டோனோ தன்யோ ஆடிட்டோரியத்தில் புதன்கிழமை நடந்த டாடா ஸ்டீல் செஸ் இந்தியா போட்டியில் , மூன்று சுற்றுகளுக்குப் பிறகு, ஹான்ஸ் நீமனுடன் சேர்ந்து, வெஸ்லி சோ ,அரவிந்த் சிதம்பரம் ஆகியோரை விஸ்வநாதன் ஆனந்த சிறப்பான ஆட்ட்டத்தை வெளிப்படுத்தினார்.
முதல் சுற்றில் சோவை எதிர்த்துப் போட்டியிட்ட 56 வயதான இந்திய ஜாம்பவான், இரண்டாவது சுற்றில் வெய் யியிடம் டிராவில் சிக்கிய பிறகு,
ஒரு அற்புதமான வெற்றியைப் பதிவு செய்தார். மூன்றாவது சுற்றில், இந்த ஜாம்பவான் இளம் சகநாட்டவரான அரவிந்தை தோற்கடித்தார்.
முன்னாள் உலக விரைவு சம்பியனான வோலோடர் முர்சினை வீழ்த்திய நீமன் தனது தொடக்க ஆட்டத்தில் விதித் குஜராத்திக்கு எதிராக டிரா செய்து ஆர்.
பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார்.
பெண்கள் பிரிவில், அமெரிக்க வீராங்கனை கரிசா யிப் 2.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இளம் இந்திய வீராங்கனை ரக்ஷிட்டா ரவி அவரை டிராவில் நிறுத்துவதற்கு முன்பு, அவர் ஸ்டாவ்ரூலா சோல்கிடோவை வீழ்த்தி தனது பிரச்சாரத்தை சிறப்பாகத் தொடங்கினார். மூன்றாவது சுற்றில், இங்கு அதிக மதிப்பீடு பெற்ற வீராங்கனையான அலெக்ஸாண்ட்ரா கோரியாச்கினாவை யிப் வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறினார்.

No comments:
Post a Comment