கடந்த
ஞாயிற்றுக்கிழமையும் வழமைபோல போண்டி கடற்கரை மக்களால் நிரம்பியிருந்தது. யூத சமுதாயத்தினர் பாரம்பரிய
ஹனுக்கா பண்டிகையின் தொடக்கம் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான யூத மக்கள் போண்டி கடற்கரையில் குழுமி இருந்தனர். கடற்கரை
மணலிலும் பூங்காவிலும் சிரிப்பொலிகளும் மகிழ்ச்சியான குரல்களும் ஓங்கி
ஒலித்தன.
திடீரென்று கேட்ட துப்பாக்கிக்குண்டு மழை அந்த அமைதி
குலைந்தது. கறுப்பு நிற உடை அணிந்த
இரண்டு பேர்,சரமாரியாகச் சுட்டனர்.
சிரிப்பும் கொண்டாட்டமுமாக
இருந்த போண்டி கடற்கரை அவலக் குரலால் பீதியடைந்தது. எங்கும் மரண ஓலம். உயிரைப்
பாதுகாக்க மக்கள் தலை தெறிக்க ஓடினார்கள். இரக்கமற்ற அந்த
இருவரும் கண்மண் தெரியாமல் சுட்டுத்தள்ளினர்.
இந்தக் கொடூரத் தாக்குதல் நடைபெற்ற போது கண்ணுக்கெட்டிய தூரத்தில் பொலிஸார் எவரும் இருக்கவில்லை. உயிர்ப் பயத்தில் அனைவரும் ஓடிய போது ஒரே ஒருவர் மட்ட்டும் கார்களின் பின்னால் மறைந்து ஓடிப்போய் கொலைகாரனின் துப்பாக்கியைப் பறித்தார்.
பழக்கடை உரிமையாளரான அகமது அல் அகமது என்பவர்,
மக்களை காப்பாற்றும் முயற்சியில் துப்பாக்கியால் சுடும் நபரை மடக்கிப் பிடித்து
துப்பாக்கியைப் பிடுங்கினார். கையில் ஆயுதம் இல்லாத பயங்கரவாதி ஓட்டம் பிடித்தார் சம்பவ இடத்துக்கு உடனடியகக் களம் இறங்கிய
பொலிஸார். ஒருவரைச்
சுட்டுக் கொன்றனர் மற்றையவர்
துப்பாக்கியால் சுடப்பட்டு உயிருடன் பிடிக்கப்பட்டார். “உண்மையான
ஹீரோ” என்று நியூ சவுத் வேல்ஸ்
மாகாண முதல்வர் கிறிஸ் மின்ஸ் அகமது
அல் அகமதுவைப் பாராட்டியுள்ளார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் அவரை அவுஸ்திரேலியப் பிரதமர்
சென்று பார்வையிட்டார்.
கடற்கரையில்
நீச்சலுடையில் இருந்தவர்கள், தங்கள் குழந்தைகளுடன் விளையாடியவர்கள் என நூற்றுக்கணக்கான மக்கள்
அலறிக் கொண்டு ஓடினர். சுமார் பத்து நிமிடங்களுக்கு மேல் இந்த கோரத்
தாக்குதல் நீடித்தது.10 வயது சிறுமி முதல்
87 வயது முதியவர் வரை குறைந்தது 16 பேர்
பரிதாபமாக உயிரிழந்தனர். 42-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சர்வாதிகாரி
ஹிட்லரின் முகாமில் இருந்து உயிர்
தப்பிய ஒருவரும் இந்தச் அம்பவத்தில் பலியானார்.
கடும்
துப்பாக்கிக் கட்டுப்பாடுகளைக் கொண்ட அவுஸ்திரேலியாவில், கடந்த முப்பது ஆண்டுகளில் நடந்த மிக மோசமான துயரச்
சம்பவம் இதுவாகும். பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்தத் தாக்குதலை பயங்கரவாதச் செயல் என்று வேதனையுடன் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் அவுஸ்திரேலியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. துப்பாக்கிதாரிகளில்
ஒருவரான, 50 வயதான சஜித் அக்ரம் என்பவரை சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றனர். அவரது 24 வயது மகன் நவீத்
அக்ரம் காயங்களுடன் உயிருடன் பிடிபட்டார்.
கடும்
துப்பாக்கிக் கட்டுப்பாடுகளைக் கொண்ட ஆஸ்திரேலியாவில், கடந்த முப்பது ஆண்டுகளில் நடந்த மிக மோசமான துயரச்
சம்பவம் இதுவாகும். பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்தத் தாக்குதலை பயங்கரவாதச் செயல் என்று வேதனையுடன் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் ஆஸ்திரேலியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அவுஸ்திரேலிய யூத நிர்வாகக் குழுவின் புதிய புள்ளிவிவரங்களின்படி , 2023 ஆம் ஆண்டு இஸ்ரேலின் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் அவுஸ்திரேலியா யூத எதிர்ப்புத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது எனத் தெரியவந்துள்ளது.
கடந்த
ஆண்டு முகமூடி
அணிந்த நபர்கள் மெல்போர்னில் உள்ள அடாஸ் இஸ்ரேல்
ஜெப ஆலயத்துக்குத் தீ வைத்தனர். ஏழு
மாதங்களுக்குப் பிறகு, மற்றொரு
மெல்போர்ன் ஜெப ஆலயமான கிழக்கு
மெல்போர்ன் ஹீப்ரு சபையின் கதவுகளுக்கு தீ வைக்கப்பட்டது.
கடந்த
ஆண்டும் சிட்னியில் உள்ள கோஷர் லூயிஸ் கான்டினென்டல் கிச்சனில் மற்றொரு தீ விபத்து நடத்தப்பட்டது.
அடாஸ்
இஸ்ரேல் ஜெப ஆலயம் ,உணவு
நிறுவனம் ஆகிய இரண்டின் மீதான
தாக்குதல்களும் ஈரானிய புரட்சிகர காவல்படை இருக்கலாம்
என என்று
அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு தெரிவித்தது. ஈரானின்
தூதர் அஹ்மத் சடேகி உட்பட
மூன்று ஈரானிய தூதர்களை ஓகஸ்ட்
மாதம், பிரதமர் அல்பானீஸ் வெளியேற்றினார், அவுஸ்திரேலிய மண்ணில் ஈரான் யூத எதிர்ப்பு தீவைப்பு
தாக்குதல்களை இயக்கியதாக உளவுத்துறை மதிப்பீடு முடிவு செய்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அவுஸ்திரேலியாவில்
யூத எதிர்ப்பு சம்பவங்கள் வரலாற்று ரீதியாக உயர்ந்த மட்டங்களில் இருப்பதாக ECAJ கண்டறிந்துள்ளது 2023 ஆம்
ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி முந்தைய
சராசரி ஆண்டு எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட ஐந்து
மடங்கு அதிகம், இது 2021 மற்றும் 2024 க்கு இடையில் எந்த
J7 நாட்டிலும் இல்லாத மிகப்பெரிய அதிகரிப்பு ஆகும். J7 என்பது இஸ்ரேலுக்கு வெளியே மிகப்பெரிய யூத சமூகங்களைக் கொண்ட
ஏழு நாடுகளைக் குறிக்கிறது, அவை யூத எதிர்ப்புக்கு
எதிரான J7 பணிக்குழுவை உருவாக்குகின்றன : அமெரிக்கா, கனடா, யு இங்கிலாந்து, பிரான்ஸ்,
ஜேர்மனி, ஆர்ஜென்ரீனா அவுஸ்திரேலியா.
அவுஸ்திரேலியாவில்
யூத சமூகத்திற்கு அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து விவாதிக்க, ஞாயிற்றுக்கிழமை தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கும் குறைவான
காலத்திற்கு முன்பு J7 பணிக்குழு சிட்னியில் கூடியது.
"இந்தத் தாக்குதல்
அவுஸ்திரேலியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள யூத எதிர்ப்பு
சம்பவங்களின் ஒரு தொந்தரவான தொடரில்
சமீபத்தியது" என்று அவதூறு எதிர்ப்பு லீக்கின் தீவிரவாத எதிர்ப்பு மற்றும் உளவுத்துறையின் மூத்த துணைத் தலைவர் ஓரன் செகல் கூறினார். இந்த
சம்பவங்கள் பெருகிய முறையில் வன்முறையாக மாறி வருவதாகவும் அவர்
தெரிவித்தார்.
தாக்குதல் நடத்திய தந்தையும் மகனும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியானது. ஆனால் மகன் அவுஸ்திரேலியாவில் பிறந்தவர் என்று அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தார்கள்.தந்தை நாட்டிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார் என்பதை அவர்கள் முதலில் உறுதிப்படுத்தவில்லை.
தகப்பன்
அவுஸ்திரேலிய குடிமகன் அல்ல என்பதை உள்துறை
அமைச்சர் டோனி பர்க், உறுதிப்படுத்தினார்,
1998 இல் மாணவர் விஸாவில் அவுஸ்திரேலியாவிற்கு வந்து 2001 இல் கூட்டாளர் விசாவிற்கு
மாற்றப்பட்டார். அதன் பிறகு அவர்
குடியுரிமை திரும்பும் விஸாவில் மூன்று முறை வெளிநாடு சென்றுள்ளார்.
தகப்பன்
இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும் அவர் படிப்பதற்காக அவுஸ்திரேலியாவுக்கு
வந்ததாகவும் பின்னர் வதிவிட விஸா பெற்றதகவும் அவுஸ்திரேலிய
அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் தெலுங்கானாவைச் சேர்ந்தவர்
என்பதை இந்தியா உறுதிப்
படுத்தியுள்ளது.
அவர்களிடம்
ஆறு துப்பாக்கிகள் இருந்தன - அவை சட்டப்பூர்வமாக வாங்கப்பட்டன
- மேலும் யூதக் கூட்டத்தை குறிவைக்க ஒரு மேம்படுத்தப்பட்ட வெடிக்கும்
சாதனத்தை ஒன்று சேர்த்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2019 ஆம்
ஆண்டில் மகனை விசாரித்து, அவரது
தந்தையை நேர்காணல் செய்த அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு (ஆசியோ) வெளிப்படுத்திய பின்னர், அவர் அதற்கு ஆதரவாக
இருந்தார், ஆனால் அவர் ஒரு அச்சுறுத்தல்
இல்லை என்று கருதியது.
"இந்த நபர்
யூத சமூகத்தை குறிவைத்து, வன்முறைச் செயலையோ அல்லது யூத-விரோதச் செயலாகக்
கருதக்கூடிய எந்தவொரு செயலையோ திட்டமிட்டு, பரிசீலித்து அல்லது ஊக்குவித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை
என்று அவர்கள் தீர்மானித்தனர்.
இந்தத் தாக்குதலில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த 87 வயது நிரம்பிய அலெக்ஸ் கிளெயிட்மேன் பலியாகி உள்ளனர். இவர் 2ம் உலகப்போர் சமயத்தில் ஜேர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் இனப்படுகொலையில் இருந்து தப்பியவர் பயங்கரவாத தாக்குதலில் மனைவியை காக்க நினைத்து பலியாகி உள்ளார்
87 வயது நிரம்பிய அலெக்ஸ் கிளெயிட்மேன் என்பவரைப் பற்றிய தகவல்
வெளியாகி உள்ளது. ஹோலோகாஸ்ட் படுகொலை என்பது இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நடந்தது. 1941ம் ஆண்டு முதல்
1945ம் ஆண்டு வரை ஜேர்மனியின்
சர்வாதிகாரி ஹிட்லரின் நாசி படைகள் ஐரோப்பியாவில்
வாழும் யூதர்களை குறிவைத்து கொன்றது.மொத்தம் 60 லட்சம் பேரை படுகொலை செய்தது.
இதனை ஹோலோகாஸ்ட் படுகொலை என அழைக்கின்றனர்.
இந்த படுகொலையில் இருந்து தான் அலெக்ஸ் கிளெயிட்மேன்
தப்பினார். சைபீரியாவில் இருந்த அவர் ஹிட்லரின் நாசி
படையால் பிரச்சனையை எதிர்கொண்டார். ஹிட்லரிடம் இருந்து தப்பிய யூதர்கள் பல நாடுகளில் தஞ்சமடைந்தனர்.
அலெக்ஸ் கிளெயிட்மேன் உக்ரைனில் தஞ்சமடைந்தார். உக்ரைனில் இருந்து அவர் தனது மனைவி
லாரிசாவுடன் அவுஸ்திரேலியாவில் குடியேறினார். லாரிசாவும் ஹிட்லரின் ஹோலேகால்த் படுகொலையில் இருந்து தப்பியவர் தான். இந்நிலையில் தான் சம்பவத்தன்று அலெக்ஸ்
தனது மனைவி லாரிசா, பேரக்குழந்தைகள் உள்பட பிற குடும்ப உறுப்பினர்களுடன்
பாண்டி கடற்கரைக்கு சென்று ‛ஹனுக்கா'திருவிழாவில் பங்கேற்றார். அப்போது தான் துப்பாக்கிச்சூடு நடந்தது.
அதில் அவர் பலியானார். துப்பாக்கிச்சூடு
நடந்தபோது அவரது குடும்பத்தினர் அனைவரும் தரையில் படுத்தனர். அலெக்ஸ் கிளெயிட்மேனும் தரையில் படுத்தார். ஆனால் அவரை விட்டு மனைவி
லாரிசா சிறிது தூரத்தில் படுத்து கிடந்தார். இதனால் மனைவிக்கு ஏதாவது ஆகிவிடும் என்று அவர் அருகே அலெக்ஸ்
கிளெயிட்மேன் சென்றபோது குண்டு பாய்ந்து அவர் பலியானார்.
இதுபற்றி மனைவி லாரிசா கூறுகையில், ‛‛என் கணவர் அலெக்ஸ்
கிரெயிட்மேன் என்னை பாதுகாக்க நினைத்தபோது துப்பாபக்கி குண்டு பாய்ந்து இறந்துவிட்டார்'' என அழுதார்.
இப்
இந்தக் கொரூரத்தின் பின்னணி என்ன.. ஏதேனும் அமைப்புக்காக இதைச் செய்தார்களா, தனிப்பட்ட காரணம் ஏதேனும் உள்ளதா என்பது தெரியவில்லை. விசாரணைக்குப் பின்னரே இது தெரிய வரும்.
வர்மா
21/12/25





No comments:
Post a Comment