கமாட்டார்கள்.
அண்ணா
பல்கலைகழக விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்களில் ஸ்டாலினையும் திராவிட முன்னேற்றக் கழக
அரசையும் கடுமையாக விமர்சனம்ச் எய்யும் அண்ணாமலை தேர்தல் என்றால் பம்முவது வழமையான
செய்திதான்.திராவிட முன்னேற்றக் கழக அரசை அகற்றும் வரை செருப்பு அணியமாட்டேன் எனச்
சபதம் செய்த அண்ணாமலை அதற்குரிய சந்தர்ப்பம் இருக்குமா என ஆராயும் சந்தர்ப்பத்தைத்
தவற விட்டுள்ளார்.
அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகம் முதலில் தேர்தல்
புறக்கணிப்பை அறிவித்தது. இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் கூட கொங்கு மண்டலத்தில்
தங்களுக்குப் பலம் உள்ளதாக கூறி வரும் நிலையில்
அங்கு நடைபெறும் இடைத் தேர்தலை புறக்கணித்தது ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. இப்படித்தான்
விக்கிரவாண்டி இடைத் தேர்தலையும் அதிமுக புறக்கணித்திருந்தது.
அதிமுகவைத் தொடர்ந்து தேமுதிகவும் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்தது. விக்கிரவாண்டி தேர்தலையும் தேமுதிக புறக்கணித்திருந்தது.
அதேசமயம், பாஜக இத்தேர்தலில் போட்டியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. திமுகவுடன் போட்டியிட்டு 2வது இடத்தைப் பிடித்து தனது நிலையை ஸ்திரப்படுத்த முயலும் என்றும் பரவலாக பேசப்பட்டது. ஆனால் பாஜகவும் தற்போது தேர்தல் புறக்கணிப்பை அறிவித்துள்ளது. தமிழகத்தின் எதிர்க் கட்சி எனக்கூறிக்கொள்ளும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு தமிழகத்தில் தேர்தல் என்றால் அச்சம் ஏற்படுவது வழமையே.
கடந்த
நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியைப் பார்த்து வருகிறோம்.
எல்லா துறைகளிலும் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள்,
முதியவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பின்மை என, தமிழகம்
ஒரு இருண்ட காலத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது எனக்கூறும் அண்ணாமலை அது உண்மை எகக்கூறும்
வாய்ப்பைத்தவறவிட்டுள்ளார்.
ஜனநாயகக் கூட்டணியும் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளதால்
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவும், நாம் தமிழர் கட்சியும் மட்டுமே பிரதான கட்சிகளாக
போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. திமுகவுக்கு நாம் தமிழர் கட்சி நெருக்கடி தருமா
என்பது சந்தேகம்தான். அதேசமயம், பெரியாரை கடுமையாக சீமான் விமர்சித்து வரும் சூழலில்
அவர் பிறந்த ஈரோட்டில் நடைபெறும் இடைத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற நாம் தமிழர்
கட்சி முயலக் கூடும்.
பெரிய
கட்சிகள் அனைத்தும் தேர்தலைப் புறக்கணித்து விட்டதால் ஈரோடு கிழக்கு தொகுதியிலும்,
விக்கிரவாண்டி இடைத் தேர்தலைப் போல மிகப் பெரிய வெற்றியை திமுக பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், பிரதான கட்சிகள் இப்படி தேர்தலை புறக்கணிப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்ற
கருத்தும் எழுந்துள்ளது.
ரமணி
19/1/25
No comments:
Post a Comment