Monday, October 22, 2012

தடம்மாறிய‌தமிழ்ப்படங்கள் 41



காதலனும் காதலியும் ஒருவர் மீது ஒருவர் தொடாது தூரத்தே நின்று காதல் வசனம் பேசிய காட்சிகள் எல்லா ம் 1935 ஆம் ஆண்டு வெளியான மேனகா என்ற படத்தின் மூலம் முடிவுக்கு வந்தது. முத்தமழை, கற்பழிப்பு, காதல் காட்சிகளில் நெருக்கம் என்பனவற்றை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய மேனகா பல சர்ச்சைகளில் சிக்கியது.
டி.கே. சண்முகம் கே.டி. ருக்மணி, எம்.எஸ். விஜயாள் ஆகியோர் முத்தக் காட்சியிலும் கற்பழிப்புக் காட்சியிலும் நடிக்க மறுத்து விட்டனர். டைரக்டர் சாண் டோ ராஜா வின் வற்புறுத்தலினால் அக்காட்சிகள் மேனகா படத்தில் இடம்பெற்றன.
ஆசாரம் மிக்க பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர் டி.கே. பகவதி. அவருடைய மனைவி எம்.எஸ். விஜயாள். மனைவி மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். டி.கே. பகவதி மூத்த சகோதரிகள் இருவர் கிழித்த கோட்டைத் தாண்டமாட்டார் டி.கே. பகவதி கணவனை இழந்து வீட்டிலே இருக்கும்அக்காவுக்கு தம்பியும் மனைவியும் நெருங்கிப் பழகுவது பிடிக்கவில்லை. வக்கீலாக கடமையாற்றும் டி.கே.பகவதி நீதிமன்றத்துக்குச் சென்றபோது அக்காவும் வேறு இருவரும் சேர்ந்து 5000 ரூபாவுக்கு டி.கே. சண்முகத்துக்கு எம்.எஸ். விஜயாளை விற்று விடுகின்றனர்.
நீதிமன்றத்தால் திரும்பி வந்த டி.கே. பகவதியிடம் மனைவி நாடகக்காரருடன் ஓடி விட்டதாகப் பொய் கூறுகின்றனர். பணத்துக்கு வாங்கிய எம்.எஸ். விஜயாளைக் கற்பழிக்க முயற்சிக்கிறார் டி.கே. சண்முகம், டி.கே. சண்முகத்திடமிருந்து தப்பித்த விஜ யாள் தற்கொலை செய்ய முயற்சி செய்த போது டி.கே.சண்முகத்தின் மனைவி ருக்மணி காப்பாற்றுகிறார். மனைவியைப் பிரிந்த டி.கே. பகவதி பைத்தியமாக அலைந்து கார் விபத்தில் சிக்குகிறார். இதனை அறிந்த விஜயாள் நர்ஸ் வேஷத்தில் சென்று பணிவிடை செய்கிறார்.
சுய நினைவுக்குத் திரும்பிய டி.கே. பகவதி மனைவி உத்தமி என அறிகிறார். நடந்த தவறுகளுக்கு டி.கே. சண்முகம் மன்னிப்புக் கேட்கிறார். கதாநாயகி விஜயாள் மேனகா என்ற பாத்திரத்தில் நடித்ததனால் இப்படத்துக்கு மேனகா எனப் பெயர் குறிப்பிடப்பட்டது.
வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவலை டி.கே. சண்முகம் ச கோ தரர்கள் நாடகமாக நடித்தனர். எம்.கே. ராதாவின் தந்தை எம். கந்தசாமி நாடகத்தின் வசனத்தை எழுதினார். திருப்பூர் ஸ்ரீ சண்முகானந்தா டாக்கீஸ் கம்பனியின் சார்பில் எஸ்.கே. மொய்தீன்,சோமசுந்தரம், சேசவ லால் காளிதாஸ், சேட் ஆகியோர் தயாரித்தனர். ராஜா சாண்டோ இயக்கிய இப்படத்துக்கு டி.கே. முத்துசாமி இசை அமைத்தார்.
ஹிந்திப் படங்களில் நடித்த ராஜா சாண்டோ பம்பாயில் குடியிருந்தார். அங்குள்ள மூவி டோன் படக் கம்பனியில் நடிகராகவும் இயக்குனராகவும் பணியாற்றினார். அவர் மாதச் சம்பளத்துக்குப் பணியாற்றிய ரஞ்சித் மூவி டோன் படக் கம்பனியில் 30 நாட்களில் மேனகா படமாக்கப்பட்டது.
கணவனை இழந்த அக்காவாக டி.கே. சண்முகத்தின் அண்ணன் முத்துசாமி நடித்தார். இப்படத்தின் வேலைக்காரனின் மனைவியாக சுப்பையாவும் மகளாக திவாகரனும் நடித்தனர். இப்படத்தின் பின்னர் ஆண் வேடத்தில் பெண்களும், பெண் வேடத்தில் ஆண்களும் நடிப்பது அதிகமாகியது.
டி.கே. பசுபதி, டி.கே. சண்முகம், என்.எஸ். கிருஷ்ணன், டி.கே. சங்கரன், எஸ்.வி. சகஸ்ரநாமம், ராமசாமி கே.ஆர். ராமசாமி, டி.என். சிவதாணு ஆகியோர் இப்படத்தின் மூலம் தமிழ்த்திரை உலகுக்கு அறிமுகமானார்கள்.
எனது நாடக வாழ்க்கை என்ற புத்தகத்தில் டி.கே. சண்முகம் மேனகா படம் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார். நானும் ருக்மணியும் நடிக்க வேண்டிய காதல் காட்சியின் ஒத்திகைகையை நினைத்து என் மனம் வெட்கத்தால் குன்றியது. ஒரு கையால் ருக்மணியை அணைத்தபடி அவரின் வலது கையிலிருந்து தோள்வரை முத்தமிட வேண்டும். கூச்சத்தால் உயிரே போய்விடும் போலிருந்தது.
தப்பி ஓடும் விஜயாளைத் தூக்கிக் கொண்டு போய் கட்டிலில் கிடத்த வேண்டும் இப்படி ஒரு காட்சி எங்களது நாடகத்திலோ வடுவூரானின் நாவலிலோ இல்லை. டைரக்டர் ராஜாவின் கற்பனை.. இந்தக் காட்சி வேண்டாம் என்று நான் மறுத்தேன். விஜயாளும் இக்காட்சியை விரும்பவில்லை. ஐயாயிரம் ரூபா கொடுத்துவிட்டு தொட்டுத் தொந்தரவு பண்ணாமல் இருப்பானா என்று பதிலளித்த இயக்குனரின் வற்புறுத்தலினால் அக்காட்சியில் நடித்தேன்.

ரமணி
மித்திரன் 14/10/12

Friday, October 19, 2012

இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் மோடி


இந்திய காங்கிரஸ் கட்சிக்குக் குடைச்சல் கொடுக்கும் மாநிலங்களில் முதன்மையானது குஜராத் .உலகத்துக்கு மஹாத்மா காந்தியைத் தந்த குஜராத் மாநில முதல்வருக்கு உலகளாவிய எதிர்ப்பும் உள்ளது. டிசம்பர் மாதம் குஜராத்தின் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் இந்தியாவின் பார்வை குஜராத்தை நோக்கித் திரும்பியுள்ளது.
 மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, சோனியா, அத்வானி, சிதம்பரம் போன்ற இந்திய அரசியல் தலைவர்கள் உலகளாவிய ரீதியில் பிரபல்யமடைந்தாலும் குஜராத்துக்குச் சென்றால் அனைவரும் மோடியின் பின்னால் மறைந்து விடுவார்கள். குஜராத் சட்டமன்றத் தேர்தலை மோடி அட்டகாசமாக ஆரம்பித்துவிட்டார். மோடிக்கு இணையாக குஜராத்தில் பிரசாரம் செய்வதற்கு காங்கிரஸ் கட்சியில் யாருமே இல்லாமையால் காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரத்தை சோனியா காந்தி ஆரம்பித்து வைத்தார்.
குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று முதல்வராக வீற்றிருக்கும் மோடி தொடர்ந்தும் மூன்றாவது முறையாக வெற்றிபெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. குஜராத் மாநிலத்தை பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சி செய்தாலும் மோடி என்ற தனி மனிதனின் செல்வாக்கே அங்கு அரசாட்சி செய்கிறது. காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய இரண்டு தேசியக் கட்சிகளுக்கும் இல்லாத சக்தி மோடி என்ற இரண்டெழுத்துக்கு உள்ளது. மோடி என்ற தனி மனிதனை வீழ்த்த முடியாது காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் த டுமா றுகின்றன.
முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களினால் மோடி மீதும் குஜராத் மீதும் பாரிய கறை படித்துள்ளது. இந்தியாவின் மிகச் சிறந்த மாநிலமாக குஜராத்தை மோடி மாற்றியதால் இந்தியாவில் ஏனைய மாநிலங்களும் உலக நாடுகளும் குஜராத்தை நோக்கிப் படையெடுக்கின்றன.
இந்தியாவின் பிரதமராகும் தகுதி மோடிக்கு இருப்பதாக பலரும் கருதுகின்றனர். மோடியின் மீது காட்டமாக இருந்த அமெரிக்ககாவும். இங்கிலாந்தும் இறங்கி வந்துள்ளன. மோடிக்கு விஸா வழங்க மறுத்து வந்த அமெரிக்கா விஸா வழங்க முன்வந்துள்ளது. குஜராத்தின் வளர்ச்சியை ஆய்வு செய்வதற்வதற்காக ஒரு குழுவை அனுப்பிவைக்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் மோடி வெற்றி பெற்றால் அது புதியதொரு அத்தியாயத்துக்கு ஆரம்பமாக அமையும். பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதம வேட்பாளராக அத்வானி அறிவிக்கப்படுவார் என்றாலும் அவருக்குப் போட்டியாக மோடியின் பெயர் பிரேரிக்கப்படலாம். வாஜ்பாய்க்குப் பின்னர் பாரதீய ஜனதாக் கட்சியைப் பொறுப்பேற்ற‌ அத்வானியால் கட்சியை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியவில்லை. மோடி தலைமையேற்றால் பாரதீய ஜனதாக கட்சி வெற்றி பெறும் என்று அக்கட்சியில் உள்ள சிலர் நம்புகின்றனர். மோடியின் செல்வாக்கினால் காங்கிரஸ் கட்சியைப் போன்றே பாரதீய ஜனதாக் கட்சியும் கலக்க மடைந்துள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தேர்தலின் போதும் சட்டமன்றத்தேர்தலின் போதும் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்வதுண்டு. ஆனால் குஜராத்மாநிலத்தில் மோடியின் தனிப்பட்ட செல்வாக்குக் காரணமாக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் முழு மூச்சுடன் பிரசாரம் செய்வதில்லை. கட்சித் தலைவர் தான் தமது மாநிலத்துக்கு வந்து தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும் என்றே மாநிலக் கட்சித் தலைவர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் குஜராத்தின் நிலைமை தலைகீழானது. மோடியின் செல்வாக்கு அங்கு ஏனையவர்களின் செல்வாக்கை மழுங்கடித்து விடும்.
குஜராத்தில் மோடி அசைக்க முடியாத செல்வாக்குடன் திகழ்கிறார். மோடிக்கு இணையான ஒரு தலைவர் அங்கு இல்லை. மோடி வளர்ந்ததைப் போன்று பாரதீய ஜனதாக் கட்சியோ அல்லது குஜராத்தில் உள்ள பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்களோ வளரவில்லை. குஜராத் மாநிலத்தில் இருந்து தேசிய அரசியலுக்கு மோடி நகர்ந்தால் குஜராத்தில் பாரதீய ஜனதாக் கட்சியை வழி நடத்தக்கூடிய தலைவர்கள் யாரும் இல்லை. 

இந்தியப் பிரதமராகும் தகுதி ராகுல் காந்திக்கு இருக்கிறது என இந்தியக் காங்கிரஸ் கட்சியினர் நம்புகின்றனர். ராகுலை முன்னிறுத்தி இந்தியப் பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என ஒரு சாரார் விரும்புகின்றனர். வட மாநிலத் தேர்தல்களில் ராகுலின் யுக்தி தோல்வியடைந்ததனால் அவரை முன்னிறுத்தக் கூடாது என்ற கருத்தும் நிலவுகிறது.
இந்தியப் பிரதமராகும் ஆசை அத்வானியிடம் நிறையவே உண்டு. அவரதுதுரதிர்ஷ்டம் வெற்றிக் கனி அவரது பக்கம் விழவில்லை.
காங்கிரஸ் கட்சியுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் முலாயம் சிங், மாயாவதி ஆகிய இருவருக்கும் இந்தியப் பிரதமர் மீது கண் உள்ளது. தமிழக அமைச்சர் ஜெயலலிதாவும் பிரதமர் பதவியைக் குறிவைத்துள்ளார். இந்தியப் பிரதமராகும் ஆசையில் பலரும் உள்ளதால் பாரதீய ஜனதாக் கட்சி மோடியைக் களமிறங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம் மோடிக்கு இணையான‌ அரசியல் தலைவர் யாரும் இல்லை
மெட்ரோநியூஸ் 19/10/12

Monday, October 15, 2012

திரைக்குவராதசங்கதி 44


இயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர்,இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது.படிப்பைமுடித்துவிட்டுபொறியியலாளராவேண்டியசெல்வராகவன்சினிமாதான்வாழ்க்கைஎனமுடிவெடுத்ததால்ஒருவருடமாகவீட்டிலேயே இருந்தார். இயக்குந ராகும் ஆசையில்யாரிடமாவதுஉதவியாளராகச்சேரலாம் என்றுசென்றபோதுஅங்கேஅவரைப்போல்ஆர்வமுள்ளபலர்காத்துநின்றனர்.இயக்குநர்அல்லதுதயாரிப்பாளரைக்கண்டுதனதுவேண்டுகோளைவிடுத்தால்ஆறுமாதம்கழித்துவாஎன்றபதிலேகிடைத்தது.சினிமாஎன்றஆசையால்செல்வராகவன்அலைக்கழிந்தபோதுஅவர்பட்டஅவமானங்கள்ஏராளம்.கவலையினால்தொடர்ந்துஇரண்டுமூன்றுநாட்கள்சாப்பிடாம‌ல் இருந்தார். தனது கவலையைஆண்டவனிடம்முறையிட்டார்.செல்வராகவனின்சினிமா ஆர்வத்தைக்கேட்டஅவரதுதகப்பன்ஒருநாள்நான்தயாரிக்கிறேன்.கதையைக்கூறுஎன்றார்செல்வராகவன்கூறியகதையைக்கேட்டஅவர்அசந்துவிட்டார்.அன்றுபிரபலமானஹீரோ ஒருவரிடம்செல்வராகவன்கதைகூறநேரம்கேட்டிருந்தார்.அந்தப்பிரபலமானஹீரோவுக் குசெல்வராகவன்கூறியகதைபிடித்துவிட்டது.கட்டிப்பிடித்துசந்தோசப்பட்டஹீரோஇந்த க்தையைஎனக்குகொடுஎல்லாவற்øறயும்நான்பார்க்கிறேன்.நீதான்இயக்குநர்என்றார்.மு ம் பைஅழகியைஹீரோயினாகஒப்பந்தம்செய்யும்படிஹீரோகூறினார்.
   செல்வராகவன்மும்பைசென்றுஹீரோகூறியஅழகியிடம்கால்ஷீட்கேட்டார்.அந்தஅழகிருதொகையைக்கூறிதருவதாகஇருந்தால்மேற்கொண்டுபேசலாம்என்றார்.செல்வராகவனின்தலைசுற்றியது.மொத்தபட்ஜெட்டையேஹீரோயின்கேட்டதால்அங்கிருந்தபடியேஹீரோவுடன்தொடர்புகொண்டுநிலைமையைக்கூறினார்.அவர்மும்பையில்புதுமுகம்ஒ ன்றைப்பார்க்கும்படிகூறினார்.மும்பையில்உள்ளஅழகிகளின்புகைப்படங்களுடன்சென்னை திரும்பிய செல்வ ராகவன்அந்தப் படங்களை ஹீரோ விடம்கொடுத்து ஹீரோ யினைசெலக்ட்பண்ணுமாறுகூறினார்.ஹீரோவுக்குமும்பைஅழகிகள்யாரையும்பிடிக்கவில்லை. ஆறு மாதம்செல்வராகவனை அலைக்கழித்துவிட்டு இந்தக்கதையை உங்களால் செய்யமுடியாதுஎனக்கூறினார்.தமிழ்த்திரைஉலகின்உச்சத்துக்குப்போகலாம்என்றகனவில்இருந்த செல்வராகவன்நொறுங்கிப் போனார்.
   காதல்கொண்டேன்கதையைமுரளியிடம்கூறினார்செல்வராகவன்.கதையைக்கேட்டமுர‌ளி செல்வராகவனைத் தட்டிக்கொடுத்தார். விக்கிர‌மிடம்கூறியபோதுஅவர்தனக்குதெரிந்த தயாரிப்பாளர்களிடம்செல்வராகவனைஅறிமுகப்படுத்தினார்.செல்வராகவனின்கதையைக்கேட்டதயாரிப்பாளர்கள்கதைநன்றாகஇருக்கிறதுஎனப்பாராட்டினார்கள்.ஆனால்செல்ராவனைநம்பிபணம்செலவிடத்தயங்கினார்கள்.செல்வராகவனின்தகப்பன்இயக்கியதுள்ளுவதோஇளமைஎன்றபடம்பாதிக்குமேல்வளர்ந்துஇடையில்நின்றுவிட்டது.ஒருநாள்அப்படத்தைஅவர்செல்வராககவனுக்குப்போட்டுக்காட்டினார்.கதைஒன்றுமேவிளங்கவில்லைஎன்றார்செல்வராகவன்.இதைநீயேசெய்என்றுதகப்பன்கூறியதும்அதைஅப்படியேவைத்துவிட்டுபுதிதாகப்படமெடுக்கவேண்டும்என்றார்.தகப்பன்அனுமதிகொடுத்ததும்துள்ளுதோஇளமையில்நடித்தகதாநாயகியிடம்கால்ஷீட்கேட்டார்.அவர்தெலுங்கில்பிஸிஎன்றும்இதைபோன்றஉப்புச்சப்பில்லாத படங்களில்நடிக்க மாட்டார் என்றும் அவர‌து உதவியாளர் கூறினார்.அன்றையபொருளாதாரச்சிக்கலில்பிரபலமானநாயகிஎவரையும்ஒப்பந்தம்செய்யமுடியாதநிலைஇருந்தது.ஷெரீனைஅழைத்துதுள்ளுவதோஇளமைஎன்றபடத்தைஎடுத்துமுடித்தார்செல்வராகவன்.துள்ளுவதோஇளமைதந்தவெற்றிசெல்வராகவனுக்குஉற்சாகத்தைக்கொடுத்தது.தமிழ்த்திரைஉலகம்செல்வராகவனைநம்பத்தயாரானது.அதன்பின்னர்தனதுகனவுப்படமானகாதல்கொண்டேன்என்றபடத்தைஇயக்கினார்.பட்டிதொட்டிஎங்கும்அப்படம்பிரபல்யமானது.அதன்பின்னர்செல்வராகவனைத்தேடிதயாரிப்பாளர்கள்செல்லத்தொடங்கினர்.
ரமணி
மித்திரன்21/02/2007
104

Wednesday, October 3, 2012

போனால்போகட்டும்.....



ஆழமான இரவின் அமைதியைக்கிழித்துக்கொண்டுஅந்த அவலக்குரல் கேட்டது. அண்டை அயலில் உள்ளவர்கள் சத்தம் வந்தவீட்டை நோக்கி ஓடினார்கள்.ஓடும்போது என்னநடந்ததுஎன ஒருவரை ஒருவர் வினவினார்கள்.போய்ப்பார்த்தால் தெரியும்தானே எனச்சொல்லிக்கொண்டு ஒரு முதியவர்குடுகுடுவென ஓடினார்.

  "அண்ணைஅழாஅதேங்கோ .சட்டம்பியார் என்ன நடந்ததெனச் சொல்லுங்கோ".

   வந்தவர்களின் வார்த்தையைக்கேளாமல் வேலுச்சட்டம்பியார் தலையில் அடித்துக்குழறினார்.வேலுச்சட்டம்பியார் என எல்லோராலும் அழைக்கப்படும் வேலுப்பிள்ளை வேலையிலிருந்து இளைப்பாறிவிட்டார்.அவ‌ருக்குஎழுப‌து வ‌ய‌தென்றால் யாரும் ந‌ம்ப‌மாட்டார்க‌ள்.

   ப‌னிஎன்றாலும் ம‌ழை என்றாலும் பொருட்ப‌டுத்தாம‌ல் அதிகாலை நான்கும‌ணிக்குத்தோட்ட‌த்துக்குப்போய்விடுவார்.உச்சிவெயிலையும் பொருட்ப‌டுத்தாம‌ல் தோட்ட‌த்தில் நிற்பார்.

   இர‌வு ஒன்ப‌து ம‌ணிக்கு சைக்கிளில் மிசினைவைத்துக்கொண்டு வ‌ந்தவ‌ர் முற்ற‌த்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு கிண‌ற்ற‌டியில் முக‌ம் கைகால் க‌ழுவிக்கொண்டு வ‌ந்துபார்த்த‌போது சைக்கிலுட‌ன் மிசினும் மாய‌மாக‌ ம‌றைந்துவிட்ட‌து.   


  தோட்டம்,வீட்டிலுள்ள மா, பலா, வாழ போன்ற‌வ‌ற்றுக்கு நீர் இறைப்ப‌து ஊரில் மிசின் இல்லாத‌வர்க‌ளின் தோட்ட‌ங்க‌ளுக்கு வாட‌கைக்கு விட்டுச்ச‌ம்பாதிப்ப‌து போன்ற‌ வேலைக‌ளைச்செய்துவ‌ந்த‌  மிசின்மிசினை இழ‌ந்த‌ ச‌ட்ட‌ம்பியார் தனது கையை இழந்தது போலவும்,தோட்டத்துக்கு மிசினைக்கொண்டுபோவது, காய் கறிவகைகளைக் கரவெட்டியிலிருந்து நெல்லியடிச்சந்தைக்குக் கொண்டுபோவது, நெல்லியடியிலிருந்து உரம்,பசளை போன்றவற்றை வீட்டுக்குக்கொண்டுசெல்லும் சைக்கிளை இழந்ததால் தனது காலை இழந்ததுபோல் தவித்தார்.

  " பாவம் சட்டம்பியார் கனவிலைகூடத்தீங்கு நினையாதவருக்கு ஆரோ ஒருதரித்திரம்பிடிச்சது இப்பிடிச்செய்துபோட்டுது. கடவுள் எடுத்தாளுக்குப்பாடம்படிப்பிப்பார். அவர் நல்ல பக்திமான். கடவுள் கைவிடார்."என ஒருசிலர் அனுதாபப்பட்டனர்.

  “  உந்தாளுக்கேன் தோட்ட‌ம். ஆருக்காக‌ உப்பிடி எல்லாம் ச‌ம்பாதிக்குது.பெண்டில்.பிள்ளை இல்லாதாள் கிடைக்கிற‌பென்ச‌னிலை கால‌த்தைக் கொண்டுபோக‌மாட்டுதே? நாளைக்கு ஆரோ ஒருத்த‌ன் தானே கொள்ளிவைச்சிட்டு சுருட்டிக்கொண்டு போக‌ப்போறான்."

  அவ‌ரின் விடாமுய‌ற்சி முன்னேற்ற‌ம் ஆகிய‌வ‌ற்றைக் காண‌ச்ச‌கிக்காத‌வ‌ர்க‌ள் புல‌ம்பினார்க‌ள். மூன்றுத‌ர‌ம் த‌லையில் குட்டி  "எல்லாம் உன‌க்குத்தெரியும்" என‌ மேலே பார்த்துக் கும்பிட்டார் வேலுச்ச‌ட்ட‌ம்பியார்.


   வேலுச்ச‌ட்ட‌ம்பியாரின் வீட்டின் முன்னால் நின்ற‌  ஜீப்பிலிருந்து பொலிஸ் இன்ஸ்பெக்ட‌ர் இற‌ங்கினார். அவ‌ரைத்தொட‌ர்ந்து வேலுச்ச‌ட்ட‌ம்பியாரும் சில‌ பொலிஸ்கார‌ர்க‌ளும் இற‌ங்கினார்க‌ள்.சைக்கிள் நின்ற‌ இட‌ம், கிண‌ற்ற‌டி  எல்லாவ‌ற்றையும் சுற்றிப்பார்த்த‌ இன்ஸ்பெக்ட‌ர் "மாஸ்ர‌ர் ச‌ந்தேக‌மிருந்தால் ஆளைச்சொல்லுங்கோ" என்றார்.

  "ஒருத‌ரிலும் என‌க்குச்ச‌ந்தேக‌மில்லை" என்று வேலுச்ச‌ட்ட‌ம்பியார் சொன்னார். யார் மீதாவ‌து ச‌ந்தேக‌மிருந்தால் உட‌ன‌டியாக‌ வ‌ந்து சொல்ல‌வேண்டும் என‌ இன்ஸ்பெக்ட‌ர் கூறினார். பொலிஸ்ஜீப் போன‌தும் சுற்றி நின்று புதின‌ம் பார்த்த‌வ‌ர்க‌ள் க‌லைய‌த்தொட‌ங்கின‌ர்.    

    “மாஸ்ர‌ர் என‌க்கெண்டால் உவ‌ன் யோகுவிலைதான் ச‌ந்தேகம்.அவ‌ன் போக‌வும் வ‌ர‌வும் உங்க‌டை வீட்டைத்தான் பாக்கிறான்.பொலிஸ் வ‌ந்த‌ உட‌னை வெறிக்கிட்டுக்கொண்டுபோனான் .உட‌னை போய் அவ‌னைப்பிடிச்சு நாலு இடி போட்டுக்கேக்க‌ச்சொல்லுங்கோ" என‌த்தாமு கூறிய‌ வார்த்தைக‌ளைக்கேட்ட‌ வேலுச்ச‌ட்ட‌ம்பியார் சிரித்தார்.

 " தாமு, என்னுடைய‌ சைக்கிள்.மிசின் க‌ள‌வுபோனது எல்லாம்  இறைவ‌னுக்குத்தெரியும். அவ‌னின்றி ஓர‌ணுவும் அசையாது க‌ண்டியோ. அது போறதையும் அவ‌ன் பாத்திருப்பான் தாற‌ நேர‌ம் திருப்பித்தருவான்.க‌ளவு போன‌தை நான் காணேல்லை.உன்ரை சொல்‌லைக்கேட்டு அவ‌னை மாட்டி விட‌ விரும்பேல்லை."


   த‌ன‌து ம‌க‌ளைச்சுற்றிவ‌ரும் யோகுவைக்க‌ண்டிக்க‌ப்ப‌ய‌ந்த‌ தாமு, வேலுச்ச‌ட்ட‌ம்பியாரிட‌ம்யோகுவைப்ப‌ற்றிக்கூடாம‌ல் சொல்லி அவ‌னைப்பொலிஸில் மாட்டிவைத்து அடி குடுப்பிக்க‌வேண்டும் என‌ எண்ணிக்கொண்டுவ‌ந்தார்.அவ‌ரின் எண்ண‌ம் நிறைவேறாத‌ப‌டியால் வேண்டாவெறுப்பாக‌ விடைபெற்றார்.

    ப‌ருத்தித்துறையில் சைக்கிள் க‌ள‌வெடுக்கும்போது பிடிப‌ட்ட‌ ஒருவ‌னின் மூல‌ம் மூன்று சைக்கிள்க‌ள் மீட்க‌ப்ப‌ட்ட‌தாக‌ எல்லோரும் பேசிக்கொண்டார்க‌ள். வேலுச்ச‌ட்ட‌ம்பியாரின் காதுக்கும் இது எட்டிய‌து.அவ‌ர் உட‌னே ப‌ருத்தித்துறைப்பொலிஸ்நிலைய‌த்துக்குச்சென்று சைக்கிள்க‌ளைப்பார்த்தார். அதிலே த‌ன‌து சைக்கிளும் இருக்கும் என்ற‌ ந‌ம்பிக்கையுட‌ன் சென்ற‌வ‌ர் ஏமாற்ற‌ம‌டைந்தார்.

   "மாஸ்ர‌ர் க‌வ‌லைப்ப‌டாதேங்கோ.உங்க‌டை சைக்கிலும் கெதியிலை கிடைக்கும். ப‌ல‌வ‌ருச‌ங்க‌ளூக்கு முந்திக‌ள‌வுபோன‌ சைக்கிலெல்லாம் கிடைச்சிருக்கு.உங்க‌டை சைக்கிலும் கெதியாக்கிடைக்கும்." என‌ ஆறுத‌ல் சொல்லி அனுப்பினார். இன்ஸ்பெக்ட‌ர்.


   நீண்ட‌நாட்க‌ளின்பின்தொண்ட‌மானாறு செல்வ‌ச்ச‌ன்ன‌திக்குச்சென்ற‌ வேலுச்ச‌ட்ட‌ம்பியார் விபூதியை அள்ளி "சிவ‌ சிவா" என‌ச்சொல்லிய‌ப‌டி நெற்றியிலே பூசினார். த‌லையிலே மூன்றுமுறைகுட்டி விநாய‌க‌னை வ‌ண‌ங்கினார்.

   முருக‌னின் முன்னால் நின்று இர‌ண்டுகைளையும் த‌லைக்கு மேலே கூப்பிய‌ப‌டி," அப்ப‌னேமுருகா ஒப்பிலா ம‌ணியே க‌டைசியாஉன்ன‌ட்ட‌த்தான் சைக்கிளிலை வ‌ந்த‌னான். உன‌னைக்கும்பிட்ட‌ப‌ல‌ன் அண்டைக்கே சைக்கிள் க‌ள‌வு போட்டுது.க‌ள்ள‌னை உன‌க்குத்தெரிஞ்சிருக்கும். உன்ன‌ட்டை வாறேல்லை எண்டுதான் நினைச்சிருந்த‌னான். எண்டாலும் உன்னை ம‌ற‌க்க‌முடிய‌வில்லைய‌டா அப்ப‌னே"

  "ந‌ட‌ந்துவந்து உண்ன‌ட்டை முற‌யிட‌வேணும் எண‌டுதான் இண்டைக்கு ந‌ட‌ந்துவ‌ந்த‌னான்.நான் சொல்லித்தான் க‌ள‌வி போன‌து உன‌க்குத்தெரிய‌வேணுமெண்ட‌தில்லை. எண்டாலும் சொல்லுற‌ன்.நான் சொல்லுற‌தையும் கேட்டுக்கொள்." என‌ வாய்விட்டு அழுது த‌ன‌து குறைக‌ளை வெளிப்படுத்தினார்.

   இல‌ங்கையின் எந்த‌ப்ப‌குதியில் சைக்கிள் திருட‌ன் அக‌ப்ப‌ட்டு சைக்கிள்க‌ள் கைப்ப‌ற்ற‌ப்ப‌ட்ட‌ன‌ என்று ப‌த்திரிகையில் செய்தி வ‌ந்தால் உட‌ன‌டியாக‌ப்ப‌ருத்தித்த்துறைப்பொலிஸ் நிலைய‌த்துக்குப்போய் விசாரிப்பார்.வேலுச்ச‌ட்ட‌ம்பியாரின் சைக்கிளும் மிசினும் க‌ள‌வுபோன‌தைப்ப‌ல‌ர் ம‌ற‌ந்துவிட்ட‌ன‌ர். ஒரு சில‌ர் ம‌ட்டும் அவ‌ரைக்க‌ண்டால் ம‌ட்டும் அனுதாப‌ம் காட்டுவார்க‌ள்.


   வேலுச்ச‌ட்ட‌ம்பியார் பொலிஸ்நிலைய‌த்திலிருந்துவ‌ந்த‌தும் அவ‌ரின் வீட்டைச்ச‌ன‌ம் மொய்த்த‌து. நான்கு வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் க‌ள‌வுபோன‌ சைக்கிள் கிடைத்த‌தை அறிய‌ யாருக்குத்தான் ஆவ‌ல் இராது.பொலிஸ் நிலைய‌ம் சென்றுவ‌ந்த‌ வேலுச்ச‌ட்ட‌ம்பியார் விப‌ர‌மாக‌ விள‌க்கிக்கூறினார்.


    "மாத்த‌றைப்பொலிஸார் ஒரு சைக்கிள்த்திருட‌னைப்பிடித்தார்க‌ள்.அவ‌ன்கொடுத்த‌ த‌க‌வ‌ல்க‌ளின்ப‌டி ப‌ல‌ சைக்கிள்க‌ள் மீட்க‌ப்ப‌ட்ட‌ன‌. அதிலே ஒன்று அவ‌ன் ப‌ருத்தித்துறையில் உள்ள‌ ஒருவ‌ரிட‌ம் வாங்கிய‌து. அந்த‌ச்ச‌யிக்கில் ந‌ம்ப‌ரை ப‌ருத்தித்துறைப்பொலிசுக்கு அறிவிச்சார்க‌ள் .அதுக‌ள‌வு போன‌சைக்கிள் எண்டு ப‌ருத்தித்துறைப்பொலிஸ் க‌ண்டுபிடிச்சுது. திங்க‌க்கிள‌மை சைக்கில் ப‌ருத்தித்துறைக்கு வ‌ரும்."

     வேலுச்ச‌ட்ட‌ம்பியாரின் அதிர்ஷ்ட‌த்திப்ப‌ற்றி எல்லோரும் விய‌ந்து க‌தைத்தார்க‌ள். வீட்டுக்குவ‌ந்த‌ எல்லோருக்கும் இனிப்புக்கொடுத்தார் ச‌ட்ட‌ம்பியார்.

  கோயில்க‌ள் எல்லாவ‌ற்றுக்கும் போய் அர்ச்ச‌னைசெய்து, நேர்த்திக்க‌ட‌ன்க‌ளை நிறைவேற்றினார் ச‌ட்ட‌ம்பியார்.திங்க‌ட்கிழ‌மை மிகுந்த‌ச‌ந்தோச‌த்துட‌ன் ப‌ருத்தித்துறைப்பொலிஸ் நிலைய‌த்துக்குப்போனார் வேலுச்ச‌ட்ட‌ம்பியார்.

   "மாஸ்ர‌ர் ம‌ன்னிச்சுக்கொள்ளுங்கோ சைக்கிள் இன்னும் வ‌ந்து சேர‌வில்லை.நாளைக்கு ஒருக்கா வ‌ந்து பாருங்கோ. இன்ஸ்பெக்ட‌ரின் வார்த்தையைக்கேட்ட‌ ச‌ட்ட‌ம்பியார் ம‌ன‌வ‌ருத்த‌த்துட‌ன் வெளியேறினார்."இன்றுபோய் நாளை வாராய் என்ற‌ப‌ட‌ல‌ம் ஒரு வார‌மாக‌த்தொட‌ர்ந்த‌து. வேலுச்ச‌ட்ட‌ம்பியாருக்கு அலுத்து விட்ட‌து. இன்றுதான் க‌டைசி இனிப்போவ‌தில்லை என‌நினைப்பார். க‌டைசியில் ம‌ன‌ம் கேளாம‌ல் போவார்.

  வேலுச்ச‌ட்ட‌ம்பியாரைக்க‌ண்ட‌ இன்ஸ்பெக்ட‌ர், "மாஸ்ர‌ர் நான் மிக‌வ்பும் ம‌ன‌வ‌ருத்த‌ப்ப‌டுற‌ன்.சைக்கிள் கிடைக்குமெண்டுதான் எதிர்பார்த்த‌னான். ஆனால் இப்பிடிக்கிடைக்குமெண்டு நினைக்க‌வில்லை." என‌க்கூறிய‌ இன்ஸ்பெக்ட‌ர் ஒரு அறையைக்காட்டினார்.

  அவ‌ர் காட்டிய‌ அறையினுள் நுழைந்த‌ ச‌ட்ட‌ம்பியார் திடுக்கிட்டார். த‌ன்னுடைய‌ சைக்கிள் தானா என‌ அறிவ‌த‌ற்காக‌ அருகிலே போய் இல‌க்க‌த்தைப்பார்த்தார். ச‌ரியான‌ இல‌க்க‌ம் தான். ம‌ன‌ம் கேளாம‌ல் ஒவ்வொரு இல‌க்க‌மாக‌ப்பார்த்தார். முழுச்சைக்கிளாக‌ப்போன‌து முக்கோண‌பிறேமாக‌த்திரும்பி வ‌ந்துள்ள‌து.

  இன்ஸ்பெக்ட‌ர் காட்டிய‌ இட‌த்தில் கையெழுத்திட்டுவிட்டு முக்கோண‌ப்பிறேமைத்தூக்கித்தோளிலே போட்டுக்கொண்டு பொலிஸ் ஸ்ரேச‌னைவிட்டு வெளீயேறினார் வேலுச்ச‌ட்ட‌ம்பியார்.

 நீர் இறைக்கும் இய‌ந்திர‌த்திப்ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல் ஒன்றும் தெரிய‌வில்லை.இதெண்டாலும் கிடைத்த‌தே என‌ வேலுச்ச‌ட்ட‌ம்பியார் நினைக்கையில்  "போனால் போக‌ட்டும் போடா இந்த‌ பூமியில் நிலையாய் வாழ்ந்த‌வ‌ர் யார‌டா......." என்ற‌பாட‌ல் வானொலியில் ஒலிப‌ர‌ப்பாகிய‌து.

  "ம‌னிதனே போறான்.இடையில் இது என்ன‌ பெரிசா? அட‌ச்சீ போனால் போக‌ட்டும்" என‌க்கூறிக்கொண்டு ந‌ட‌ந்தார் வேலுச்ச‌ட்ட‌ம்பியார்.


ஏ.ர‌விவ‌ர்மா
 ஈழ‌நாடு வார‌ம‌ல‌ர் ஞாயிற்றுக்கிழ‌மை
02/12/1979