தமிழகத்தில் நடைபெற்ற 11 தேர்தல்க்ளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி படு தோல்வியைச் சந்தித்தது. தனது தலமையிலான ண்அணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தோல்விகளுக்கு பாரதீய ஜனதா தான் காரணம் எனக் கண்டு பிடித்த எடப்பாடி பாரதீய ஜனதாவுடனான கூட்டணியைத் துறந்தார்.
மோடி, அமித் ஷா ஆகியோர் அழைப்பு விடுத்தும் எடப்பாடி
இறங்கிவரவில்லை.கடந்தவாரம் ஒரு நாள் திடுதிப்பென டெல்லிக்குப் பறந்த எடப்பாடி அமித்ஷாவை
இரகசியமாகச் சந்தித்தார்.
அதிமுக தலைவர்களுக்குக் கூடத் தெரியாமல் எடப்பாடி டெல்லி
சென்றது கழகத்துக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அப்பொழுதே
கூட்டணி உறுதி எனத் தகவல்கள் வெளியாகின. டெல்லியில்
அதிமுக அலுவலகத்தைப் பார்க்கச் சென்றதாககூறிய எடப்பாடி அமித்ஷாவைச் சந்தித்ததை மழுப்பினார்.எடப்பாடியின் மகனுடைய தில்லு முல்ல்லு ஆவணங்கள் அமித்ஷாவின் கையில் இருப்பதால் எடப்பாடி இறங்கி வந்த்தாகவும் செய்திகள் பரவின.
தமிழகத்தில்
மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழக பாஜக
மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படுகிறார் என்ற பரபரப்பான தகவல்கள் பரவி வருகிறது. அண்ணாமலைஒயும்
இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.இதற்கிடையே தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
நாளை தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்கிறார். நாளை இரவு எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக
தலைவர்கள் அமித்ஷாவை சென்னையில் சந்தித்து
பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2021
சட்டசபை தேர்தலின்போது அதிமுகவும், பாஜகவும் கூட்டணியாக போட்டியிட்டன. சட்டசபை தேர்தலில்
திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதன்பிறகு கடந்த 2022ம் ஆண்டில் இந்த கூட்டணி முறிந்தது.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தல் உள்ளிட்டவற்றில்
பாஜகவும், அதிமுகவும் வெவ்வேறு கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அந்த தேர்தல்களிலும்
திமுக கூட்டணி கட்சிகள் தான் அமோக வெற்றி பெற்றன.
சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்கும்
அமித்ஷாவை நள்ளிரவில் மூத்த அதிமுக தலைவர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க திட்டம்
வகுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பின்போது அதிமுக - பாஜக
கூட்டணி பற்றி இருதரப்பும் விவாதிக்க உள்ளதாகவும், அதன்பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை
மாற்றிய பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமித்ஷா
தமிழ்நாட்டில் தங்கி இருக்கும் போது சீமானை
சந்திக்கப்போவதாகவும் தகவல் பரவி உள்ளது. அண்மையில்
ஒரு கல்லூரி விழாவில் சீமானும், அண்ணாமலையும்
ஒரே மேடையில் தோன்றினார்கள். சீமான் மோடியைப் புகழ்ந்து பேசிஒனார்,அண்ணாமலை, சீமானை வானளாவக் பாராட்டினார். அப்போதே விமர்சகர்களுக்குச்
சந்தேகம் ஏற்பட்டது.
உள்துறை
அமைச்சர் அமித் ஷாவின் தமிழ்நாட்டு விஜயத்தை
முன்னிட்டு முக்கியமான உத்தரவு ஒன்றை நிர்வாகிகளுக்குஎடப்பாடி பிறப்பித்து உள்ளார். 5 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டுள்ள
போதும்.. அதனால் யாரும் வீட்டிற்கு போக வேண்டாம்.. சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம்..
எல்லோரும் சென்னையிலேயே இருக்குமாறு முக்கிய நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி
உள்ளார். முக்கியமாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார்,
கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் சென்னையிலேயே இருக்க வேண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு
உள்ளதாம். ஆனால் செங்கோட்டையனுக்கு இந்த அறிவிப்பு செல்லவில்லை. அவர் சென்னையில்தான்
இருக்கிறார். ஆனாலும் அவருக்கு அறிவிப்பு செல்லவில்லை. அதேபோல் தங்கமணி சென்னையில்
இல்லை என்றும் கூறப்படுகிறது.
தமிழக
அரசியலில் மும்முனை போட்டி நிலவுகிறது. திமுக - காங்கிரசின் இந்தியா கூட்டணி. அதிமுக
- பாஜகவின் என்டிஏ கூட்டணி. கடைசியாக தமிழக வெற்றிக் கழகம். இதில் தமிழக வெற்றிக்கழகம்..
திமுகவை அரசியல் எதிரி என்று கூறிவிட்டது. பாஜகவை கொள்கை எதிரி என்று கூறிவிட்டது.
இதனால் அவர்கள் இருவருடனும் திமுக சேரவே வாய்ப்பு இல்லை. எனவே தமிழக வெற்றிக் கழகம்
3வது அணியாக உருவெடுத்து இருப்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அப்படி இருக்க மிச்சம்
இருப்பது நாம் தமிழர்தான்.
விஜய் - சீமான் கூட்டணி கணிசமான வாக்குகளை பெற்று... தேமுதிக 2011ல் திமுகவை எதிர்க்கட்சி சீட்டில் இருந்து அகற்றியது போல.. அதிமுகவை எதிர்க்கட்சி கூட ஆக விடாமல் செய்ய முடியும். சீமான் இதில் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை பொறுத்தே களம் மாறுபடும். பெரியார் விவகாரம், பெண் பலாத்கார வழக்கு காரணமாக தற்போது முடங்கி உள்ள சீமான் மீண்டும் களமாடும் போது அது பெரிய வாக்கு வங்கி மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
No comments:
Post a Comment