Friday, December 7, 2012

தடம்மாறிய தமிழ்ப்படங்கள் 42


 மகனைப்போல் வ ளர்க்கும் பெண்ணைப் படுக்கை அறைக்கு அழைக்கும் ஆணைப்பற்றிய‌வித்தியாசமான கதைக்கருவுடன் 1976 ஆம் ஆண்டு வெளியான படம் "உணர்ச்சிகள்."

   சென்னையில் உள்ள லொட்ஜ் ஒன்றில் ரூம் போயாகப்பணியாற்றுகிறார் கமல்.அந்த லொட்ஜில் பலரும் வந்து தங்கிச்செல்வார்கள். விபசாரியான ஸ்ரீ வித்யா அங்கு தங்கி இருந்தபோது பொலிஸார் சுற்றி வளைக்கின்றனர். அந்த இக்கட்டான நிலையில் ரூம் போயான கமல், ஸ்ரீ வித்யாவைக்காப்பாற்றுகிறார். பலிசிடமிருந்து தன்னைக்காப்பாற்றிய கமல் மீது ஸ்ரீ வித்யாவுக்குப்பாசம் பிறக்கிறது. கமலைத்தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று நல்ல உடைகள் வாங்கிக்கொடுத்துத்தனது மகன் போல் வளர்க்கிறார்.

   க‌ம‌லுக்கு, ஸ்ரீ வித்யாமீது தாய்ப்பாச‌‌ம் இல்லை. விப‌ச்சாரியான‌ ஸ்ரீ  வித்யாவை அனுப‌விக்க‌த்துடிக்கிறார். ஸ்ரீ வித்யாவைத்தேடி வீட்டுக்கு ஆண்க‌ள் வ‌ருவார்கள். ஸ்ரீவித்யா  அவ‌ர்க‌ளுட‌ன் செல்வார்.அப்போது க‌ம‌லின் விர‌க‌தாப‌ம் அதிக‌ரிக்கும். ஆசையை அட‌க்க‌முடியாத‌ க‌ம‌ல் தன் மன‌தில் இருப்ப‌, ஸ்ரீ வித்யாவிட‌ம் கூறி  த‌ன் ஆசைக்கு இண‌ங்கும் ப‌டி வ‌ற்புறுத்துகிறார்.விப‌ச்சாரியாக‌ இருந்தாலும் ம‌க‌னைப்போல் வ‌ள‌ர்த்த‌ க‌ம‌லுட‌ன் ப‌டுக்கையைப்ப‌ங்குபோட‌ விரும்பாத‌ ஸ்ரீ வித்யா,அவ‌ரை வீட்டை விட்டுத்துர‌த்துகிறார்.
 
  ஸ்ரீ வித்யாவின் வீட்டை விட்டு வெளியேறிய‌ க‌ம‌ல் த‌ன் ஆசையைப்பூர்த்திசெய்வ‌த‌ற்காக‌ ப‌ல‌ பெண்க‌ளுட‌ன் தொட‌ர்பு கொள்கிறார்.பெண்க‌ளின் தொட‌ர்பு கார‌ண‌மாக‌ க‌ம‌லுக்குப்பாலிய‌ல் நோய் தொற்றுகிற‌து.காம‌வெறியினால் உயிர‌க்கொல்லும் வியாதி தொற்றிய‌தை நினைத்து க‌ம‌ல் துடிக்கிறார்.

  க‌மல்ஹாச‌ன்,ஸ்ரீ வித்யா,எல்.காஞ்ச‌னா,மேஜ‌ர் சுந்த‌ர்ராஜ‌ன்,வி.கோபால‌கிருஷ்ண‌ன்,எஸ்.வி.ராம‌தாஸ்,கோபி,ச‌ந்திர‌காந்தா ஆகியோர் ந‌டித்த‌ன‌ர்.க‌தை,திரைக்க‌தை,வ‌ச‌ன‌ம்,இய‌க்க‌ம் ஆர்.சி.ச‌க்தி.

  காம‌வெறியில் சி‌க்கிச்சீர‌ழியும் பாத்திர‌த்தில் க‌ம‌ல் சிற‌ப்பாக‌ ந‌டித்தார்.விப‌ச்சாரியாக‌ ந‌டித்த‌ ஸ்ரீ வித்யா ர‌சிக‌ர்க‌ளைக்க‌வ‌ர்ந்தார்.க‌ண‌வ‌னை இழ‌ந்து விர‌க‌ தாப‌த்தில் ஏங்கும் காட்சியில் எல்.காஞ்ச‌னா ந‌ன்றாக‌ ந‌டித்தார். ப‌‌ட‌த்தின் க‌தையும் கிளு கிளுப்பூட்டும் காட்சிக‌ளும் ர‌சிக‌ர்க‌ளைத்தியேட்ட‌ருக்கு இழுத்த‌து.

   "ராச‌லீலா" என்ற‌பெய‌ரில் ம‌‌லையாள‌த்தில் வெளிவ‌ந்த‌ இப்ப‌ட‌ம் 100நாட்க‌ளைக்க‌ட‌ந்து வெற்றிபெற்ற‌து.ம‌லையாள‌ப்ப‌ட‌த்திலும் க‌ம‌லே க‌தாநாய‌க‌னாக‌ ந‌டித்தார்.க‌ண‌வ‌னை இழ‌ந்த‌ பாத்திர‌த்தில் ஜெய‌சுதா ந‌டித்தார்.

ர‌ம‌ணி
மித்திர‌ன் 25/11/12

திரைக்குவராதசங்கதி 48

ரஜினிஅண்மையில்நடித்துவெளிவந்த‌தர்மத்தின்தலைவன்,மன்னன்,குருசிஷ்யன்,சந்திர‌முகிஆகியஅனைத்தும்வெற்றிப்படங்கள்.தேவர்பிலிம்ஸ்படஅதிபர்சாண்டோசின்னப்பதேவரின்மறைவுக்குப்பின்னர்அந்தநிறுவன‌ம் பல பிர‌ச்சினைகளைச் சந்தித்தது.தேவரின் மறைவுக்குப் பின்னர் திரை உலகத்தில்இருந்துஒதுங்கிஇருந்ததேவரின்தண்டாயுதபாணிபிலிம்ஸ்மீண்டும்ஒருபடம்தயாரிக்கமுடிவுசெய்தது.கதாநாயகனாகதேவரின்மீதுமதிப்புவைத்திருக்கும்ரஜினினியைஒப்பந்தம்செய்தார்கள்.அப்படத்தின்இரண்டாவதுகதாபாத்திரத்துக்குபிர‌புவைஒப்பந்தம்செய்தனர்.பிரவுக்குஜோடியாக யாரை ஒப்பந்தம் செய்யலாம்எனயோசித்தவர்கள்புதியநடிகைஒருவரை தேடினார்கள்.த‌தெலுங்குப்படங்களில்நடித்துக்ண்டிருந்தகுஷ்புவைபிர‌புவின்ஜோடியாகஒப்பந்தம்செய்தனர்.தர்மத்தின்த‌லைவன்நடித்தபோதுகுஷ்புவுக்குஒருதமிழ்வார்த்தைகூடத்தெரியாது.பின்னர்தமிழ்நாட்டின்பெணாகவே குஷ்பு  மாறிவிட்டார்           குஷ்புவும், பிர‌புவும் அதன்பின்னர் பல படங்களில் ஜோடியாக நடித்து சிறந்த ஜோடி எனப் பெயர் பெற்றனர். இருவரின்வாழ்க்கையிலும் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. பிர‌பு குஷ்பு விவகார‌ம் கிசு கிசுவையும் தாண்டி திருமணம் வரைசென்றது.
ர‌ஜினிக்குபெயரைக்கொடுத்தபடங்களில்ஒன்று16வயதினிலே.சப்பாணிகமல்,மயிலுஸ்ரீதேவியுடன்,பர‌ட்டைர‌ஜினிஎன்றுவிமர்சகர்கள்புகழ்ந்துஎழுதினார்கள்.அப்படத்துக்குப்பின்னர்11வருடங்கள்கழித்துபார‌திராஜாவின்கொடிபறக்குதுபடத்தில்ர‌ஜினிநடித்தார்.அப்படத்தில்தான்இயக்குநர்மணிவண்ணன்முதல்முதலாகவில்லனாகநடித்தார்.ர‌ஜினிபடமும்இல்லாமல்பார‌திராஜாபடமுமில்லாதுவெளியானகொடிபறக்குது100நாட்கள்ஓடினாலும்வெற்றி பெறவில்லை.
         ர‌ஜினியும் பிர‌புவும் முதன்முதலில் நடித்த திரைப்படம்குருசிஷ்யன். இப்படத்தின்மூலம்தான்நடிகைகௌதமிதமிழ்ப்படத்தில்அறிமுகமானார்.பஞ்சுஅருணாசலத்துக்காகபடமொன்றுநடித்துக்கொடுக்கர‌ஜினிவிரும்பினார்.அதற்காகஸ்.பி.முத்துராமனுடன்ஆலோசனைசெய்தார்.இர‌ண்டுகதாநாயகன்உள்ளநகைச்சுவைகதைஉள்ளது.நீங்களும்பிர‌புவும்நடித்தால்நன்றாகஇருக்கும்எனஸ்.பி.முத்துμõமன்கூறினார்.ர‌ஜினியும்அதற்குஇணங்கினார்.25நாட்களில்படத்தைமுடித்துவிடுவேன்என்றார்எஸ்.பி.முத்துராமன்ஒருபடம்முடிவதற்கு25நாட்கள்தேவைஎனஎஸ்.பி.முத்துராமனின்திட்டத்தைர‌ஜினிமுதலில்நம்பவில்லை.சென்னையில்படப்பிடிப்புநடந்தால்தாமதமாகும் என்பதால்மைசூரில் படப்பிடிப்பு நடைபெற்றது.திட்டமிட்டதற்கு மாறாக23நாட்களில்படப்பிடிப்புடிந்தது.மேலதிகமானஇர‌ண்டுநாட்களும்படப்பிடிப்புக்குழுவினருடன்மைசூரில்தங்கிஇருந்தார்.
      ர‌ஜினிகாந்த்.ஏ.வி.எம்.தயாரிப்பில்வெளியானவெற்றிப்படம்மனிதன்.அப்படத்தின்கிளைமாக்ஸ்காட்சிகள்அனைத்தும்முடிந்தபின்னர்தயாரிப்பாளர்கள்படத்தைப்பார்த்தனர்.குகனுக்குகிளைமாக்ஸ்பிடிக்கவில்லை.தான்திர்பார்த்ததுபோன்றுகிளைமாக்ஸ்இல்லைஎன்றாலும்படம்வெளிவர‌ட்டும்என்றார்.மனிதன்வெளியாகும்நாள்அறிவிக்கப்பட்டுவிட்டது.நிலைமையைர‌ஜினியிடம்எடுத்துக்கூறியஇயக்குநர்எஸ்.பி.முத்துராமன்ஞாயிற்றுக்கிழமைஒருநாள்கால்ஷீட்தரும்டிர‌ஜினியிடம்வேண்கோள்விடுத்தார்.தயாரிப்பாளர்களுக்குத்தெரியாமல்புதியகிளைமாக்ஸ்காட்சிபடமாக்கப்பட்டது.புதியகிளைமாக்ஸைப்போட்டுக்காட்டினார்.எஸ்.பி.முத்துராமன்.தயாரிப்பாளருக்குபிடித்துவிட்டது.மிகவும்அருமையாகஇருக்கிறதெனப்பாராட்டினார்.ஏ.வி.எம்.மின்விருப்பத்துக்காகர‌ஜினிஉட்படஅனைவரும்ஒருநாள்நடித்தஉண்மையைஇயக்குனர்கூறினார்.தயாரிப்பாளர்அனைருடனும்தொலைபேசியில்தொடர்புகொண்டு நன்றி கூறினார்தயாரிப்பாளர் குகன்.
ரமணி
மித்திரன்18/02/2007
108

மனம் மாறும் விஜயகாந்த் காத்திருக்கும் கருணாநிதி


இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலைக் குறி வைத்து தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும்  காய்நகர்த்த தொடங்கிவிட்டன. திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியன தேர்தலைச் சந்திப்பதற்காக குழு அமைத்துள்ளன.  காங்கிரஸ் தலைமையும் குழு அமைத்து நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை எடுத்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி  சேர்வீர்களா என்று நிருபர்கள் விஜயகாந்தைக் கேட்டபோது  சிரித்துக் கொண்டேசாதக சமிக்ஞை காட்டியுள்ளார்?காட்டியுள்ளனர்.

திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் ஒன்றை ஒன்று விட்டுப் பிரிய முடியாத நிலையில் உள்ளன.  காங்கிரஸுடனான  தொடர்பை விடுமாறு திராவிட முனனேற்றக் கழகத்தில்  உள்ள சிலர்  நெருக்கடி கொடுக்கின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தை  கை விடும்படி காங்கிரஸ் கட்சியிலுள்ள சிலர் வலியுறுத்துகின்றனர். காங்கிரஸ் கட்சியை மிரட்டும்  வகையில் பேசி எச்சரிப்பதுபோல்  அறிக்கை விடும் கருணாநிதி அந்தச் செய்தி மை அழியுமுன்பே மறுப்புத்தெரிவித்துவிடுவார். காங்கிரஸ்  கட்சியைக் கருணாநிதி  சாடும்போது  புகழகாங்கிதமடையும் தொண்டர்கள்  மறுநாள் கருணாநிதியின் குத்துக் கரணத்தைக் கண்டு நொந்து போகின்றனர்.
தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களின் போது கூட்டணி இல்லாமல் வெற்றிபெறுவதற்கு  எந்தக் கட்சியாலும் முடியாது. ஆகையினால் பலமான கூட்டணியை  அமைப்பதற்கு பிரதான கட்சிகள்  முயற்சி செய்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் தமிழகத்தில் அதிகூடிய வாக்கு வங்கி உள்ளது. பலமான கூட்டணி அமைத்தால் இவைகளால்  பிரமாண்டமான வெற்றியைப் பெற முடியும். ஆகையினால் கூட்டணிக்கான முன் முயற்சிகளில் இக்கட்சிகள் முன்னெடுப்பை தொடங்கியுள்ளன.

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக  திராவிட முன்னேற்றக் கழகம் அவ்வப்போது சில கருத்துக்களைக் கூறி வந்தாலும்  கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்குத் தயக்கம் காட்டி வருகின்றது. காங்கிரஸுக்கு மாற்றீடாக  மத்தியில் அரசமைக்கக் கூடிய பலம் பொருந்திய கட்சி இல்லை என்பதே  திராவிட முன்னேற்றக் கழகத்தின் அபிப்பிராயம்.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கூட்டணிக்குள் விஜயகாந்த்தும் சேர்ந்து விட்டால் ஜெயலலிதாவின்  பாடு திண்டாட்டமாக இருக்கும். 2ஜி ஸ்பெக்ரம் பிரச்சினையே திராவிட முன்னேற்றக் கழகத்தை  மண் கௌவச் செய்தது. ஸ்பெக்டரம் விவகாரத்தின்  சூடு  தற்போது குறைந்துள்ளதாக ஸ்பெக்ரம்ஊழலை வைத்து இனிமேல் அரசியல் செய்ய முடியாது என்பதனால்  திராவிட  முன்னேற்றக் கழகம் கொஞ்சம் தெம்பாக  உள்ளது. இந்திய நாடாளுமன்ற லோக் சபாத் தேர்தல்  அடுத்த வருடம் நடைபெறவுள்ளது.  ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி காலியாகவுள்ளது.  நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் தெரிவு செய்யும் பலம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடம் உள்ளன. எஞ்சிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்க்கட்சிகளின்  கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

 மைத்துனன் சதீஷை  நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகுபார்த்த  ஆசைப்பட்ட விஜயக்காந்தின் எண்ணத்தை ஜெயலலிதா தவிடு பொடியாக்கியுள்ளார். அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கப் போகும்   கனிமொழியை மீண்டும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பக்கூடிய பலம் கருணாநிதிக்கு இல்லை. விஜயகாந்த், ,கருணாநிதி, காங்கிரஸ் இணைந்தாலும் இரண்டு நாடாளுமன்ற  உறுப்பினர்களை பெற முடியாது. இடதுசாரிகளும்  ஆதரவளித்தால் தான் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற முடியும். ஆகையினால் மேல் சபை நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு புதிய  கூட்டணியும் பரிணமிக்கும் வாய்ப்பு உள்ளது. 
வைகோ,  டாக்டர் ராமதாஸ் ஆகிய இருவரும் தேர்தல் கூட்டணியில் முக்கிய பங்கு வகித்தார்கள்.  வெற்றிதோல்வியை தீர்மானிக்கும் வாக்கு வங்கி ஒரு காலத்தில் இவர்கள் இருவரிடமும் இருந்தது.  இன்று தேடுவாரின்றி இருவரும் நடுத்தெருவில்  அநாதையாக  நிற்கின்றனர்.

 யாருடனும் கூட்டணி இல்லை என்று விஜயகாந்த் கூறியதை மனப் பாடமாக்கி ஒப்பிக்கிறார் ராமதாஸ்.  யாருடன் கூட்டணி சேர்ந்தால்  ஆட்சியைப் பிடிக்கலாம் என்று கருணாநிதியும் ஜெயலலிதாவும் கணக்கு போடும் வேளையில்  பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தை ஆட்சி  செய்யும் என்ற கனவில் மிதக்கிறார் டாக்டர் ராமதாஸ்.  தனது அரசியல் சுயநலனுக்காக தமிழகத்தில் சாதிக் கலவரத்தை ராமதாஸ் தூண்டி விடுகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகச் குற்றம் சுமத்துகின்றனர். 

வன்னியர் என்ற சாதி அடையாளத்துடன் அரசியலில்  நுழைந்த ராமதாஸ் தனது இருப்பை வெளிப்படுத்துவதற்காக சாதி  அரசியலைக்  கையில் ஏடுத்துள்ளார். சாதி அரசியல்  ராமதாஸைக் கைவிட்டு  விட்டது என்றாலும் சாதியை கைவிடமாட்டேன் என்று கங்கணம் கட்டியுள்ளார் ராமதாஸ். கட்சியின் நலனைப் புறந்தள்ளிவிட்டு மகனை முன்னிறுத்தி  அரசியல் வியாபாரம்  செய்த ராமதாஸை  தொண்டர்கள் கைவிட்டு விட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றை விட அதிக வாக்கு வங்கி தனக்கு இருப்பதாகக் கருதுகிறார் டாக்டர் ராமதாஸ். 

மாநிலத்தில் ஆட்சியை இழந்தாலும் மத்திய அரசில் ஆட்சியில் பங்குபற்ற வேண்டும் என்றே திராவிட‌ முன்னேற்றக் கழகம் கருதுகிறது. மத்திய அரசைத் தக்கவைக்க வேண்டும் என்பதில்  குறியாக உள்ளது. காங்கிரஸ் தமிழக சட்ட சபையில்  அதிக உறுப்பினர்களைப் பெற்றது போல்  நாடாளுமன்றத்திலும் அதிக  ஆசனங்களைப் பெற வேண்டும் என்றும்  கருதுகிறார் விஜயகாந்த். ஆகையினால்  மேல் சபை நாடாளுமன்றத் தேர்தலின் போது புதிய கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது.  இந்தக் கூட்டணியால் ஜெயலலிதாவுக்கு  இப்போது  ஆபத்து எதுவும் ஏற்படாது நாடாளுமன்றத் தேர்தலில்  பலத்த சவாலைச் சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் உண்டாகும்.
 
திராவிட முன்னேற்றக் கழகத்துடன்  கூட்டணி என்ற சாதக சமிக்ஞையினால் கட்சியைப் பாதுகாத்துள்ளார்  விஜயகாந்த்.  ஜெயலலிதாவுடன் ஐக்கியமாகக் காத்திருக்கும்  விஜயகாந்தின் கட்சியை சேர்ந்த தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தமது முடிவைப் பரிசீலனை செய்யும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
மெட்ரோநியூஸ் 07/12/2012

Thursday, November 29, 2012

அரசியலான தூக்குத் தண்டனை


மும்பை தாக்குதலில் உயிருடன் பிடிக்கப்பட்ட கசாப்புக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது   அரசியலில் அதிர் வலைகளை  எழுப்பியுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அனைத்தும் பாகிஸ்தானிலே உள்ள குழுவினராலேயே நடத்தப்படுவதாக இந்தியா குற்றம்சாட்டிய போதெல்லாம் பாகிஸ்தான் அதனை மறுதலித்து தனது கண்டனத்தை தெரிவித்தது.

மும்பையில் நடைபெற்ற தாக்குதல் இந்தியாவுக்கு மட்டுமன்றி உலகையே அதிர்ச்சியடைய வைத்தது.  தாக்குதலை நடத்தியவர்கள் தாக்குதல் நடைபெற்ற இடங்களை தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தனர். மூன்று நாள் போராட்டத்தின் பின்பே  பயங்கரவாதிகளின் பிடியிலிருந்த தாஜ் ஹோட்டல்  மீட்கப்பட்டது. இந்தத் தாக்குதலை நடத்தியவர்களில் கசாப்பைத் தவிர மற்றையவர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 கசாப்பின் வாக்கு மூலத்தின் பிரகாரம் மும்பைத் தாக்குதல் திட்டம் பாகிஸ்தானில் தான் தீட்டப்பட்டது என்றும் பாகிஸ்தானிலிருந்து தாக்குதல் வழி நடத்தப்பட்டது என்றும் உறுதி செய்யப்பட்டது.  இதனை  பாகிஸ்தான் முதலில் மறுத்தது மும்பைத் தாக்குதலில் உயிரோடு பிடிக்கப்பட்ட கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து கசாப் மேன் முறையீடு செய்தார். மேன் முறையீட்டு மனுவும் கசாப்புக்கு கை கொடுக்கவில்லை. ஜனாதிபதியிடம்  கருணை மனு சமர்ப்பித்தார்.  ஜனாதிபதியும் கைவிட்டு விட்டார்.

கசாப்புக்குத் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டதும் இவ்வளவு விரைவாக மிக இரகசியமாக கசாப் தூக்கில் இடப்படுவார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. கசாப்புக்கான தூக்குத் தண்டனை நாள் குறிக்கப்பட்டால் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இதற்கெதிரான பேராட்டங்கள் நடைபெறும் என்பதனால் கசாப்பின் இறுதி நாள் மிக இரகசியமாக வைக்கப்பட்டது. புனே ஏர்வாடா சிறையில் யாரையோ தூக்கிலிடப் போகிறார்கள் என்பதை அங்குள்ளவர்கள் அறிந்தனர். தூக்கு மேடை சரி பார்க்கப்பட்டதன் மூலம் அங்குள்ளவர்கள் இதனை அறிந்தனர்.

கசாப்பைத் தூக்கிலிட்ட பின்னரே அதனை உலகுக்கு அறிவித்தது இந்தியா. கசாப்பின் உடலை வாங்குவதற்கு பாகிஸ்தான் மறுத்து விட்டது. கசாப்பின் உடலை தம்மிடம் அல்லது கசாப்பின் பெற்றோரிடம் ஒப்படைக்கும்படியும் இல்லையேல் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தப் போவதாகவும் தலிபான்கள் எச்சரித்துள்ளனர். பாகிஸ்தானில் அடிக்கடி தாக்குதல் நடத்தும் தலிபான் இயக்கம் இப்போது இந்தியாவையும் குறி வைத்துள்ளது.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இன்னொருவர் அப்சல் குரு இந்திய நாடாளுமன்றத் தாக்குதலின் சூத்திரதாரி அப்சல் குருவை எப்போது தூக்கிலிடப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு  இந்திய அரசு இதுவரை பதிலேதும் கூறவில்லை. ஆனால் கசாப்பை அவசரமாகவும் இரகசியமாகவும் தூக்கிலிட்டது இந்தியா. இந்திய நாடாளுமன்ற நெருக்கடியிலிருந்து மீள்வதற்காகவே கசாப் தூக்கிலிடப்பட்டதாகவும் சில விமர்சகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்

கசாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அறிந்த இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  மும்பைத் தாக்குதலில் பலியான வெளிநாட்டவர்களின் உறவினர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் ராஜீவ் கொலையாளிகளை  உடனடியாக தூக்கிலிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் பிரமுகர் இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி இருப்பவர்களை காப்பாற்றுவதற்காக தமிழ் தேசிய ஆர்வலர்கள்  போராடி வருகின்றனர்.  அவர்களை தூக்கிலிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள்  துடிக்கின்றனர். ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி விட்டு தமது கடமை முடிந்ததென்று  இருக்கின்றனர்.

பாகிஸ்தான் நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சப்ரஜித் சிங்கின் நிலை என்னாகுமோ என்று அவரது உறவினர்கள் பரிதவிக்கின்றனர். இந்திய,  பாகிஸ்தான் எல்லையில் சப்ரஜித் சிங்கை பாகிஸ்தான் படையினர் கைது செய்தனர். உளவு பார்க்க வந்ததாக குற்றம் சாட்டி நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட சப்ரஜித் சிங்குக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

சப்ரஜித்  சிங் சமர்ப்பித்த கருணை மனு நிலுவையில் உள்ளது. அவரது உயிரைக் காப்பாற்ற பாகிஸ்தானில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் முயற்சி செய்கின்றனர்.  கசாப்பைத் தூக்கிலிட்டதற்குப் பதிலடியாக சப்ரஜித் சிங்கை பாகிஸ்தான் தூக்கிலிடுமோ என்ற அச்சம் அவரது  உறவினர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட போது அதற்கு எதிராக வாக்களித்த இந்தியா அதே நாளில் கசாப்பைத் தூக்கிலிட்டது உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மெட்ரோநியூஸ் 30 /11/12



Sunday, November 25, 2012

திரைக்குவராதசங்கதி 47


திரைப்ப‌டங்கள்அனைத்தும்வெற்றிபெறவேண்டும்என்றேநடிகரும்ரசிகர்களும்விரும்புவார்கள்100ஆவதுபடம்பிரமாண்டமான‌வெற்றிப்படமாகஅமையவேண்டும்என்றேநடிகரும்,ர‌சிகர்களும்விரும்புவார்கள்.நடிகர்திலகத்தின்100ஆவது படமான நவராத்திரி, மக்கள்திலகத்தின்ஒளிவிளக்குஎன்பனமிகப் பெரியவெற்றிபெற்றன.வேறுஎந்தஒருநடிகரின்அல்லதுநடிகையின்100ஆவதுபடம்இப்படிவெற்றிபெற்றதில்லை.சர‌த்குமார்தனது100ஆவதுபடமானதலைமகன்வெற்றிபெறவேண்டும்எனமுழுமூசுச்டன்செயற்பட்டுவருகிறார்.சூப்பர்ஸ்டார்என்றபெயரெடுத்தர‌ஜினிகாந்த்தனது100ஆவதுபடத்தைர‌சிகர்களின்விருப்பத்துக்குமாறானதனதுஆத்மதிருப்திக்காகநடித்தார்.ர‌ஜினியின்100ஆவதுபடம்ஸ்ரீராகவேந்திரா.அக்ஷன்,ஸ்டைல்,கோபம்போன்றஎதுவுமற்ற அமைதி,அடக்கம்,பரிவுஆகியவைஅடங்கியபுதியதொருர‌ஜினியைராகவேந்திராவில்ர‌சிகர்கள்க‌ண்டனர்.ராகவேந்தரின்தீவிர‌பக்தன்ர‌ஜினிகாந்த்.அவர‌துவர‌லாற்றைதனது100ஆவதுபடமாகதயாரிக்கவேண்டும்எனர‌ஜனிவிரும்பினார்.ர‌ஜினியின்வெற்றிப்படங்கள்பலவற்றைஇயக்கியஎஸ்.பி.முத்துராமன்தான்அப்படத்தைஇயக்கவேண்டும்எனஅவர்விரும்பினார்.தனதுவிருப்பத்தை எஸ்.பி.முத்துராமனிடம் ர‌ஜினி கூறினார்.

        எஸ்.பி. முத்துராமனின்குடும்பம் சுயமரியாதைஇயக்கத்தில் அதி தீவிர‌ பற்றுள்ளது.அவர‌துதகப்பன்சுயமரியாதைஇயக்கத்தின்தீவிர‌மானறுப்பினர்.சுயமரியாதையின்கீழ்வளர்ந்தஎஸ்.பி.முத்துராமன்புராணப்படத்தைஇயக்கத்தயங்கினார்.தனதுநிலையைர‌ஜினியிடம்விரிவாகஎடுத்துக்கூறினார்.எஸ்.பி. முத்துராமனின் விளக்கத்தைர‌ஜினிஏற்றுக்கொண்டதால்அவருடன்அது பற்றிவிவாதிக்கம்பவில்லைராகவேந்தரின்வாழ்க்கையைபடமாக்கதகுதியானவர்தனதுகுருநாதர்எஸ்.பாலசந்தர்தான்எனமுடிவுசெய்தார்ர‌ஜினி.சற்றும்தாமதிக்காமல்தனதுமனதில்இருந்தஎல்லாவற்றையும்குருநாதர்கே.பாலச்சந்தரிடம்கூறினார்.எஸ்.பி.முத்துமராமனின்தயக்கம்பற்றிகுருநாதரிடம் கூறிய ர‌ஜினி இது பற்றிஅவருடன் பேசும்படி அவரிடம் வேண்டுகோள் விடுத்தார். ர‌ஜினியின் மனதில் உள்ள எண்ணங்களை நன்கு புரிந்த எஸ். பாலசந்தர்,ரஜினியின்வேண்டுகோளுக்குஇணங்கஎஸ்.பி.முத்துராமனைததனது வீட்டிற்குஅழைத்தார்.புராணப் படங்களைஇயக்குவதில்தனக்குஉள்ள சிக்கல்களை விலாவாரியாக எடுத்துக் கூறினார் எஸ்.பி. முத்துராமன்.அவர் தர‌ப்புநியாயங்களைஅவதானமாகக்கேட்டஎஸ்.பாலசந்தர்இறுதியில்தனதுதீ ர்ப்பைக் கூறினார்.
          ர‌ஜினியைமாறுபட்டவேடங்களில்இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். புராணப்படமொன்றில்ர‌ஜினியைஇயக்கஅவரால்முடியும்என்றநம்பிக்கையைஎஸ்.பி.முத்துராமனுக்குஏற்படுத்தினார்.ஸ்ரீராகவேந்திராவைகவிதாலயாதயாரிக்கும்.இதற்குரியவசதிகள்எல்லாவற்றையும்கவிதாலயாஏற்படுத்தித்தரும்.ர‌ஜினியின்உணர்வுகளுக்குமதிப்பளித்துஇதைஇயக்கஒப்புக்கொள்ளுங்கள்என்றுகே.பாலசந்தர்கூறினார்.கவிதாலயாபாலசந்தரின்சொந்தநிறுவனம்.வெற்றிப்படங்கள்பலவற்றைதந்தநிறுவனம்.கே.பாலசந்தர்கொடுத்தஊக்கம்எஸ்.பி.முத்துராமனின்மனதைமாற்றியது.ர‌ஜினியின்விருப்பப்ப‌டிஸ்ரீராகவேந்திராதயாரானது.எஸ்.பி.முத்துராமன்இயக்கினார்.குடும்பப்படங்கள், அடிதடிப் படங்கள்மட்டுமல்ல புராணப்படங்களையும்இயக்கமுடியும் என்று எஸ்.பி. முத்துராமன் வெளிப்படுத்தினார்.ஸ்ரீ ராகவேந்திரா தயாரான போதுர‌ஜினிஅசைவத்தைதவிர்த்தார்.அதனைஅறிந்தபடப்பிடிப்புக்குழுவினர் அனைவரும்அசைவத்தை துறந்தனர். ஸ்ரீராகவேந்திராமிகப்பெரியவெற்றி பெறவில்லை என்றாலும்ர‌சிகர்களின் மனதை கவர்ந்த படம்எனப் பெயர் பெற்றது.

ரமணி
மித்திரன் 11/02/07
107