Wednesday, April 26, 2023

தேசிய அரசியலில் கால் பதிக்கும் ஸ்டாலின்

மத்தியில் கூட்டாட்சி, மாநில சுயாட்சி என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தாரக மந்திரம். மத்தியில் ஆட்சி  செய்யும் பாரதீய ஜனதாக் கட்சிக்கும் தமிழக அரசுக்கும் சுமுகமான  உற‌வு இல்லை. பாரதீய ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநரின்  மூலம்  குடைச்சல் கொடுக்கப்ப‌டுகிறது.தமிழக ஆளுநர் ரவியும்  ஸ்டாலினின் ஆட்சிக்கு எதிராகக் காய் நகர்த்துகிறார். தமிழக  முதல்வரின்  அரசியல் வியூகத்தால் ஆளுநரின் மூக்கு  உடைக்கப்படுகிறது.

தனி  ஒருவனாக ஆளுநரைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை  உணந்த தமிழக  முதல்வர் ஸ்டாலின் ஏனைய முதல்வர்களுக்கு விடுத்த அழைப்பு சாதகமான நிலையை ஏற்படுத்தி உள்ளது.

பாரதீய ஜனதாக் கட்சி  ஆளாத மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் எல்லாம் ஆளுநருக்கும் - அரசுக்கும் கடும் மோதல் உள்ளது. தெலுங்கானாவில் தமிழிசை - கேசிஆர் இடையிலும், கேரளாவில் ஆரிப் கான் - பினராயி இடையிலும், டெல்லி, பீகார், மேற்கு வங்கம் என்று பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் முதல்வர்களுக்கும் இடையிலான மோதல் பிரசித்தமானது. தெலுங்கானாவில் ஆளுநருக்கு எதிராக முதல்வர் கே சந்திரசேகர ராவ் வழக்கு போடும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது.

அரச பணி  யிற்சி பெற்றவர்கள் முன்னிலையில் பேசிய ஆளுநர் ஆர். என் ரவி, சட்டசபையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் நிலுவையில் வைத்தால் அதற்கு நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்பதே பொருள். கிடப்பில் கிடந்தால் அந்த சட்டம் இறந்துவிட்டதாகவே பொருள் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்  இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தனித்தீர்மானம் தாக்கல் செய்து அதை நிறைவேற்றினார். சட்டசபை மசோதாக்களை டெல்லிக்கு அனுப்ப கால நிர்ணயம் செய்தல், ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவோடு இந்த தீர்மானம் வெற்றிபெற்றது. 144 உறுப்பினர்களின் ஆதரவோடு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. சட்டசபை மசோதாக்களை டெல்லிக்கு அனுப்ப கால நிர்ணயம் செய்தல், ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதனால் உடனே வழிக்கு வந்த ஆளுநர் ரவி, ஆன்லைன் ரம்மி மசோதாவிற்கு அளித்தார். இதனால் உடனடியாக அந்த மசோதாவும் சட்டம் ஆனது.

தமிழக சட்டசபையில் நிறைற வேற்றப்பட்ட தீர்மானத்தை பாரதீய ஜனதா ஆளாத மாநில முதல்வர்களுக்கு அனுப்பி இதே தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கடிதம் எழுதி உள்ளார். பல்வேறு மாநில முதல்வர்கள் ஆளுநர் மீது கடுப்பில் உள்ள நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் இந்த கடிதம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆளுநருக்கு எதிராக ஸ்டாலின் நிறைவேற்றிய தீர்மானம் உடனே வென்ற நிலையில், ஆளுநரும் ரம்மி நீக்க மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார். அதேபோல் மற்ற மாநிலங்களிலும் ஆளுநரை வழிக்கு கொண்டு வர, பின்னர் தேசிய அளவில் ஆளுநரை எதிர்க்க வசதியாக இருக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் இந்த கடிதத்தை எழுதி உள்ளார்.

 முதல்வர் ஸ்டாலினின் இந்த நடவடிக்கைக்கு தற்போது ஆதரவு குவிந்து வருகிறது. முதல் முதலாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்து பாராட்டினார். அதன் பிறகு கேரளா முதல்வர் பினராயி விஜயன், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார். இந்த வரிசையில்   மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இணைந்துள்ளார்.  மம்தா பானர்ஜி முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மம்தா பானர்ஜி   தொலைபேசியில் முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர். இதையடுத்து ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானத்துக்கு அவர் வரவேற்பு தெரிவித்து ஆதரவு வழங்கினார். மேலும் ஆளுநர்களுக்கு எதிரான அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர் கூட்டத்தை கூட்ட வேண்டும் என மம்தா பானர்ஜி, முதல்வர் ஸ்டாலினுக்கு யோசனை தெரிவித்துள்ளார் 

மாநில ஆளுநருக்கு எதிரான நடவடிக்கையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பிற மாநில முதல்வர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் மம்தா பானர்ஜியின் இந்த ஐடியாவை கொடுத்துள்ளார்.

பாரதீய ஜனதாவை எதிர்க்கும் அரசியல் தலைவர்கள் ஸ்டாலினுடன்  இணைந்து பணியாற்றத் தயாராக  இருகிறார்கள். ஸ்டாலினை விட்டு விலகி  இருந்த மம்தா பானர்ஜி  இப்போது  ஸ்டாலினை நெருங்கிவிட்டார். . நான் தேசிய அரசியலில்தான் இருக்கிறேன்.. தேசிய அரசியல்தான் செய்து கொண்டு இருக்கிறேன் என்று சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறி இருந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக முதல்வர் ஸ்டாலினின் தேசிய அளவிலான திட்டம் ஒன்றை அச்சு பிசகாமல் பின்பற்றி இருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

கேரள முதல்வர் பினராயி விஜயனும் ஏற்றுக்கொண்டு இதே தீர்மானத்தை நிறைவேற்றுவதாக கூறி உள்ளார். மம்தா: இதில் புதிய திருப்பமாக மம்தா பானர்ஜியும் இதே தீர்மானத்தை கொண்டு வரப்போவதாக அறிவித்து உள்ளார். ஜனநாயக விரோதமாக செயல்படும் ஆளுநர்களுக்கு பாடம் எடுக்க வேண்டும். அவர்களுக்கு எதிரான முயற்சிக்கு ஆதரவையும் பாராட்டையும் தெரிவிக்கின்றேன் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கடந்த சில காலமாக ஸ்டாலினுடன் பெரிதாக நெருக்கமின்றி காணப்பட்டார் மம்தா பானர்ஜி. முக்கியமாக ஸ்டாலினுடன் காங்கிரஸ் நெருக்கமாக இருப்பதாலும் ஸ்டாலினுடமும் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கத்தை தவிர்த்து வருகிறார் மம்தா. கடந்த இரண்டு முறையும் முதல்வரின் பிறந்தநாள் விழாவிற்கு மம்தா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தேசிய அளவில் காங்கிரசை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்ற ஸ்டாலினின் பிளானுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசி இருந்தார். காங்கிரசுடன் மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறிய நிலையில், லோக்சபா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனியாக போட்டியிடும். நாங்கள் காங்கிரசுடன் கூட்டணி வைக்காமல் மக்களுடன் கூட்டணி வைப்போம். காங்கிரஸ், பாஜக எல்லாம் ஒன்றுதான். அதனால் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று மம்தா கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனால் ஸ்டாலின் - மம்தா இடையே கருத்து வேறுபாடு இருக்கும் என்று கருதப்பட்ட நிலையில்தான் தற்போது மம்தா இறங்கி வந்து ஸ்டாலினின் முன்னெடுப்பை ஆதரித்துள்ளார். ஸ்டாலினின் இந்த கோரிக்கை தேசிய அளவில் தற்போது கவனம் பெற தொடங்கி உள்ளது.

இந்திய அரசின் கிக் மேக்கராக  இருந்த கருணாநிதி விட்ட இடத்தை அவரது மகனான ஸ்டாலின் தொடர்கிறார்.

 

No comments: