Thursday, April 9, 2026

மழையால் கைவிடப்பட்டது கொல்கத்தா பஞ்சாப் போட்டி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2026 லீக் ஆட்டம், விடாது பெய்த கனமழை காரணமாக  கைவிடப்பட்டது.

ஏடன் கார்டனில் நடைபெற்ற போட்டியில் நானயச் சுழற்சியில்  வெற்றி பெற்ற  கொல்கத்தா கப்டன் அஜிங்கியா ரஹானே முதலில்துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார்.  பஞ்சாப் வேகப்பந்துவீச்சாளர் சேவியர் பார்ட்லெட் வீசிய இரண்டாவது ஓவரில், தொடக்க வீரர் ஃபின் ஆலன் (6) , கேமரூன் கிரீன் (4) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

கொல்கத்தா அணி 3.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 25  ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை பெய்யத் தொடங்கியது. அப்போது கப்டன் ரஹானே 8 ஓட்டங்களுடனும், அங்க்ரிஷ் ரகுவன்ஷி 7  ஓட்டங்க‌ளுடனும் களத்தில் இருந்தனர்.

மழை நின்ற பிறகு மைதானத்தைச் சீரமைக்க ஊழியர்கள் கடுமையாகப் போராடினர். 5 ஓவர்கள் கொண்ட ஆட்டத்தை நடத்துவதற்கான கடைசி நேரமான 11:14 மணி வரை காத்திருந்தும், மைதானம் விளையாடத் தகுதியற்ற நிலையில் இருந்ததால் போட்டி இரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதன் மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

ஐபிஎல் விதிகளின்படி, போட்டி இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் தனது நிலையைச் சற்று உயர்த்தியுள்ளது.  இந்த சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யக் காத்திருந்த கொல்கத்தா அணிக்கு, இந்தப் புள்ளி ஒரு சிறிய ஆறுதலாக அமைந்துள்ளது.

  

 

No comments: