Thursday, August 27, 2009

திரைக்குவராதசங்கதி 14


பாசம் படத்தில் எம்.ஜி.ஆ.ரின் ஜோடியாக தமிழ்த்திரை உலகுக்கு அறிமுகமானவர் ஷீலா. சிறந்த நடிகையாகி கதாசிரியராகி, இயக்குனராக திரை உலகில் பவனிவந்தவர் ஷீலா. இயக்குநர் ராமண்ணாவினால் தமிழ்த்திரை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். ஷீலாவின் திரைஉலகப் பிரவேசத்துக்குக் காரணமானவர் எஸ்.எஸ். ஆர். என அழைக்கப்படும் எஸ்.எஸ். ராஜேந்திரன்.எஸ்.எஸ். ஆரின் நாடகக் குழு கோவையில் முகாமிட்டு நாடகங்களை நடத்தியது. எஸ்.எஸ். ஆரின் நாடகத்தைப்பார்ப்பதற்கு ஷீலா ஒருநாள் சென்றா.அன்றே அவர் எஸ்.எஸ். ஆரைக்கவர்ந்து விட்டார். பக்கவாதத்தால்ஷீலாவின் தகப்பன் படுக்கையில் வீழ்ந்ததைத் தொடர்ந்து படிப்பதற்காக ஷீலாஅவர் நாடகங்களில் நடித்தார். நாடகநடிகை என்ற ரீதியில் ஷீலா நாடகம்பார்க்கச் சென்றார்.ரசிகர்கள் எல்லோரும் நாடகத்தைப்பார்த்துக் கொண்டிருந்தனர். நடித்துக்கொண்டிருந்த எஸ்.எஸ். ஆரின்பார்வை எல்லாம் பார்வையாளர் பக்கத்தில்இருக்த‌ ஷீலாவின் மீது விழுந்தது.நடிகர்களுடன் சேர்ந்து தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தி ரசித்ததார் ஷீலா.நாடகம் முடிந்ததும் நடிகர்களைச் சந்
தித்து, வாழ்த்துத் தெரிவிக்க சென்றார்ஷீலா. ஷீலாவைக் கண்ட எஸ்.எஸ்.ஆர். அவரைப் பற்றி விசாரித்தார். தனதுகுடும்பத்தின் நிலையை ஷீலா கூறினார். ஷீலா கூறியவற்றைமிக அவதானமாகக் கேட்ட எஸ்.எஸ்.ஆர். அவரை சென்னைக்கு வரும்படிஅழைப்பு விடுத்தார். எஸ்.எஸ். ஆரின்வேண்டுகோளின்படி கோவையில்தங்கி இருந்த ஷீலா குடும்பத்துடன்சென்னைக்கு குடியேறினார்
.சென்னைக்குச் சென்றதும் எஸ்.எஸ்.ஆரைச் சென்று பார்த்தார் ஷீலா. கோவையில் வாக்களித்தபடி தனது நாடகக்கொம்பனியில் நடிப்பதற்கு சந்தர்ப்பம்கொடுத்தார் எஸ்.எஸ்.ஆர். நடிப்பில்ஆர்வமும் முகத்தில் உணர்ச்சிகளைவெளிப்படுத்தும் ஆற்றலும் கொண்டஷீலாவின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள்.பானை பிடித்தவள் பாக்கியசாலி என்ற
படத்தை வெளியிட்ட டி.எஸ். துரைராஜுக்குநண்பர் ஒருவர் ஷீலாவின் நடிப்பைப்பற்றி கூறினார். நண்பனின் சிபார்சினால் ஷீலாவைச் சந்தித்த டி.எஸ்.துரைராஜ் தனது அடுத்தபடத்தில் அவரை கதாநாயகியாக அறிமுகப்படுத்துவதாகவாக்குறுதி அளித்தார். ஷீலாவின்புகைப்படங்களை பத்திரிகைகளுக்குவழங்கிய டி.எஸ்.துரைராஜ் அவரைப்பற்றி பெரிதாக விளம்பரம் செய்தார்.பத்திரிகைகளுக்கு டி. எஸ்.துரைராஜால்கொடுக்கப்பட்ட படங்களை பார்த்தஇயக்குனர் ராமண்ணா தனது படத்தின்கதாநாயகியாக ஷீலா வை ஒப்பந்தம்செய்தார்.பாசம் படத்தில் எம்.ஜி.ஆரின்ஜோடியாகவும், அசோகனின்
தங்கையாகவும் நடித்தார். ஷீலா பாசம் படம் வளரும் போதே ஷீலாவின்நடிப்பை பலரும் பாராட்டத் தொடங்கிவிட்டனர்.கவியரசு கண்ணதாசன் தனது படத்தில்நடிப்பதற்கு ஷீலாவை ஒப்பந்தம் செய்தார். ஷீலாவின் நடிப்பை கேள்விப்பட்டதயாரிப்பாளர் ஜோசப் தளியத் தனதுஅடுத்தபடத்தில் அவர் நடிக்க வேண்டும் என்று கேட்டார். வாஹினி ஸ்டூடியோவில் ஷீலாவின் நடிப்பைப் பார்த்தமலையாளக் கதாசிரியர் பாஸ்கர்ஷீலாவை மலையாளத் திரைப்படத்துக்குஅழைத்துச் சென்றார்.தமிழ், மலையாளம் ஆகிய இரண்டுமொழிகளிலும் ஷீலா பிஸியாகி நடிகையாகமாறினார். 18வயதில்திரைஉலகுக்கு
நுழைந்த ஷீலா வெற்றிப் படநாயகியாக வலம் வந்தார்.படங்களில் நடிக்கத் தொடங்கியதும்சிறந்த திரைப்படங்களைத் தேடிப்பார்க்கத்தொடங்கினார். ஒவ்வொரு காட்சியிலும் மற்றைய நடிக நடிகைகள் தமதுஉணர்ச்சியை எப்படி வெளிப்படுத்துகின்றனர் என்பதை அறிந்து தனது நடிப்புக்கு மெருகேற்றினார் ஷீலா.
காதலிக்க நேரமில்லை நாயகன்ரவிச்சந்திரனை காதலித்து மணமுடித்தஷீலாவின் மகனான அம்சவர்த்தனும் நடிகராக உள்ளார்.

1 comment:

Anonymous said...

//ஷீலாவின் மகனான அம்சவர்த்தனும் //

அம்சவர்த்தன் ரவிச்சந்திரனின் மகந்தான். ஆனால் ஷீலாவின் மகன் அல்ல. ஷீலாவின் மகன் ஜேக்கப் என்றப்பெயரில் டிவியில் நடித்துக் கொண்டிருக்கிறார் இப்பொழுது. பாய்ஸ் vs கேர்ள்ஸ்ல இவர்தான் பாய்ஸ் அணிக்கு தலைமை. கே பாலசந்தரின் நாடகங்களும் நடித்திருந்தார். ’காதல் ரோஜாவே’ என்று ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டு வெளிவரவில்லை. ஆனால் பாடல் மட்டும் வெளிவந்தது.