Wednesday, August 15, 2012

விஜயகாந்துக்கு எதிராக பிரதான கட்சிகள் ச‌தி



தமிழக சட்ட சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விஜயகாந்தை அகற்றுவதற்கு பிரதான கட்சிகள் முனைப்புக்காட்டி வருகின்றன. கடவுளுடனும் மக்களுடனும் மட்டும் தான் கூட்டணி என அடித்துக் கூறி வந்த விஜயகாந்த் சட்ட சபைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டுச் சேர்ந்தார். கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்ற பொதுக் கொள்கையுடனேயே விஜயகாந்தும் ஜெயலலிதாவும் கருணாநிதியை முதல்வர் பதவியிலிருந்து வெளியேற்றிய இக்கூட்டணி நீண்டகாலம் நிலைக்கவில்லை. ஜெயலலிதாவும் விஜயகாந்தும் ஒருவருடன் ஒருவர் இணங்கி அரசியல் பாதையில் செல்வதற்கு தயாராக இல்லாததனால் கூட்டணி விரைவில் தகர்ந்தது.

ஜெயலலிதாவும் விஜயகாந்தும் இணைந்து தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிட்டதனால் இருவருமே பலனடைந்தனர். ஜெயலலிதா முதல்வரானார். விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார். திராவிட முன்னேற்றக் கழகம் படுதோல்வியடைந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விஜயகாந்துக்கு தாரை வார்க்கும் என்று எவருக்கும் எதிர்பார்க்கவில்லை. பிரமாண்டமாக செல்வாக்குப் பெற்ற கட்சியை சரியாக வழி நடத்துவதற்கு விஜயகாந்தால் முடியவில்லை. விஜயகாந்த்துடன் கட்சி பிரச்சினைகளை விவாதிப்பதற்கு இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாரும் இல்லை. விஜயகாந்த் அவர் மனைவி பிரேமலதா, பிரேமலதாவின் சகோதரன் ”தீஷ் ஆகியோர் தான் கட்சியை வழி நடத்துகிறார்கள். கட்சியின் கொள்கை என்ன? அடுத்து கட்சி என்ன செய்யப் போகிறது என்பது அக்கட்சியின் சட்ட சபை உறுப்பினர்களுக்கே தெரியாத நிலை உள்ளது.
விஜயகாந்தின் கட்சியைச் சேர்ந்த சட்ட சபை
உறுப்பினர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி அவர்களைத் தம் பக்கம் இழுக்க பிரதான கட்சிகள் சில வியூகம் வகுத்துள்ளன கட்சியை வளர்ப்பதற்கு மிகவும் முயற்சி செய்த பண்ருட்டி ராமச்சந்திரன் மௌனமாக இருக்கிறார். அவரின் செயற்பாடுகளை தலைமை முடக்கியுள்ளது. தமிழக சட்ட சபையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களுக்கு எதிராக விஜயகாந்த் முழங்கிய ஆவேச பேச்சுதான் கூட்டணி உøடவதற்கு முக்கிய காரணமானது.
விஜயகாந்தின் செயற்பாடுகளின் அதிருப்தியுற்ற மகளிர் அணித் தலைவி ரெஜினா  பாட்ஷா தலைமைப் பதவியைத் துறந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். மகளிர் அணியைக் கட்டி வளர்ப்பதற்காக இவர் ஆற்றிய பங்களிப்பை விஜயகாந்த் வெகுவாகப் புகழ்ந்து பாராட்டினார். திண்டுக்கல் முத்துவேல்ராஜ், öŒன்னை மாநகரச‌பைத் @தர்தல் மேயர் வேட்பாளர் வேல் முருகன் ஆகியோர் வெளியேறியதால் விஜயகாந்த் அதிர்ச்சியடைந்தார். கட்சி மீது அதிருப்திகொண்டிருப்பவர்களை இனம்கண்டு அவர்களை சமாதானப்படுத்துவதற்கு விஜயகாந்த் முயற்சிக்கவில்லை. ஆகையினால் அதிருப்தியøடந்த சட்ட சபை உறுப்பினர்களை வளைப்பதற்கு பிரதான கட்சிகள் முயற்சி செய்கின்றன.

திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி விஜயகாந்துடன் இணைந்த ஏ.ஜி. சம்பத் தனக்குரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்படாததனால் மீண்டும் தாய்க்கழகத்துக்கு öசன்று விட்டார். தேசிய முற்போக்கு திராவிடக் கழக வக்கீல் அணித் தலைவரான மணிமாறன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையப் போவதாகச் செய்திகள் கசிந்துள்ளன. விஜயகாந்தின் கட்சிச் சின்னத்தை பெறுவதற்கு டில்லி வரை சென்று போராடிய மணிமாறன் விஜயகாந்துக்கு மிகவும் வேண்டப்பட்டவர். இவரை தம்பக்கம் இழுக்க பிரதான கட்சி முயற்சி செய்கிறது. இவரைத் தவிர சட்டசபை உறுப்பினர்கள் சிலரும் கட்சியிலிருந்து வெளியேறப் போவதாகச் செய்திகள கசிந்துள்ளன.
இந்தியப் பொதுத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் விஜயகாந்தின் கட்சி உடைந்தால் முரசு சின்னம் முடக்கப்படும். கட்சிக்குள் கலகம் ஏற்படும். பிரதான கட்சிகளுடன் விஜயகாந்த் கூட்டணி சேர முடியாத நிலை ஏற்படும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் விஜயகாந்த் சேரப் போவதில்லை. திரõவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் ஆகியவற்றுடன் விஜயகாந்த் கூட்டணி அமைத்தால் ஜெயலலிதாவுக்குப் பாரிய நெருக்கடியைக் கொடுக்கலாம் என எதிர்பார்ப்பு இருந்தது. விஜயகாந்தின் கட்சி உடைந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டால் திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் அவரைத் தம்முடன் இணைக்க விரும்பமாட்டா. தமிழக அரசியலில் தனிமைப்படுத்தப்படும் நிலையை நோக்கியே விஜயகாந்த் சென்று கொண்டிருக்கிறார்.

வைகோ, டாக்டர் ராமதாஸ் ஆகியோர் எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேர முடியாத நிலையில் உள்ளனர். அவர்களின் வாக்கு வங்கி பறிபோனதால் பிரதான கட்சிகள் அவர்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
அதேபோன்றதொரு நெருக்கடியான நிலையையே விஜயகாந்தும் எதிர்நோக்கி உள்ளார். இந்தியப் பொதுத் தேர்தலுக்கும் தமிழக சட்ட சபைத் தேர்தலும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. சட்ட சபைத் தேர்தலின் வெற்றி தோல்வியை சிறிய கட்சிகளினால் தீர்மானிக்க முடியும். பொதுத் தேர்தலின் வெற்றி தோல்விக்கு சிறிய கட்சிகளால் பாதிப்பு ஏற்படுத்த முடியாது.
வைகோ, விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ் ஆகிய மூவரும் இணைந்து இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றி எட்டாத் தூரத்திலேயே உள்ளது.

வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு12/08/12

2 comments:

Avargal Unmaigal said...

மிக நல்ல அரசியல் அலசல்

வர்மா said...

தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா