மொராக்கோவிற்கு எதிரான ஆப்பிரிக்கக் கிண்ண (AFCON) இறுதிப் போட்டியில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, செனகல் பயிற்சியாளர் பாப் தியாவுக்கு ஆப்பிரிக்க உதைபந்தாட்ட கூட்டமைப்பு தடை விதித்துள்ளதாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
ஜனவரி
18 ஆம்
திகதி ரபாட்டில்
நடந்த இறுதிப் போட்டியின் போது, "விளையாட்டுக்குக் கேடு விளைவித்ததற்காகவும், "விளையாட்டுக்கு
அவப்பெயரை ஏற்படுத்தியதற்காகவும் இந்த
அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
இங்கிலீஷ்
பிரீமியர் லீக்கில் விளையாடும் செனகல் ஃபார்வர்டுகளான இலிமான் நிடியாயே ,இஸ்மாயிலா சார் ஆகியோர் "நடுவருக்கு
எதிராக மோசமான நடத்தை" காரணமாக இரண்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டனர்.
இறுதிப்
போட்டியின் போது பல்வேறு குற்றங்களுக்காக
செனகல் உதைபந்தாட்ட கூட்டமைப்புக்கு
(FSF) மொத்தம் USD
615,000 அபராதம்
விதிக்கப்பட்டது.
விளையாட்டுக்கு
ஒவ்வாத நடத்தை" காரணமாக, மொராக்கோ ஃபார்வர்ட் இஸ்மாயில் சாய்பாரிக்கு மூன்று போட்டிகள் தடை , 100,000 அமெரிக்கடொலர் அபராதம் விதிக்கப்பட்டது, அதே நேரத்தில் கப்டனும்
டிஃபெண்டருமான அக்ரஃப் ஹகிமிக்கு இரண்டு போட்டிகளில் விடையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
" தகாத நடத்தைக்காக"
ராயல் மொராக்கோ உதைபந்தாட்ட கூட்டமைப்புக்கு
(FRMF) 200,000 அமெரிக்க
டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.
VAR மறுஆய்வுப் பகுதிக்குள் படையெடுத்து காங்கோ நடுவரின் பணியைத் தடுத்த வீரர்கள், தொழில்நுட்ப ஊழியர்களின் "முறையற்ற நடத்தைக்கு" கூடுதலாக 100,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.
மொராக்கோ ஆதரவாளர்கள் செனகல் வீரர்களின் கவனத்தை சிதறடிக்க லேசர்களைப் பயன்படுத்தியதால் 15,000 அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டது.

No comments:
Post a Comment