Tuesday, September 30, 2008

தமிழககாங்கிரஸின் கனவுக்குமுற்றுப்புள்ளிவைத்த முதல்வர்


தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் இல்லை என்று முதல்வர் கருணா
நிதி வெட்டு ஒன்று துண்டு இரண்டு எனவெளிப்படையாக அறிவித்து விட்டார். விஜய
காந்தின் கட்சித் தொண்டர்களுக்கும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கும் இடையிலான
உரசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தஇரண்டு விஷயங்களினால் தமிழக அரசியல்
சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.தமிழக அமைச்சரவையில் இடம்பிடிக்க
வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் நீண்டகால கனவை முதல்வர் கருணாநிதி கலைத்துவிட்
டார். 1967 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாத்துøர தலைமையிலான திராவிட முன்
னேற்றக் கழகத்திடம் தமிழக அரசைப் பறிகொடுத்தபின்னர் தமிழகத்தில் தனது செல்வாக்கை
இழந்த காங்கிரஸ் கட்சி இழந்த செல்வாக்கைமீண்டும் பெறுவதற்கு எடுத்த முயற்சிகள்
எவையும் வெற்றியைக் கொடுக்கவில்லை.திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகம் ஆகியவை ஆட்சிஅமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி பெருத்துணை
புரிகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதுஅதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற திராவிட
முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைப்பதற்குரியஅறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை.
தோழமைக்கட்சிகளின் ஆதரவுடன் திராவிடமுன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்தது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மிகப் பெரிய கூட்டணியில் இப்போது
திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் தான் எஞ்சியுள்ளன. காங்கிரஸ் கட்சி
யின் ஆதரவுடன் தமிழக ஆட்சி நடைபெறுவதனால்ஆட்சியில் பங்கு கேட்டால் தமிழக அரசு
தந்துவிடும் என்று நம்பிய காங்கிரஸ் கட்சிபணிவுடன் ஆட்சியில் பங்கு கேட்டது.
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சிஎன்ற கோஷத்துடன் திராவிட முன்னேற்றக்
கழகம் ஆட்சி நடத்துகிறது. மத்தியில் கூட்டாட்சிமாநிலத்திலும் கூட்டõட்சி என்ற புதிய
கோஷத்தை தமிழக காங்கிரஸ் முன் வைத்தது.தமிழக ஆட்சியைப் பங்கு போட்டு தமது கட்சி
யில் உள்ளவரை அமைச்சராக்க வேண்டும்என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்
முயற்சி செய்தார். தமிழக ஆட்சியில் பங்குகேட்டால் புதுவையில் தமக்கு பங்கு தர வேண்டு
ம் என்று முதல்வர் கருணாநிதி கேட்டதும்தமிழக காங்கிரஸ் கட்சி மௌனமாகியது.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்துகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதவி
யுடன் தான் காங்கிரஸ் கட்சி புதுச்சேரியில்ஆட்சி நடத்துகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடம்கொடுத்தால்
புதுச்சேரி அமைச்சரவையில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இடந்தர வேண்டும்
என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.புதுவை அமைச்சரவையில் திராவிட முன்
னேற்றக் கழகம் இடம்பெறுவதற்கு புதுவையில் உள்ள காங்கிரஸ் கட்சி ஒரு போதும் ஒத்துக்
கொள்ளாது என்ற நம்பிக்கையிலேயேமுதல்வர் இந்த ஆலோசனையை வெளியிட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் போன்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சியிலும் பல பிரிவுகள் உள்ளன. காங்
கிரஸ் கட்சிக்குள் பிரிவுகள் பல இருந்தபோதும் புதுவை அமைச்சரவையில் திராவிட முன்
னேற்றக் கழகத்துக்கு இடம்கொடுக்கக் கூடாதுஎன்பதில் புதுவை காங்கிரஸ் உறுப்பினர்கள்உறுதியாக உள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கட்சியின்அமைச்சரவைக்
கனவை முதல்வர் தகர்த்த அதேவேளை விஜயகாந்தின் முதல்வர் கனவுக்கு குறுக்கே வடி
வேல் வந்து நிற்கிறார்.வடிவேலின் வீட்டின் மீதும் அலுவலகத்தின்
மீதும் கடந்த வாரம் நடந்த தாக்குதலுக்கு விஜயகாந்த் தான் காரணம் என்று வடிவேல் குற்றம்
சாட்டியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின்பின்னணியில்தான் வடிவேல் தன் மீது குற்ற
ம் சுமத்துவதாக விஜயகாந்த் கூறியுள்ளார்.வடிவேலின் வீட்டின் மீதான தாக்குதலுக்கும்
தனது கட்சிக்கும் தொடர்பு இல்லை என்று விஜயகாந்த் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
ஆøகயினால் தாக்குதலின் பின்னணியில் விஜயகாந்த் இருக்கிறாரோ என்ற சந்தேகம் சில
ரிடம் உள்ளது. தவிர இப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து வைப்பதற்குரிய எந்தவிதமான
ஒரு நடவடிக்கையையும் விஜயகாந்த் முன்னெடுக்கவில்லை.
நடிகர் சங்கத் தலைவராக இருந்து பல நல்லகாரியங்களைச் செய்த, விஜயகாந்த் அரசியல்
தலைவராகியதும் அரசியல் நோக்கத்துடனேயே செயற்படுகிறார்.
விஜயகாந்துடனான பிரச்சினையினால்உணர்ச்சிவசப்பட்ட வடிவேல், விஜயகாந்தை
எதிர்த்து போட்டியிடுவதற்காகவே அரசியல்கட்சி ஒன்றை ஆரம்பிக்கப் போவதாக கூறி
யுள்ளார்.
ரசிகர்களின் ஆதவுடன் அரசியல் கட்சிஆரம்பித்து ஆட்சியைப் பிடித்தவர்
எம்.ஜி.ஆர். ரசிகர்களின் பலத்தில் உள்ள நம்பிக்கையால் அரசியல் கட்சி ஆரம்பித்தார் விஜ
யகாந்த். சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த்மட்டும் வெற்றி பெற்றார். அவரை நம்பிப்
போட்டியிட்ட அனைவரும் தோல்வியடைந்தனர்.ரசிகர்களின் ஆதரவுடனும் அரசியல்
கட்சியின் பலத்துடனும் தேர்தலில் வெற்றிபெற்றவர் எஸ்.எஸ். ராஜேந்திரன்.
நெப்போலியன், எஸ்.எஸ். சந்திரன், ராதாரவி, என். வி. சேகர் ஆகிய நடிகர்களுக்கு ரசி
கர்களின் ஆதரவு பெரியளவில் இருக்கவில்øல என்றாலும் அரசியல் கட்சியின் பலத்தி
னால் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றனர். பலமான அரசியல் கட்சியின் செல்வாக்குடன்
தேர்தலில் போட்டியிட்ட சந்திரசேகர்தோல்வியடைந்தார்.
ரசிகர்களின் ஆதரவும் அரசியல் பின்புலமும் இல்லாத வடிவேல் கட்சி ஆரம்பிக்கப்
போவதாக கூறுவது நøகச்சுவை போல் தோன்றினாலும் பலமான அரசியல் கட்சி ஒன்று அவ
ருக்குப் பின்னால் இருக்கிறது.விஜயகாந்த்துக்கு எதிராக வடிவேல் பகிரங்
கமாகக் குற்றம் சாட்டியதால் வடிவேல் நடிக்கும் திரைப்படங்களுக்கு எதிராக விஜயகாந்
தின் கட்சித் தொண்டர்கள் கிளர்ந்தெழக்கூடும்.ஆகையால், வடிவேல் நடிக்கும் படங்கள்
வெளிவருவதில் சிக்கல் ஏற்படலாம்.எப்படியோ, சினிமாவுடன் மறக்கப்பட
வேண்டிய நகைச்சுவை அரசியலிலும் அரங்கேறத் தொடங்கிவிட்டது.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு 18 09 08

No comments: