Monday, April 24, 2023

தேசிய அரசுக்கு தயாராகும் ரணில்

உள்ளூராட்சி சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல்  ஆகிய பரபரப்புகளுக்கு மத்தியில் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  பேச்சு வார்த்தை நடத்துவதாக தகவல் கசிந்துள்ளது.

தேசிய அரசு தொடர்பாக மக்களால் விரட்டப்பட்ட மகிந்தவுடன்  ஜனாதிபதி ரணில்  பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக நம்பகரமான் செய்திகள் வெளீவந்துள்ளன. அந்தப் பேச்சு வார்த்தையில்  ஜனாதிபதி ரணிலும் ,மகிந்தவும் மட்டுமே கலந்துகொண்டார்களாம். பாதுகாப்பு, நிதி பொன்ற  முக்கிய  முக்கிய  பொறுப்புகளை ரணில் தன் வசம் வைத்திருப்பார். முக்கியமான சில அமைச்சுகள் மொட்டு  கட்சிக்கு வழங்கபப்டும் எனத் தெரிகிறது.

சஜித்தின் கட்சியில் இருந்து பல  முக்கியச்தர்கள் தேசிய அரசில் இணையக் காத்திருக்கிறார்கள்.  அவர்களுக்கு தேவையானது அமைச்சுப் பதவிகள்தான். ஏப்ரல் 25 ஆம் திகதி  தேசிய அரசாங்கம் அமைக்கும் யோசனையை ஜனாதிபதி  பாராளுமன்றத்தில் அறிவிப்பார் என  ஊடகங்களில் செய்திகள் வெளிஆகை உள்ளன.

சுதந்திர மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் ஊடகவிலளாரர் சந்திப்பின்  போது தெரிவித்தார்.

மக்களின் பார்வையில் சட்டபூர்வமான முத்திரையைப் பெறுவதற்காக தேசிய அரசாங்கமொன்றை அமைக்க அரசாங்கம் மற்றுமொரு முயற்சியை ஆரம்பித்துள்ளதாக   அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் ஒப்பந்தம், புதிய மத்திய வங்கிச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற பல முக்கிய விடயங்கள் ஏப்ரல் 25ஆம் திகதிக்கு பின்னர் பாராளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்ட ஹேரத், இவை நாட்டின் அரசியலை வேறு பாதையில் இட்டுச் செல்லும் என்றும் கூறினார்.

“இந்த அரசாங்கத்திற்கு எந்த ஆணையும் இல்லை மற்றும் நியாயப்படுத்த முடியாத வகையில் உருவாக்கப்பட்டது. அரசாங்கம் தன்னிச்சையான முறையில் செயல்படுகிறது, ஏப்ரல் 25, நாட்டு மக்களுக்கு எதிரான அதன் சர்வாதிகார நடவடிக்கைகளின் தொடக்கத்தைக் குறிக்கும், ”என்று அவர் கூறினார். அவரைப் பொறுத்தவரை, அரசாங்கம் இப்போது தனது தன்னிச்சையான செயல்களை நியாயப்படுத்தவும் சட்டபூர்வமான முத்திரையைப் பெறவும் ஒரு தேசிய அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கிறது.  

ரணில் விக்கிரமசிங்கவுக்கு தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிப்பதன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கு எவரேனும் நம்பினால், அவர்கள் நாட்டு மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு அங்கீகாரம் அளித்து அவற்றை நியாயப்படுத்துவதாக  அவர் தெரிவித்துள்ளார்.

 மகிந்தவைப் பிரதமராக்க வேண்டும் என மொட்டுக் கட்சியினர் விரும்புகின்றனர். அதேவேளை, பஷில் பிரதமராக வேண்டும் என்ற  கோரிக்கையும் விடப்பட்டுள்ளது.  மகிந்த  குடும்பத்தில் இருந்து எவரும்  முக்கிய   பொறுப்பை ஏற்றால்  அரசியல் கள நிலை  சூடாகும்.

விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் கீழ் இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் ஒப்பந்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. இந்த விவாதம் ஏப்ரல் 26 முதல் 28 வரை நடைபெற உள்ளது. அதர்கு முன்னதாக தேசிய அரசாங்கத்தை அமைக்கும் நோக்கம்  இருப்பதற்கான சாத்தியப்பாடு எவையும்  இல்லை,

தேசிய அரசாங்கம் என்பது எப்படி இருக்கப் போகிறது என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. ஆனால், தேசிய அரசில் சேரும் அரசியல்வாதிகள்  முக்கியமான அமைச்சுப் பொறுப்புகளைக்  கோருவார்கள். தேசிய அரசு என்பது நாட்டை    முன்னேற்றுவதாக அமையாது. விரும்பிய அமைச்சுப் பதவியை ஒருவர்  பெற வகை செய்யும்  வழிமுறையாகும்.

நல்லிணக்க அரசாங்கம் என்ன செய்தது என்பதை  குடிமக்கள் எவரும்  மறக்கவில்லை. ஜனாதிபதி தன் பதவியைப் பாதுகாபதற்காக அமைக்கப்படும் தேசிய அரசு சில வேளை எதிர் மறையாகவும்  மாறிவிடலாம்.


No comments: