Sunday, February 1, 2026

அதிர்ச்சி தரும் கருத்துக் கணிப்புகள் சூடாகும் தமிழக தேர்தல் களம்


 பாமகவின் மம்பழம் துண்டு துண்டாக சிதறியது

மகனை எம்பியாக்க கட்சி நடத்துகிறார் பிரேமலதா

திமுகவுக்கு எதிராக காங்கிரஸுக்குள்  போர்க்கொடி

எடப்பாடிக்குத் தூது விடும் பன்னீர்ச்செல்வம்

தமிழக தேர்தலுக்கான திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. கூட்ட்டணிக்கட்சிகளை சமாதானப் படுத்துவதில் பிரதான கட்சிகள்  முனைப்புக்காட்டுகின்றன. தோழமைக் கட்சிகளை சமாதானப் படுத்த ஸ்டாலின் முயற்சி செய்கிறார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் பாரதீய ஜனதா செல்வாக்குச் செலுத்துகிறது.

தேர்தலுக்கு முன்னைய ஒருதலைப் பட்சமான  கருத்துக் கணிப்புகள் நடுநிலையான வாக்காளர்களைக் குழப்புகின்றன.பெரும்பாலான திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்குன் என  பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் இன்று  இந்திய நாடாளுமன்றத்  தேர்தல் நடந்தாலும் திமுக கூட்டணியே வெற்றிபெறும் என இந்தியா டுடே, சி வோட்டர்ஸ்  ஆகியனவற்றின்  கணிப்பு தெரிவிக்கின்றன. தமிழகத்தின் தலைவிதியை மாற்றி அமைகும் எனக் கூறப்படும் விஜயின் தவெகவுக்கு 3வது இடம் கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.

45% வாக்குகளுடன் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும், 33% வாக்குகளுடன் அதிமுக கூட்டணி ஒரே ஒரு தொகுதியிலும்  வெற்றிபெறும் என்கிறது கணிப்பு. தவெக 15% வாக்குகளை பெறும்  ஆனால்  ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என  கணிப்பு வெளியாகியுள்ளது.

வழக்கமாக  நாடாளுமன்றாத் தேர்தலுக்கு முன்னரும், பின்னரும்தான் கருத்துக்கணிப்புகள் வெளியாகும். ஆனால், இந்தியா டுடே  , சி வோட்டர் இணைந்து நடத்தும் 'மூட் ஆஃப் தி நேஷன்' கருத்துக்கணிப்பு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி , ஓகஸ்ட் மாதங்களில் வெளியாகும். தற்போது  தேர்தல் நடத்தப்பட்டால், என்டிஏ கூட்டணி, இந்தியா கூட்டணி எத்தனை தொகுதிகளை வெல்லும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்கம் தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும்.

இந்தியா டுடே ஆய்வாளர்கள், பல்வேறு அரசியல் கணிப்புகளின்படி, தவெக வரவிருக்கும் தேர்தலில் 15% முதல் 20% வரை வாக்கு சதவிகிதத்தைப் பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக தரப்பில் எடுக்கப்பட்ட ஒரு இரகசியக் கணிப்பில், தங்களுக்கு 30% வாக்குகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போது 15% மட்டும் வாக்கு சதவிகிதம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, விஜய்யின் அரசியல் வருகை குறிப்பாக இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. தவெக பெறும் வாக்குகள் பிரதானமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் வாக்கு வங்கிகளிலும் சரிவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மட்டுமல்லாது 2026 தேர்தலில் திமுக கூட்டணி ஒரு வலுவான நிலையில் இருந்தாலும், விஜய்யின் தவெக மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுத்து வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் தேர்தல் முடிவுகளில் பெரும் மாற்றத்தைச் செய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்கத் தேர்தலைத் தீர்மானிக்கும் சக்தியாக ஒரு காலத்தில் இருந்த டாக்டர் ராமதாஸை  இன்ரு யாருமே திரும்பிப் பார்க்கவில்லை. கட்சிக்குள் உருவான பூகம்பம் குடும்பத்தைப் பிரித்துவிட்டது.  ராமதஸின் மகன் அன்புமணி தனது பரிவாரங்களுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குள் சரணடைந்து விட்டார். அப்பாவும், மகனும் ஒன்றாக இருக்கும்போதே தேர்தல்களின் படுதோல்வி. இனிமேல் மேலே எழு வாய்ப்பு இல்லை என்றே கூறலாம். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ராமதாஸ் தூது விட்டார். அங்குள்ள திருமாவளவன் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால்   விஜயின் பனையூர்பகம் வண்டியைத் திருப்பிவிட்டார்.

விஜயகாந்த் உயிரோடு இருக்கும்  போதே கட்சியின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்தது. அந்தக் கனவில் இருந்து இன்னமும் மீளாத பிராமலதா மேடைகளில் சவால் விடுகிறார். மகனை எம்பியாக்குவதற்கு மிரட்டுகிறார். ஸ்டாலினும், எடப்பாடியும் பிடி கொடாமல் நழுவுகிறார்கள்.

பன்னீரை நம்பி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறியவர்கள் அனைவரும் அவரைக் கைவிட்டுவிட்டனர். ஒருவர் மீண்டும் எடப்பாடியிடன் சென்றுவிட்டார். ஒன்னொருவர் விஜயின் பக்கம் சாய்ந்துள்ளார். மற்றைவர்கள்  அனைவரும் அறிவாலயம் சென்று ஸ்டாலினுடன் இணைந்து விட்டனர்.

இத்தனை ஆண்டுகளாக நல்ல பிள்ளைபோல அமைதியாக  இருந்த தமிழக காங்கிரஸ் தலைவர்கள்  இப்போதுமுரன்டு பிடிக்கத்தொடாங்கி விட்டனர். அதிக தொகுதி ஆட்சியில் பங்கு என விஜய்  போட்ட வலையில் வசமாகச் சிக்கி விட்டனர்.

காங்கிரஸ் உடனான 40 இட மோதல் கூட்டணி விரிவடைந்தாலும், பிரதான கூட்டணிக் கட்சியான காங்கிரஸிற்கும் தி.மு.-விற்கும் இடையே தொகுதிப் பங்கீட்டில் கடும் உரசல் நிலவியது.

காங்கிரஸ் கட்சி இந்த முறை தி.மு.-விடம் 40 இடங்களைக் கோரியது.  ஆனால், தி.மு. தரப்போ கடந்த தேர்தல்களின் செயல்திறன் மற்றும் தற்போது பெருகியுள்ள கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை ஆகியவற்றைக் காரணம் காட்டி, காங்கிரஸின் கோரிக்கையை ஏற்க மறுத்தது.. பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கும் கனிமொழி இந்தச் சிக்கலான சூழலைச் சுமுகமாக முடிக்க, முதல்வர் மு..ஸ்டாலின் தனது சகோதரியும்  பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழியை பேச்சுவார்த்தை நடத்த அனுப்பினார்.

கனிமொழி - ராகுல் உயர்மட்ட சந்திப்பு நடந்தது. இந்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் நடந்ததாக சொல்லப்படுகிறது.

  தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இருந்தபோதிலும்   தொகுதிப் பங்கீடு குறித்து எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடமளிக்க வாய்ப்பே இல்லை என்பதை திமுக திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

அமைச்சரவையில் இடமளிக்க வாய்ப்பே இல்லை என்பதே திமுகவின் நிலைப்பாடாக இருக்கிறது. இந்த மீட்டிங்கில் காங்கிரஸை மதிக்க வேண்டியதன் அவசியத்தை ராகுல் காந்தி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.. மேலும், தொகுதிப் பங்கீட்டுச் சிக்கலைத் தீர்க்க கார்கே தலைமையிலான குழுவுடன் திமுக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.  ஆட்சிய்ல் பங்கு இல்லை என்பதை ராகுலுக்கு விளக்கமாக எடுத்துச் சொல்லப்பட்டது. திமுக கூட்டனியில் காங்கிரஸ் இருக்கும் எனப்தை ராகுல் உறுதிப் படுத்தியுள்ளார்.

தேர்தல் திகதி அறிவித்த பின்னர் தமிழ்க அரசியல் மேலும் சூடு பிடிக்கத் தொடங்கும்

ரமணி

1/2/26

    

No comments: