எகிப்துக்கு எதிரான ஆட்டத்தின் போது ஸ்பானிய ரசிகர்கள் இஸ்லாமிய எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியதன்
காரணமாக, ஸ்பானிய உதைபந்தாட்ட கூட்டமைப்புக்கு எதிராக பீபா செவ்வாயன்று ஒழுங்கு
நடவடிக்கைகளைத் தொடங்கியது. கடந்த
செவ்வாயன்று பார்சிலோனாவில் நடைபெற்ற நட்பு ஆட்டத்தின் போது ரசிகர்களின் நடத்தை குறித்து
விசாரித்து வருவதாக ஸ்பானிய பொலிஸார் தெரிவித்தனர்.
"எகிப்துக்கு
எதிரான நட்பு ஆட்டத்தில் நடந்த சம்பவங்களுக்காக, ஸ்பானியஉதைபந்தாட்ட கூட்டமைப்புக்கு
எதிராக பீபா ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது,"
என்று உதைபந்தாட்ட நிர்வாக அமைப்பு ஒரு அறிக்கையில்
கூறியது.
மைதானத்தில் சில ரசிகர்கள் எழுப்பிய கோஷங்கள் மரியாதையற்றவை
, பொறுத்துக்கொள்ள முடியாதவை என்று இஸ்லாமியரான
யமால், கூறினார். தன்னை யாரும் குறிவைக்கவில்லை
என்பது ஒரு பொருட்டல்ல என்றும் அந்த பார்சிலோனா நட்சத்திர வீரர் கூறினார்

No comments:
Post a Comment