Wednesday, July 20, 2011

காத்திருக்கிறது காங்கிரஸ்ஒதுங்குகிறது தி.மு.க.

இந்திய மத்திய அமைச்சரவை மாற்றப்படப் போகிறது என்ற செய்தி வெளியானதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
திராவிட முன்னேற்றக்கழகம் அமைச்சரவை யில் இருந்து வெளியேற்றப்பட்டு விடும் என்ற கருத்து மேலோங்கியது. சிறிய மாற்றங்களு டன் அமைச்சரவை பொறுப்பேற்றதனால் எதிர் பார்ப்பு ஏமாற்றமாகியது.
முக்கியமான அமைச்சைப் பெறுவதில் சகல கட்சிகளும் முட்டி மோதுவது. எமது கட்சியில் இத்தனை அமைச்சர்கள் உள்ளனர் என்று கணக்குக் காட்டுவதற்காக முக்கியம் இல்லாத அமைச்சர் பொறுப்பை தலையில் வைத்துக் கொண்டாடுவதும் வழமையே.
2004ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் தனக்குத் தேவையான அமைச்சுகளைப் போராடிப் பெற்றது. 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்குப் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்பார்த்த அமைச்சுகள் கிடைக்கவில்லை. கிடைத்ததைப் பெற்றுக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்.
தயாநிதிமாறன், அழகிரி, ஆர். ராசா ஆகிய மூவரும் கபினெட் அமைச்சுகளாகப் பொறுப்பேற்றனர். தயாநிதிமாறனும் அழகிரியும் கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ராசா கருணாநிதி குடும்பத்துக்கு மிகவும் வேண்டியவர், பழனிமாணிக்கம், காந்தி செல்வன் ஜெகரட்சன் நெப்போலியன் ஆகிய நால்வரும் இணை அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.
ஸ்பெக்ரம் விஸ்வரூபம் எடுத்ததனால் கடந்த ஆண்டு அமைச்சுப் பதவியிலிருந்து ராசா ராஜினாமாச் செய்தார். சி.பி. ஐ.யால் கைது செய்யப்பட்ட ராசா திஹார் சிறையில் உள்ளார். சிபி.ஐ. யின் குற்றப் பட்டியலில் தயாநிதி மாறனின் பெயரும் இருப்பதõல் அமைச்சுப் பதவியில் இருந்து அவர் இராஜினாமாச் செய்துவிட்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டு அமைச்சுப் பதவிகள் காலியாக உள் ளன. அமைச்சரவை மாற்றத்தின் போது காலியாக உள்ள இரண்டு கபினெட் அமைச்சராக இருவரின் பெயரை திராவிட முன்னேற்றக் கழகம் சிபாரிசு செய்யுமா? திராவிட முன்னேற்றக் கழகத்தை அமைச்சரவையில் காங்கிரஸ் சேர்த்துக் கொள்ளுமா? என்ற சந்தேகம் நிலவியது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அமைச்சுப் பதவியைக் கொடுக்க காங்கிரஸ் தயாராக உள்ளது. ஆனால் அமைச்சுப் பதவியைப் பெறுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இல்லை. காலியாக உள்ள இரண்டு அமைச்சுகளைப் பொறுப்பேற்பதற்குப் பலரின் பெயர்கள் அடிபட்டன. அழகிரியின் ஆதரவõளர் ஸ்டாலினுக்கு வேண்டப்பட்டவர், தயாளு அம்மையார் சிபாரிசு செய்து விட்டார் என செய்திகள் கசிந்தன. 2001 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடித்த போதே ரி. ஆர். பாலுவுக்கு அமைச்சுப் பதவி தரமுடியாது என்ற காங்கிரஸ் கட்சி திட்ட வட்டமாக மறுத்துவிட்டது. ஆகையால் ரி.ஆர். பாலுவின் பெயர் கவனத்தில் எடுக்கப்படவில்லை.
மூன்றாவது முறை எம்.பி.யாக உள்ள திருச்சி சிவா இரண்டாவது முறை எம்.பி.யாக இருக்கும் ஆதிசங்கரர் விஜயன் வேணு கோபால், இளங்கோவன் ஆகியேõர் அமைச்சராவதற்குத் தகுதியானவர்கள். தயாநிதி மாறனும் அழகிரியும் முதன் முதல் எம்.பி. யானதும் கெபினெட் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. அமைச்சரவை மாற்றத்தின் போது காலியாக உள்ள இரண்டு அமைச்சுகளையும் பெறுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் முயற்சிக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு அமைச்சுப் பதவிகளையும் மத்திய அரசு யாரிடமும் கொடுக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முடிவுக்காக காங்கிரஸ் கட்சி காத்திருக்கிறது.
மத்திய அமைச்சரவைக்கு இரண்டு பேரின் பெயரைப் பிரேரிப்பதா இல்லையா என்பதை பொதுக் குழு கூடி முடிவெடுக்கும் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். கனிமொழி கைது செய்யப்பட்டபோதே அமைச்சரவையில் இருந்து விலக வேண்டும் என்று கருணாநிதி தெரிவித்தார். தமிழகத்தில் ஆட்சியைப் பறிகொடுத்த இந்த வேளையில் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகினால் பாதுகாப்பு இல்லை என்ற கருத்து முன் வைக்கப்பட்டதால் அந்த முடிவு கைவிடப்பட்டது. ராசா, கனிமொழி, அடுத்த இலக்கு அழகிரி என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதேவேளை, சி.பி.ஐ. யின் விசாரணை வட்டம் சன் ரீ.வி., கலைஞர் ரீ.வி. என விரிவடைந்து செல்கிறது.
கருணாநிதி குடும்பத்துக்கு எதிராக ஜெயலலிதா செய்ய வேண்டிய சிலவேலைகளை சி.பி.ஐ. கன கச்சிதமாக நிறைவேற்றி வருகிறது. சி.பி.ஐ. யின் கழுகுப் பார்வையில் அடுத்து சிக்கப் போவது யார் என்பது பற்றி பல வாதப்பிரதி வாதங்களை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான ஊடகங்கள் நடத்தி வருகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சி.பி.ஐ. நெருக்கடி கொடுத்து வரும் அதேவேளை, தமிழக அரசும் தன் பங்குக்கு சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சன் தொலைக்காட்சிக்காக திரைப்படங்களை வாங்குவதற்குப் பொறுப்பாக இருந்த சக்ஷேனா கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவரின் மீது மேலும் பழ வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு பிணையில் வெளிவர முடியாத நிலையில் உள்ளார்.
சன் தொலைக்காட்சிக்கு எதிராக சி.பி.ஐ. நடவடிக்கை எடுக்கப் போவதாகச் செய்திகள் கசிந்து வரும் வேளையில் சன் தொலைக்காட்சிக்கு எதிரான நடவடிக்கையை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. சன் தொலைக்காட்சியின் உரிமையாளர் கலாநிதி மாறனின் மீது தமிழக அரசின் பார்வை விழுந்துள்ளது. சன் தொலைக்காட்சியின் பிரதம அதிகாரிகளான சக்ஷேனா, அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கலாநிதி மாறனும் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக் காலத்தில் தனியõருக்கும் விவசாயிகளுக்கும் சொந்தமான நிலங்கள் ஒரு சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டன. அன்றைய அரசாங்கத்துக்குச் சார்பானவர்களினால் ஆக்கிரமிக்கப்பட்ட அல்லது குறைந்த விலையில் மிரட்டிப் பெறப்பட்டவற்றைப் பற்றி விசாரிப்பதற்கு தனியான பொலிஸ் பிரிவை அமைத்துள்ளார் ஜெலலிதா. இம்மாதம் முதலாம் திகதிவரை நில ஆக்கிரமிப்புத் தொடர்பாக 1449 புகார்கள் கிடைத்துள்ளன. இதனை பொலிஸ் நிலையங்களில் விசாரிக்க முடியாது அதன் காரணமாகத் தனியான பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் கூறியுள்ளõர். இக் குற்றச்சாட்டு தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் தலைமறைவாகிவிட்டனர். 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரையிலான கால கட்டத்தில் அபகரிக்கப்பட்ட நிலங்களை உரியவர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும் என்பதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதியாக உள்ளார்.
2006 ஆண்டுக்கு முன் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நில ஆக்கிரமிப்புத் தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும் என்று கருணாநிதி அறிக்கை விட்டுள்ளார். ஜெயலலிதாவால் அபகரிக்கப்பட்ட சிறுதாவூர் நிலம் பற்றியும் விசõரிக்க வேண்டும் என்று கருணாநிதி சுட்டிக் காட்டியுள்ளார். யார் ஆட்சி பீடம் ஏறினாலும் நில ஆக்கிரமிப்பு மறைமுகமாக நடைபெறும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
வர்மா


சூரன்.ஏ.ரவிவர்மாவீரகேசரிவாவாரவெளியீடு17/07/11

No comments: