Monday, July 13, 2009
ஜக்சனின் மரணத்தில்தொடரும் சர்ச்சை
பொப் இசையால் மக்களின் மனதைக் கவர்ந்த மைக்கல் ஜக்சன் மரணமாகி இரண்டு வாரங்கள் கழிந்து விட்டன. அவரது மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சியை விட அவரது மரணம் பற்றிய சர்ச்சை பரபரப்பான செய்தியானது மைக்கல் ஜக்சனின் மரணத்தால் துவண்ட ரசிர்களின் கண்ணீர் காய முன்னர் அவரைப்பற்றிய பல அவதூறான செய்திகள் வேகமாக வெளிவந்தன.
மைக்கல் ஜக்சன் கடன் தொல்லையால் கவலைப்பட்டார். போதைதரும் மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்ககொண்டார். அதுவே அவரது மரணத்துக்கு காரணம். ஊசிகளால் மைக்கல் ஜக்சனின் உடம்பு சல்லடையானது போன்ற செய்திகளால் மைக்கல் ஜக்சனின் ரசிகர்கள் துன்பக்கடலில் வீழ்ந்தனர்.
மூன்று பெண்களைத் திருமணம் செய்த மைக்கல் ஜக்சனின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கவில்லை. இரண்டு மனைவியரை விவõகரத்துச் செய்து விட்டார். மூன்றாவது மனைவி குழந்தை பெறுவதற்காக வாடகைத் தாயாக வந்ததும் முன்னாள் மனைவியில் ஒருவரான பெப்ரோ, மைக்கல் ஜக்சனுக்கு ஆண்மை இல்லையென்றும், தனக்கு பிறந்த பிள்ளைகளுக்கு மைக்கல் ஜக்சன் தகப்பன் இல்லையென்றும் தெரிவித்திருந்தார். அது மட்டுமல்ல மைக்கல் ஜக்சனின் குடும்ப வைத்தியர்தான் தனது குழந்தைகளின் தகப்பன் என்றும் கூறினார். இதேவேளை தனது பிள்ளைகளைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மைக்கல் ஜக்சன் உயிரோடு இருக்கும்போது கூறாமல் இப்போது இதை வெளியிடுவதற்கு உள்நோக்கம் இருக்க வேண்டும். மைக்கல் ஜக்சன் தனது பிள்ளைகள் மீது அளவு கடந்த பாசம் உடையவர். பிள்ளைகளுக்கு ஏராளமான சொத்தைக் கொடுத்திருப்பார் என்ற நோக்கத்தில்தான் பிள்ளைகளைத் தன்னிடம் ஒப்படைக்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது சொத்துக்களையும் பிள்ளைகளையும் பராமரிக்கும் பொறுப்பை தாயார் கத்தரீனுக்கு வழங்கி உள்ளார் மைக்கல் ஜக்சன். மைக்கல் ஜக்சன் இரண்டு உயில்கள் எழுதி இருப்பதாக öதிரிவிக்கப்படுகிறது. உயில் பற்றிய விவகாரம் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தப்பட்டிருப்பதனால் உண்மையான உயில் எது என்பதை அறிவதற்கு நீதிமன்ற தீர்ப்பு வெளிவரும் வரை காத்திருக்க வேண்டும்.
மைக்கல் ஜக்சன் மரணமான பின்னர் அவரது சொத்துக்களின் மதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மைக்கல் ஜக்சனின் பூத உடலைப் பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் குழுமி நிற்கின்றனர். மக்கள் அஞ்சலிக்காக பூதவுடல் வைப்பதற்கு தாமதமானது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது சந்தேகம் தெரிவிப்பவர்கள் மக்கள் பார்வைக்கு பூதவுடலை உடனடியாக வைக்காததையும் சந்தேகத்துடன் நோக்குகின்றனர்.
மைக்கல் ஜக்சனின் மரணம் அவரது ரசிகர்களை சோகக்கடலில் வீழ்த்தி உள்ளது. அவரது மரணத்தில் பல சந்தேகங்கள் தோன்றியுள்ளன. மருந்துகளும், உற்சாக ஊசிகளும் தான் மைக்கல் ஜக்சனின் மரணத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மைக்கல் ஜக்சன் வழமையாக பாவிக்கும் ஊசி மருத்துவ ஊசி. இதைவிட விஷ ஊசி போட்டு அவரை யாராவது கொலை செய்திருக்கலாம் என்று அவரது தகப்பன் நினைக்கிறார். மைக்கல் ஜக்சனின் மரணத்துக்கான காரணத்தை அறிவதற்காக இரண்டு முறை பிரேத பரிசோதனை நடைபெற்றது. இரண்டு முறை வைத்திய பரிசோதனை செய்தும் அவரது மரணத்துக்கான உண்மையான காரணத்தை அறிய முடியவில்லை. மைக்கல் ஜக்சனின் மரணத்துக்கான உண்மையான காரணத்தை அறிய இன்னமும் மூன்று வாரங்கள் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனது இறுதி ஊர்வலம் இப்படித்தான் நடக்க வேண்டும் தனது உடல் எங்கே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று மைக்கல் ஜக்சன் விரும்பியது போன்று நடைபெறவில்லை.
மைக்கல் ஜக்சனைப் பற்றிய சர்ச்சசைகள் நீண்டுகொண்டே இருக்கின்றன. இந்த சர்ச்சைகள் எல்லாம் ஒருசில நாட்களில் மறைந்து விடும். அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
வானதி
மெட்ரோநியூஸ் 10/07/09
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment