Monday, June 13, 2016

நொக் அவுட் நாயகன் முகமது அலி


முகமது அலி என்று சொல்லும்போதே மனதில்   கம்பீரமும் தெம்பும் தோ ன்றிவிடும். இரண்டுகைகளாலும் எதிரியின் முகத்தில் மாறிமாறி குத்துவது போன்ற உணர்வு ஏற்படும். ஆண்மை, கம்பீரம்,வலிமை நிறைந்த முகமது அலி  உலகில் இருந்து விடை பெற்றுவிட்டார்.  1942  ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி அமெரிக்காவின் கெண்டகி மாநிலத்தில் பிறந்த முகமதி அலி 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் திகதி காலமானார்.  கசியஸ் காசெலஸ் கிளே ஜூனியர் என்பதே அவருடைய பெயர். சுருக்கமாக கசியஸ் கிளே என அழைக்கப்பட்டார். குத்துச்சண்டையில் பிரபலமான பின்னர்  தி கிரேட்டஸ் தி சாம்ப் தி லூயிஸ் வில்லி லிப் என்றசெல்லப் பெயர்களும் அவருக்குச் சூட்டப்பட்டன.

சிறுவயதிலே குத்துச்சண்டையில் அலாதி பிரியம் கொண்ட கசியஸ்கிளே குத்துச் சண்டை நடக்கும் இடங்களைத் தெடிச்சென்று பார்வையிடுவார். பாடசாலைக்கு பஸ்சில் செல்லாமல் பஸ்ஸுக்குப் போட்டியாகஓடிச்செல்வார். ஜோபாட்டின் என்ற பொலிஸ்காரரே கசியஸ்கிளேயின் வாழ்க்கையை மாற்றி அவரை குத்துச்சண்டையின் பக்கம் திருப்பினார். கிளேயின் சைக்கிளை ஒருவர் திருடியபோது அவரின் முகத்தில் சரமாரியாக குத்திவிட்டு சைக்கிளை மீட்டார். அவருடைய குத்துகளைப் பார்த்த பொலிஸ்காரன் கிளேயின் பயிற்சியாளராக மாறினார்.


 1960 ஆம் ஆண்டு ரோமில்  நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் லைட் ஹெவிவெயிட்  குத்துச்சண்டை பிரிவில்  தங்கம் வென்ற கசியஸ் கிளே  அதே ஆண்டு தொழில்முறை குத்துச்சண்டை வீரராக மாறினார். 1964 ஆம் ஆண்டு இஸ்லாமிய தேசம்  என்ற அமைப்பு உருவான போது அதில் இணைந்து முஸ்லிமாக மதம் மாறி தந்து பெயரை முகமது அலி என அறிவித்தார். குத்துச்சண்டை கோதாவில் முகமது அலியின் பெயர் பிரபலமானது. முகமது அலிக்கு ரசிகர் பட்டாளம் உருவானது.  19  போட்டிகளில்தொடர்ந்து வெற்றி பெற்ற  முகமது அலிக்கு 20 ஆவது போட்டி சவாலாக அமைந்தது.
உலக ஹெவிவெய்ட் சம்பியனான சோனி சோனி லிஸ்டனை  எதிர்த்து களம் இறங்கினார். உலகின் மிகப் பயங்கரமான வீரன் சோனி ஸ்டன். 22 வயது நிரம்பிய  முகமது அலியால்  உலக  சம்பியனை வீழ்த்த முடியாது என்ற கருத்து நிலவியது.  1964 ஆம் ஆண்டு பெபரவரி 25 ஆம் திகதி முகமது அலியின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட நாள். அன்றுதான்  சோனி லிச்டனுடன் முகமது அலி மோதினார்.  ஏழாவது  சுற்றில் முகமது அலியின் குத்துக்களுக்கு முகம் கொடுக்க முடியாத சோனி ஸ்டன் நொக் அவுட் முறையில் தோல்வியடைந்தார். உலக  ஹெவி  வெயிட் சம்பியன் பட்டம் என்ற பட்டம் முகமது அலியின் வசமாகியது. 1964 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி நடந்த மறு போட்டியில் முதல் ரவுண்டில் ஒரே குத்தில் சோனி ஸ்டனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

மூன்று முறை உலக ஹெவி வெயிட் சம்பியன் பட்டத்தை  சூடியவர். பரமவைரிகளான ஜோ பிறேசியர், ஜோர்ஜ் போர்மன் ஆகியோரை வீழ்த்தி உலக சம்பியனானவர். இவர்கள் இருவரிடமும் தோல்வியடைந்து மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜோ பிறேஸியருடனான போட்டியில் புள்ளிகளின் அடிப்படையில் தோல்வியடைந்தார். சர்வதேச ரீதியில் 61 போட்டிகளில்  பங்குபற்றி  56 பட்டங்களை வென்றார். அவற்றில் 37 போட்டிகளில் எதிரிகளை நொக் அவுட் முறையில் வீழ்த்தினார். எதிரியை மீண்டும் போட்டியிடமுடியாதவாறு நிலைகுலைய வைப்பதே நிக் அவுட் முறையாகும். 19 முடிவுகளில் நடுவரின் தீர்ப்புவாயிலாக பட்டம் வழங்கப்பட்டது. ஐந்து முறை மட்டும் தான் முகமது அலி தோல்வியடைந்தார். அதில் மூவருடன் போட்டியிட்டு மீண்டும்  வெற்றி பெற்றார். அமெச்சூர் போட்டிகளில் 100 வெற்றிகளையும் ஐந்து தோல்விகளையும் பதிவு செய்துள்ளார்.

 குத்துச்சண்டைப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றபின்னர் சமூகத்துக்கு நன்மை செய்யும் காரியங்களி;ல்  அக்கறை செலுத்தினார். உலகளவில் பல வெற்ரிகளின் நாயகனான முகமது அலி பல அவமானங்களையும் சந்தித்தார். அவரின் ஆதர்ச நாயகன் அன்றைய குத்துச்சண்டை வீரர்  சுகர் ரொபின்சன். சிறுவயதில் சுகர் ரொபின்சனிடம் ஆட்டோகிராப் வாங்கச் சென்றபோது இதற்கெல்லாம் நேரமில்லை என்று விரட்டினார். அதை மனதில் வைத்து சிறுவர்கள் ஆட்டோகிராப் கேட்டால் மறுக்காமல் போடுவார். சிறு வயதில் நான் பட்ட அவமானத்தை எந்தச் சிறுவனும் அனுபவிக்கக்கூடாது என்பதே அவரது நோக்கம்.

  ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதும்  அமெரிக்க மகிழ்ச்சியில் திளைத்தது..கிளேயின் பெயர் உலகெங்கும் பிரபலமானது.  சந்தோச மிகுதியில் அமெரிக்காவில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்குச்சென்றார். நிறவெறி தலை விரித்தாடிய நேரம் கறுப்பு இனத்தவர்கள் ஒதுக்கப்பட்ட காலம். கறுப்பர்களை உள்ளேவிடமுடியாது என முகத்தில் அடித்தாற் போல் கூறியதால் அவமானத்தில் கூனிக்குறுகினார். கோபம் தலைக்கேறியதால் தனக்குக் கிடைத்த ஒலிம்பிக் பதக்கத்தை அருகில் இருந்த  ஓகியோ நதியில் எறிந்தார்.

அமெரிக்க வியட்நாம் போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது கட்டாய இராணுவத்துக்கு ஆள் சேர்த்தார்கள். வியட்நாமுக்குச் செல்லும்படி முகமது அலிக்கு கட்டளை இடப்பட்டது. மதத்துக்கு விரோதமான காரியத்தைச் செய்யமாட்டேன் என மறுத்துவிட்டார். அவருடைய பட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன. கடவுச்சீட்டு முடக்கப்பட்டது. முகமது அலி குத்துச்சண்டையில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. மூன்றரை வருடங்கள் குத்துச்சண்டைக் கோதாவில் முகமது அலி இறங்கவில்லை.  தடை நீக்கப்பட்டபின் பொங்கி எழுந்த முகமது அலியை யாராலும் அடக்க முடியவில்லை.
 எதிரிகளைத் துவம்சம் செய்த முகமது அலியை பாகிசன்ஸ் என்ற கொடிய நோய்  1980 ஆம் ஆண்டு பீடித்தது. மத்திய நரம்பு மண்டலத்தை பாதிப்படையச்செய்து மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக முடக்கும் கொடியநோய்.. பலம்வாய்ந்த வீரர்களுடன் போராடி ஜெயித்த முகமது அலி, கொடிய நோயுடன் 36 வருடங்கள் போராடினார். மரணத்தை பலமுறை நொக் அவுட் செய்து சாதனை  செய்தவர் இறுதியில் நோய்க்குப்பலியானார்.

முகமது அலிக்கு ஒன்பது பிள்ளைகள். மகளான லைலா அலி அவர்து வாரிசாக குத்துச்சண்டை சம்பியனானார்.   முகமது அலி உலகை விட்டு மறைந்தாலும் அவரது சாதனையை யாராலும் நெருங்க முடியாது.

 முகமது அலி ஆக்ரோஷமான குத்துச்சண்டை வீரராக திகழ்ந்திருந்தாலும்அமைதியைஅதிகம் விரும்பியவர்மற்றவர்களை மகிழ்விப்பதில் அலாதி பிரியம் கொண்டவர்அவர்குத்துச்சண்டை போட்டியில் கொடி கட்டிப் பறந்த காலத்தில் மருத்துவமனைக்கு சென்றுநோயாளிகளை உற்சாகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அப்போது அவருடன் ஏராளமானோர் செல்வார்கள்ஒருமுறை அவர் நோயாளிகளை சந்திக்கமருத்துவமனைக்கு சென்றிருந்தபோது அங்கிருந்த நிர்வாகிஒரு நோயாளியின் அறையைமட்டும் வேகமாக கடந்து போகுமாறு கூறினார்அதைக் கேட்ட முகமது அலி, "அந்தஅறையில் இருப்பது யார்என கேட்டார்அதற்கு அந்த நிர்வாகி, "அங்கு ஒரு முதியவர்இருக்கிறார்அவர் கடந்த சில ஆண்டுகளாகவே யாரிடமும் பேசுவதில்லைஅதனால் நான்அந்த அறைக்கு போவதில்லைஎன பதிலளித்தார்.
உடனே நான் அங்கு போக வேண்டும் என்று கூறிய முகமது அலிஅந்த அறைக்குள்நுழைந்தார்அங்கு மிக வயதான ஆப்பிரிக்கஅமெரிக்கர் ஒருவர் இருந்தார்தோல் சுருங்கி,கூன் விழுந்த நிலையில் இருந்த அந்த முதியவரின் முன்னால் போய் நின்ற முகமது அலி, "பெரியவரே உங்களுக்கு நான் யார் என்று தெரிகிறதாஎன கேட்டார்அதுவரை யாரிடமும்பேசாமல் இருந்த அந்த பெரியவர், "ஆம்நீங்கள் யார் என்று தெரிகிறதுஎன்றார்அவர்பேசியதால் உற்சாகமடைந்த முகமது அலி, "நல்லதுநான் யார் என்று சொல்லுங்கள்பார்க்கலாம்என்றார்.

உடனே அவர், "நீங்கள் ஜோ லூயிஸ் (லூயிஸும் அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரியகுத்துச்சண்டை வீரர்)' என்றார்அவருடைய பதிலால் அலியுடன் வந்திருந்தவர்கள் மிகுந்தஅதிர்ச்சியடைந்ததோடுஇவர் லூயிஸ் இல்லைமுகமது அலிஎன்று கூற முயன்றார்கள்.அப்போது அவர்களைப் பார்த்து அமைதி காக்குமாறு சைகை காட்டிய முகமது அலிஅந்தஅறையை விட்டு வெளியே வந்தார்.
அப்போது உடன் இருந்தவர்கள் அது குறித்து கேட்டபோது, "அந்த பெரியவர் ஜோலூயிஸைசந்தித்ததாக நினைத்து மகிழ்வாரானால்அவரைப் பொறுத்தவரையில் நான்லூயிஸாகவே இருந்துவிட்டு போகிறேன்என்றார்.
இந்த உலகில் சிறிய அளவில் புகழ் கிடைத்துவிட்டாலே அதை வைத்துக்கொண்டு ஆட்டம்போடும் மனிதர்கள் அதிகம்ஆனால் முகமது அலி புகழின் உச்சத்தில் இருந்தபோதுகூடஅவரிடம் ஆணவம் தலைதூக்கியதில்லைகளத்தில் முகமது அலியின் பரம வைரியாகதிகழ்ந்தவர் லூயிஸ்ஆனால் மருத்துவமனையில் இருந்த பெரியவர்நீங்கள் லூயிஸ் என சொன்ன போதுகூடஅவரின் சந்தோஷத்துக்காக ஆமாம் லூயிஸ் என்று சொன்ன முகமதுஅலியின் பொறுமை எத்தனை பேருக்கு இருந்திருக்கும்நிச்சயம் அவர் இடத்தில் வேறு யார்இருந்திருந்தாலும்அதை அவமானமாக நினைத்திருப்பார்கள்உலகப் புகழ் பெற்ற என்னைதெரியவில்லையா என கோபத்தில் கொந்தளித்திருப்பார்கள் என்பதை மறுக்க முடியாது.
களத்தில் எதிரிகளை ஆக்ரோஷமான குத்துகளால் சாய்க்கும் கொடூரமான மனிதனாக காட்சியளித்திருந்தாலும்நிஜ வாழ்க்கையில் பொறுமையும்எளிமையும் ஒருங்கே அமைந்தஹீரோவாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார் முகமது அலிஅவர் மறைந்தாலும்அவரின்பெயரும்அவர் பெற்ற புகழும்அவர் படைத்த சாதனைகளும் அழியாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லைகல்லுக்குள் ஈரம் என்பதற்கு முகமது அலியேசரியான உதாரணம்.

குத்துச் சண்டையில்  'தி கிரேட்என்ற பெயரை பெற்றவர் முகமது அலி. அளப்பரிய பல சாதனைகளை செய்து குத்துச் சண்டையின் பக்கம் உலக ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த குத்துச் சண்டை ஜாம்பவான் முகமது அலியின் குத்துச் சண்டை வாழ்க்கையில் நிகழ்ந்த சில பதிவுகள் இங்கே...

*  
பதினெட்டு வயதில் அனைத்துலக குத்துச்சண்டை விருதை முதலில் பெற்றார்.

* 1960 
ம் ஆண்டு ரோம் ஒலிம்பிக்  போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார்.


*  1965 ம் வருடம் சோனி லிஸ்டன் என்ற உலக வீரரை வீழத்திமுதல் முறையாக 'உலக ஹெவி வெயிட்' (world heavyweight champion) விருதை பெற்றபோதுதான் குத்துச் சண்டையில் ஒரு புதிய சகாப்தம் துவங்கியது.
*  1964 முதல் 1967 வரை உலக குத்துச் சண்டை நாயகன் இவர்தான்.

*  
அமெரிக்க ராணுவத்தில் சேவை செய்ய மறுத்ததால்,  அமெரிக்க அரசால் அவருக்கு கொடுக்கப்பட்ட விருது திரும்ப பெறப்பட்டது. மீண்டும் அந்த விருதைப் பெறஜோ பிரேசியருடன் மோதினார். ஆனால் தோல்வியை தழுவினார்.

*  கடின பயிற்சியில் இறங்கியவர்,1974 ம் ஆண்டுஅதே ஜோ பிரேசியருடன் மோதினார். உலக முழுவதும் இந்தப் போட்டியை ஆவலோடு எதிர்ப்பார்த்து. அந்தப் போட்டியில் ஆக்ரோஷம் காட்டிய முகமது அலி,தன்னை வீழ்த்தியவரை வீழ்த்தி உலக விருதை மீண்டும் கைப்பற்றினார்.

லியோன் ஸ்பின்க்ஸ் (Leon Spinks) என்ற வீரருடன் மோதி தோல்வியைத் தழுவிய முகமது அலி , 1978-ம் ஆண்டுஅதே ஸ்பின்க்ஸை-ஐ வீழ்த்திஉலக விருதை மூன்றாவது முறையாக மீண்டும் கைப்பற்றினார்.

குத்துச் சண்டை விளையாட்டில்  தன்னை வீழ்த்தியவர்களையே மீண்டும் வீழ்த்திஉலக குத்துச் சண்டை சாம்பியன் விருதை மூன்று முறை கைப்பற்றியவர் முகமது அலி. அதனால்தான் உலக குத்துச் சண்டையில் முடிசூடா மன்னனாக பார்க்கப்பட்டார்.


* The greatest 
என்ற திரைப்படம்இவரது கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதுதான்.

No comments: