கொல்கதாவில் நடைபெற்ற முதலாவது ஐபிஎல் போட்டியில் 7 விக்கெற்றால் பெங்களூர் வென்றது.
நாணயச்
சுழற்சியில் வெற்றி பெற பெங்களூர் பந்து வீசத்தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 8 விக்கெற்களை இழந்து 174 ஓட்டங்கள்
எடுத்தது.16.2 ஓவர்களில் 3 விக்கெற்களை இழந்த பெங்களூர் 177 ஓட்டங்கள் எடுத்தது.
ஆரம்பத்
துடுப்பாட்ட்ட வீரரான டீ கொக் 4 ஓட்டங்களில்
ஆட்டமிழந்தார். சுனில் நரேனுடன், கே.எல்.ராகுல்
ஜோடி சிறப்பாக விளையாடியது. இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 103 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தது.
10 ஓவர்களில்
1 விக்கெற்றைஇழந்த கொல்கத்தாவின் எனைய வீரர்கள் தடுமாறினார்கள். நரேன் 44 , ரகானே 56 , வெங்கடேஷ் ஐயரை 6 , ரிங்கு சிங் 4 , அண்ட்ரே ரசல் 4 , ரகுவன்சி 30 ஓட்டங்கள் எடுத்தனர். 20 ஓவர்களில் 8 விக்கெற்களை இழந்த கொல்கத்தா 174 ஓட்டங்கள் எடுத்தது.
ஜோஸ்
ஹேசல்வுட் 2, கருனால் பாண்டியா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அந்தப் போட்டியில் ரசிக் சலாம் வீசிய 8வது ஓவரின் 4வது பந்தை சுனில் நரேன் எதிர்கொண்டார். அந்தப் பந்து ஒயிடாக வீசப்பட்டதால் அதை அவர் அடிக்கவில்லை. அதைப் பார்த்ததும் களத்தில் இருந்த நடுவர் ஒயிட் கொடுத்தார். அடுத்த நொடியே பந்தை எதிர்கொண்ட வேகத்தில் சுனில் நரேன் பேட் அவரை அறியாமலேயே பின்னே சென்று ஸ்டம்ப்பில் பட்டு பெய்ல்ஸ் கீழே விழுந்தது. அதன் காரணமாக ஹிட் விக்கெட் முறையில் அவர் வெளியேறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த பந்து ஒயிட் என்று சில நொடிகள் முன்பாக நடுவர் அறிவித்து விட்டார். அதனால் அந்த பந்து காலாவதியானதன் காரணமாக சுனில் நரேன் ஹிட் விக்கெட் முறையில் தப்பி தொடர்ந்து விளையாடினார்.
பெங்களூர் அணியின் பில் சாட் 56, படிக்கல்10,ராஜ் படிதார் 34, ஓட்டங்கள் எடுத்தனர். 16.2 ஓவர்களில் 3 விக்கெற்களை இழந்த பெங்களூர் 177 ஓட்டங்கள் எடுத்தது. விராட் கோலி ஆட்டமிழக்காது 56 ஓட்டங்கள் எடுத்தார். கருணால் பாண்டியா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
No comments:
Post a Comment