ரி20 உலகக் கிண்ணத் தொடரில் ஒரு போட்டி மீதம் இருக்கையில் லீக் சுற்றில் இருந்ட்து
அவுஸ்திரேலியா வெளியேறியது.
இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் அவுஸ்திரேலியா ஒரு
வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.ஸிம்பாப்வே தனது இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியா இரண்டு புள்ளிகளையு, , ஸிம்பாப்வே 4 புள்ளிகளையும் பெற்றன. ஸிம்பாப்வே, அயர்லாந்து ஆகியவற்றுக்கிடையேயான
இன்றைய போட்டி மழைகாரணமகக் கைவிடப்பட்டதால்
இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி
கொடுக்கப்பட்டது. ஸிம்பாப்வே 5 புள்ளிகளுடன் சூப்பர் 8 க்குள் நுழைந்துள்ளது.ஓமானுடனான
போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றால்
4 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும்.
ரி 20 உலகக் கிண்ணப் போட்டியில்
ஸிம்பாப்வே சூப்பர் 8 கட்டத்தை எட்டுவது இதுவே முதல் முறை. 2024 ஆம் ஆண்டு உலகக் கிண்ண
வடிவம் மாற்றப்பட்டதிலிருந்து, ஸிம்பாப்வே குரூப் ஸ்டேஜை கடந்து செல்வது இதுவே முதல்
முறை. இருப்பினும், டி20 உலகக் கோப்பையில் ஸிம்பாப்வே குழு கட்டத்தைத் தாண்டி முன்னேறுவது
இது இரண்டாவது முறை மட்டுமே. 2022 ஆம் ஆண்டில்
டைசி 12 இடங்களை எட்டியது. ஆனால் வடிவமைப்பு மாற்றத்திற்குப் பிறகு இது ஸிம்பாப்வேயின் முதல் சூப்பர் 8 ஆகும்.
2026 ரி20 உலகக் கிண்ணத்தில் குரூப் நிலையிலேயே அவுஸ்திரேலியா வெளியேற்றப்பட்டது.
முன்னதாக, 2009 உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலியா
குரூப் சுற்றிலேயேவெளியேறியது. . இந்தியா,
இலங்கை, ஸிம்பாப்வே, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய ஏழு அணிகள் சூப்பர் 8க்குத் தகுதி பெற்றூள்ளன.

No comments:
Post a Comment