Saturday, February 7, 2026

பாகிஸ்தான் வெளியேறியதால் 4500 கோடி ரூபா இழப்பு


  



 இந்தியாவுக்கு எதிரான ரி20 உலகக்கிண்ணப் போட்டியில்  பாகிஸ்தான் விளையாட மறுத்ததால் அடுத்து ஐசிசி-க்கு 4500 கோடிகளுக்கு மேல் இழப்பு ஏற்ப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.டி20 உலகக் கிண்ணத் தொடரை  இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்துகின்றன.

இந்த தொடரில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி பெப்ரவரி 15 ஆம் திக‌தி நடைபெற இருந்தது. இந்த நிலையில் தான் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தது. ஆனால் விலகலுக்கான காரணத்தை பாகிஸ்தான் தெளிவாக தெரிவிக்கவில்லை.

இந்தியா  ,பாகிஸ்தான் ஆகிய  அணிகளுக்கு இடையிலான போட்டிதான் அனைத்து உலகக்  கிண்ணப் போட்டிகளிலும்  அதிகம் பார்க்கப்படும் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.  இது அதிக வருவாயையும் ஈட்டும் போட்டியாக பார்க்கப்படுகிறது. தற்போது பாகிஸ்தான் விலகியதை அடுத்து 4500 கோடி ரூபா வரை இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் ஒளிபரப்பு, பிரீமியம் விளம்பரம், ஸ்பான்சர்ஷிப்கள், டிக்கெட் விற்பனை , சட்டப்பூர்வ பந்தயம் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் அடங்கும். வேறு எந்த போட்டியும் இந்த மதிப்பை நெருங்கவில்லை.

இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான விளம்பர வருவாய் மட்டும் சுமார்  300 கோடி ரூபாவாக  இருந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. போட்டியில் 10 வினாடிகள் கொண்ட விளம்பர ஸ்லாட்டுக்கு  2.5 மில்லியன் முதல்  4 மில்லியன்  ரூபா வரை செலவாகும். இது முழு போட்டியிலும் மிகவும் விலையுயர்ந்த விளம்பர ஸ்லாட்டாக இருக்கலாம். இந்தப் போட்டி நீக்கப்பட்டால் ரி20 உலகக் கோப்பையின் முழு நிதி அமைப்பையும் மாற்றக்கூடும். 

இந்த, போட்டி நடத்தப்படாவிட்டால், இந்தியா   பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கு சுமார் ரூ.200 கோடி இழப்பு ஏற்படக்கூடும். பாகிஸ்தான்  கிறிக்கெற் சபை ஐ.சி.சி.யிடமிருந்து 5.75% வருவாய்ப் பங்கைப் பெறுவதாகக் கூறப்படுகிறது. இந்த வருவாய் தோராயமாக $34.51 மில்லியன் (தோராயமாக ₹316 கோடி) ஆக இருக்கலாம். பிசிபி இந்த வருவாயையும் இழக்கும் அபாயத்தில் உள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டி எங்கு நடந்தாலும், மைதானம் எப்போதும் ஹவுஸ்ஃபுல்லாக இருக்கும். இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் மற்ற போட்டிகளை விட மிகவும் விலை உயர்ந்த விலைக்கு விற்கப்படுவது வழக்கம். தற்போது போட்டி நடைபெறாமல் போவதால் இதிலிருந்தும் பெரிய இழப்பு ஏற்படும்.

No comments: