Saturday, July 2, 2011

ஜேர்மனி ,பிரான்ஸ் வெற்றி

ஜேர்மனியில் நடைபெறும் மகளிர் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஜேர்மனி, பிரான்ஸ் ஆகியன வெற்றி பெற்றன. நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி வெற்றி பெற்றது. போட்டி ஆரம்பத்தில் இருந்து முடிவடையும் வரை ஜேர்மனிய வீராங்கனைகள் நைஜீரியாவுக்கு நெருக்குதல் கொடுத்தனர்.
ஆட்டம் ஆரம்பித்த மூன்றாவது பதின்மூன்றாவது நிமிடங்களில் ஜேர்மனி வீராங்கனைகள் கோல் அடிக்க முயற்சி செய்தனர். நைஜீரிய கோல் கீப்பர் அவற்றைத் தடுத்துவிட்டார். நைஜீரியர் கைகளும் கோல் அடிக்க முயன்றபோது ஜேர்மனிய கோல் கீப்பர் அவற்றை தடுத்துவிட்டார்.
51 ஆவது நிமிடத்தில் நைஜீரிய வீராங்கனையான ஓலேக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 54 ஆவது நிமிடத்தில் ஜேர்மனிய வீராங்கனையான சைமன் லவுடர் கோல் அடித்தார். நைஜீரியாவை ஜேர்மனி இலகுவாக வீழ்த்திவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. நைஜீரிய வீராங்கனைகள் திறமையாக விளையாடி ஜேர்மனிக்கு மிகுந்த நெருக்கடியைக் கொடுத்தனர். 74 ஆவது நிமிடத்தில் ஜேர்மனிய வீராங்கனையான குலிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
ஜேர்மனியைச் சேர்ந்த அன்னிக் கிரான் சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார்.இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற ஜேர்மனி கால் இறுதிக்குத் தகுதி பெற்றது.
பிரான்ஸ் கனடா ஆகியவற்றுக்கிடையேயான இன்னொரு போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றது.
போட்டி ஆரம்பித்தது முதலே பிரான்ஸ் வீராங்கனைகள் போட்டியைத் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தனர். ஏழாவது நிமிடத்தில் பிரான்ஸ் வீராங்கனை அடித்த பந்தை கடைசி கோல் கீப்பர் தடுத்து நிறுத்தினார். 24ஆவது நிமிடத்தில்தினெலிiகோல் அடித்தார். 37 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீராங்கனைமபெரம்மஸுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 57ஆவது நிமிடத்தில் கனடா வீராங்கனை மதன்சனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 60 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீராங்கனை தினெலி இரண்டாவது கோலை அடித்தார். 66 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீராங்கனை கோல் அடித்தார். 30 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி முகத்துடன் விளையாட்டைத் தொடர்ந்தது. 83 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீராங்கனையான தோமில் கோல் அடித்தார். 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் முதன் முதலாககாலிறுதியில் விளையாடத் தகுதி பெற்றது. சிறந்த வீராங்கனையாக ஜேர்மனிய வீராங்கனையான திலினி தேர்வு செய்யப்பட்டார்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ்

No comments: