அரபுநாடுகளின் விரோதியாகச் சித்தரிக்கப்படுபவர் நெதன்யாகு, காஸா யுத்தம், ஈரானின் மீதான தாக்குதல் என்பனவற்றால் சர்வதேச ஊடகங்களில் இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது.
நெதன்யாகு
நல்லவரா கெட்டவரா என்ற விவாதமும் இன்னொரு புறத்தில் நடைபெறுகிறது.
இஸ்ரேலின்
வீத தீரனாக விளங்குபவர் நெதன்யாகு. அவர்தான்
இஸ்ரேலின் ஹீரோ என்றே பலரும் நினைக்கின்றனர்.
ஆனால், நெதன்யாகுவுக்கு எதிரானவர்கள் இஸ்ரேலிலும்
உள்ளனர். நெதன்யாகுவின் அமைச்சரவையிலேயே
அவரை எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள்.
"பீபீ'
என அழைக்கப்படுபவர் பெஞ்சமின் நெதன்யாகு.
இஸ்ரேலில் மிக நீண்டகாலம் பிரத்மரானவர் என்ற பெருமையைப் பெற்றவர். முதலில் 1996 ஆம்
ஆண்டுமுதல் 1999 ஆம் ஆண்டுவரை, பின்னார்
2009 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுவரை இஸ்ரேலின் பிரதமராகப் பதவி வகித்தவர். 2022 ஆம் ஆண்டு முதல் இன்ஸுவரை இஸ்ரேலின் பிரதமராக இருக்கிறார் நெதன்யாகு
இஸ்ரேலியப் பிரதமராக நெதன்யாகு இருக்கும் போதே அவருக்கு
எதிராக 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊழல் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டது. பிரதமர்
மீது குற்றச் சாட்டு என்பதால் பொலிஸார் விட்டு விடவில்லை. விசாரணை தொடர்ந்தது. நீதிமன்றத்தில்
குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய்ப்பட்டது.
2023
ஆம் ஆண்டு காஸாவில் ஹமாஸ் தாக்குதல் நடத்தியதால்
நெதன்யாகுவுக்கு எதிரான ஊழல் குற்றச் சாட்டு
வழக்கு தாமதமாகிறது. அவர் மீதான குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 வருட சிறைத்
தண்டனை கிடைக்கும். நெதன்யாகு குற்றம் செய்யவில்லை
என அவரது வழக்கறிஞர்கள் வாதிடுகிறார்கள்.
நெதன்யாகுவின்
மீதான ஊழல் குற்றச்சாட்டு விபரங்கள் 2018 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம்திகதி பத்திரிகைகளில்
வெளியானபின்னர் மக்கள் மத்தியில் பேசு பொருளானது.
அன்றைய
இஸ்ரேலிய அரச வழக்கறினர் ஷாய் நிட்சன், அன்றைய
அட்டரி ஜெனரல் அவிச்சாய் மண்டேல் பிட் ஆகியோர் நெதன்யாகுவின் மீதான குற்றச் சாட்டுகளை
நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றனர்.
இலஞ்சம்,
மோசடி, நம்பிக்கை மீற ஆகிய மூன்று வழக்குகள்
நெதன்யாகுவுக்கு எதிராகப் பதியப்பட்டன.
இஸ்ரேலிய
வரலாற்றின் முதன் முதலாக குற்றவியல் குற்றச்
சாட்டுகள் சுமத்தப்பட்ட பிரதமர் என்ற கறை நெதன் யாகுவின் மீது படிந்தது.
இலஞ்சக்
குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 வருட சிறைத்தண்டனையும், மோசடி, நம்பிக்கை மீறல் குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டால்
மூன்று வருடச் சிறைத் தண்டனையும் கிடைக்கும்.
குற்றச் சாட்டுகளின் எதிரொலியால் சுகாதார, விவசாயம், புலம் பெயர் விவகாரம் ஆகிய அமைச்சுப் பதவிகளை நெதன்யாகு துறந்தார்.
நெதன்யாகு
பிரதமராக நீடிக்கலாமா இல்லையா என்ற என்ற விவாதம் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
நெதன்யாகுவுக்கு
எதிரான வழக்குகள் நீதிமன்றத்தில் நடை பெறுகின்றன.
ஹமாஸின் தாக்குதல், ஈரானுடனான போர் ஆகியவற்றால் விசாரணை தாமதமாகிறது.
நெதன்யாகுவுக்கு
எதிராக போர்க்குற்றம் சுமத்தப்பட்டு சர்வதேச
விசாரணை நடைபெற வேண்டும் என்ற கருத்தும் தீவிரமடைந்துள்ளது.
இந்த
நிலையில் அமெரிக்க ஜனாதிபது மூக்ககை நுழைத்து சொல்லிய கருத்து எதிர் வினைகளைத் தோற்றுவித்துள்ளது.
நெதன்யாகுவின்
மீதான குற்றச் சாட்டுகளை வாபஸ் பெற வேண்டும்ம், அவருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும்
என ட்ரம்ப் அறிக்கை விடுத்துள்ளார்.
ட்ரம்பின்
கருத்துக்கு எதிரான கண்டனங்கள் பருமளவில் எழுந்துள்ளன.
இஸ்ரேல் சிறையில் நெதன்யாகு அடைக்கப்படுவாரா இல்லையா எனப்தை நீதிமன்றம் முடிவு செய்யும்.
No comments:
Post a Comment