Monday, August 20, 2012

முதல்வர் ஜெயலலிதா மகிழ்ச்சி திரிச‌ங்கு நிலையில் வழக்குகள்



ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி பி.எம். மல்லிகார் ஜுனைய்யா கடந்த 4 ஆம் திகதி ஓய்வு பெற்று விட்டார். கர்நாடகாவில் நடைபெறும் இந்த வழக்கின் அரச தரப்பு அட்வகேட் ஜெனரல் ஆச்சரியா கடந்த வாரம் திடீரென தனது பதவியை இராஜினாமாச் செய்து விட்டார். இதனால் ஜெயலலிதா நிமமதியடைந்துள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதாவுக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் பல வழக்குகளைத் தாக்கல் செய்தது. வருமானத்துக்கு மீறிய சொத்துச் சேர்த்தது. டான்சி நிலபேர ஊழல் என்பனவே அவற்றில் மிக முக்கியமானவை.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மாறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்த போது குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதாவுக்கு எதிராக முதலமைச்சர் ஜெயலலிதா வழக்கை நடத்தும் புதிய காட்சி தோன்றியது. ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு விபரீதமாகப் போகும் என்பதை உணர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம் நீதிமன்றத்தை நாடி கர்நாடகத்தில் இந்த வழக்கை விசாரிக்க அனுமதி பெற்றது.

நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா ,அரசதரப்பு சட்டத்தரணி ஆச்சாரியார் ஆகிய இருவரும் போட்ட கிடுக்குப் பிடியில் சிக்கிய ஜெயலலிதா வெளியேற வழியின்றித் தவித்தார். நீதிபதி மல்லிகார் ஜுனைய்யாவின் ஓய்வும் ஆச்சார்யாவின் இராஜினாமாவும் ஜெயலலிதாவுக்கு அளவு கடந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. அரசியலில் ஜெயலலிதாவின் பரம எதிரியாக கருணாநிதி இருந்தாலும் மல்லிகார்ஜுனாவும் ஆச்சார்யாவும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல் ஜெயலலிதாவை ஆட்டிப் படைத்தார்கள்.
வழக்கு விசாரணைக்கு நீதிமன்றப் படி ஏறாத ஜெயலலிதாவை நீதிமன்றத்தில் நிறுத்தி ஆயிரத்துக்கும் அதிகமான குறுக்குக் கேள்விகளைக் கேட்டுப் பதிலைப் பெற்றவர் நீதிபதி மல்லிகார் ஜுனைய்ய. வழக்கு விசாரணைகளின் போது ஆஜராகாது தவணை கேட்டு நீதிமன்றத்தை நோகடித்த ஜெயலலிதாவை ஆட்டிப் படைத்தவர் மல்லிகார் ஜுனைய்யா. இவர் ஓய்வு பெறுவதால் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கின் நிலை எப்படியாகும் என்று கவலையில் உள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.

ஜெயலலிதாவின் உடன் பிறவாச் சதோதரி சசிகலாவிடம் சில கேள்விகளைக் கேட்டுப் பதிலைப் பெற்றுள்ளார். இன்னும் சில கேள்விகள் பாக்கியுள்ளன. அக்கேள்விகளைக் கேட்பதற்கு அழைப்பு விடுத்தபோது உடல் நிலையைக் காரணம் காட்டி நீதிமன்றத்தில் ஆஜராவதை தவிர்த்தார் சசிகலா. நீதிபதி மல்லிகா ஜுனைய்யாவின் ஓய்வின் பின்னர் இந்த வழக்கில் போக்கில் மாற்றம் ஏற்படும் என்பதனால் சசிகலா நீதிமன்றத்தில் ஆஜராகி கேள்விகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்தார்.

மல்லிகா ஜுனைய்யாவுக்கு பதிலாகப் புதிய நீதிபதியை நியமித்தால், அவர் இந்த வழக்கின் முழு விபரங்களையும் படித்துப் பார்ப்பதற்கு கால அவகாசம் அதிகம் தேவைப்படும். ஆகையினால் இந்த வழக்கின் விசாரணை தாமதப்படும் என்று ஜெயலலிதா தரப்பு நம்புகிறது.
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிப்பதற்கு நீதிபதி மல்லிகா ஜுனைய்யாவைத் தவிர வேறு யாரும் இல்லை எனக் கருதுகிறது திராவிட முன்னேற்றக் கழகம். இந்த வழக்கின் தார்ப்பரியத்தை உணர்ந்த கர்நாடக உயர் நீதிமன்றம் நீதிபதி மல்லிகார் ஜுனைய்யாவுக்குப் பதவி நீடிப்பை வழங்குமா என்ற கோணத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆலோசனை செய்கிறது. இதேவேளை நீதிபதி மல்லிகா ஜுனையாவுக்கு பதவி நீடிப்பு வழங்குவதற்கான கோரிக்கையுடன் நீதிமன்றத்தை அணுகுவதற்கும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆலோசனை செய்கிறது.
நீதிபதி மல்லிகார் ஜுனைய்யா கடந்த 4ஆம் திகதி ஓய்வு பெற்றாலும் அதற்கான உத்தரவு இம்மாத இறுதியில் தான் வழங்கப்படும். பதவி நீடிப்பை அவர் விரும்பவில்லை என்று நீதிபதிக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கை துரித கதியில் விசாரிக்கும்படி உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது. உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டால் நீதிபதி மல்லிகார் ஜுனைய்யா பதவியில் நீடிக்க வாய்ப்பு உள்ளது.

நீதிபதி மல்லிகார் ஜுனைய்யாவைப் போல ஜெயலலிதாவை ஆட்டிப்படைத்த இன்னொருவர் அரசதரப்பு சட்டத்தரணிஆச்சார்யா. இவரின் வாதமும் வழக்கை நடத்திய நேர்த்தியும் ஜெயலிதாவையும் அவரின் சகாக்களையும் கதி கலங்க வைத்தன. இவரின் திடீர் இராஜினாமாவினால் ஜெயலலிதா நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார். இவரை இந்த வழக்கிலிருந்து அகற்றுவதற்கு திரை மறைவில் பல முயற்சிகள் நடந்தன. இவருக்கு உயர் பதவி கொடுக்க கர்நாடக அரசு முன் வந்தது. உயர் பதவியை விட இந்த வழக்குத்தான் முக்கியம் என்று மறுத்து விட்டார். இந்த வழக்கில் வாதாடுவதற்காக இன்னொரு பதவியைக் கைவிட்டார். இந்த வழக்குத் தான் மிக முக்கியமானது என்று அடித்துக் கூறிய அரசதரப்பு சட்டத்தரணி ஆச்சார்யாவின் இராஜினாமாவின உண்மையான காரணம் தெரியவில்லை. புதியஅரசதரப்பு சட்டத்தரணியை நியமிக்கும் வரை சேவையில் தொடருமாறு நீதிமன்றம் ஆச்சார்யாவிடம் கூறியுள்ளது.
நீதிபதி மல்லிகார் ஜுனைய்யாவின் ஓய்வு, ஆச்சாsர்யாவின் ராஜினாமா ஆகியவற்றால் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகம் கர்நாடகம் மட்டுமல்ல, டில்லியும் இந்த வழக்கை உன்னிப்பாகக் கவனிக்கிறது. ஜெயலலிதாவின் மீதான பிடி இறுகி விட்டது. இந்த வழக்கில் இருந்து அவர் தப்ப முடியாது. நீதிபதி மல்லிகார் ஜுனைய்யா அட்வகேட் ஜெனரல் ஆச்சார்யா ஆகிய இருவரின் கிடுக்குப் பிடியில் சிக்கியுள்ளார் ஜெயலலிதா என்று பரபரப்பான செய்திகள் வெளியாகின. இந்த இருவரும் இல்லாத ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கர்நாடகத்தில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதாக் கட்சி ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமானது. இந்திய மத்திய அரசின் மிக விருப்பத்துக்குரியவர் கருணாநிதி. ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் இடையிலான கௌரவ போர் கர்நாடக மாநில அரசுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் இடையிலான விவகாரமாக மாறியுள்ளது.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு119/08/12

6 comments:

ரங்குடு said...

கிழ போல்ட்டுக்களை நீதித்துறையிலிருந்து வெளியேற்ற வேண்டும். அதே போல் நீதித்துறை ஆட்சியாளர்களிடமிருந்து சுடந்திரமாகச் செயல்பட வழி செய்யப்பட வேண்டும்.

இல்லையென்றால் ஜெ. போன்றவர்கள் தப்பிக்க வாய்ப்பு மிக உண்டு.


திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்வுக்கு நன்றி ஐயா...

Jayadev Das said...

இந்த கேசை நியாயமா விசாரிச்சு குறித்த காலத்தில் தீர்ப்பைச் சொல்லி ஜெயலலிதாவை கலி திங்க வைப்பாங்கன்னு நினைக்கிறீங்க? நடக்கவே நடக்காது. இந்த ஒரு கேசை மட்டும் விட்டு விட்டு மத்த எல்லா கேசையும் ஊத்தி மூடியாச்சு, இதையும் அப்படித்தான் செய்யப் போறாங்க.

வர்மா said...


ரங்குடு said...
கிழ போல்ட்டுக்களை நீதித்துறையிலிருந்து வெளியேற்ற வேண்டும். அதே போல் நீதித்துறை ஆட்சியாளர்களிடமிருந்து சுடந்திரமாகச் செயல்பட வழி செய்யப்பட வேண்டும்.

இல்லையென்றால் ஜெ. போன்றவர்கள் தப்பிக்க வாய்ப்பு மிக உண்டு.

தப்பிவிடுவோம் என்ற நம்பிக்கை ஜெக்கு உண்டு
அன்புடன்
வர்மா

வர்மா said...

திண்டுக்கல் தனபாலன் said...
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

அன்புடன்
வர்மா

வர்மா said...

Jayadev Das said...
இந்த கேசை நியாயமா விசாரிச்சு குறித்த காலத்தில் தீர்ப்பைச் சொல்லி ஜெயலலிதாவை கலி திங்க வைப்பாங்கன்னு நினைக்கிறீங்க? நடக்கவே நடக்காது. இந்த ஒரு கேசை மட்டும் விட்டு விட்டு மத்த எல்லா கேசையும் ஊத்தி மூடியாச்சு, இதையும் அப்படித்தான் செய்யப் போறாங்க.
இப்பவே கேஸ் மூடினமாதிரித்தான்

அன்புடன்
வர்மா