Monday, November 17, 2008

தமிழர்களின் உணர்வுகளூக்கு மதிப்பளிக்குமா இந்தியமத்திய அரசு?



இலங்கையில் நடைபெறும் யுத்தத்தினால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காகத் தமிழ்நாட்டில் பெரும் போட்டி எழுந்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குஉணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்காமல் இலங்கை அரசுஇழுத்தடிக்கிறது. தமிழகத்தின் எழுச்சியையடுத்து இந்திய அரசின் அழைப்பையடுத்து இலங்கை அரசின் உயர் மட்டக்குழு டில்லிக்குச் சென்றதன் பின்னர் வன்னிக்கு உணவுப் பொருட்களும் மருத்துவ பொருட்களும்அனுப்பி வைக்கப்பட்டன.
வன்னியில் யுத்தத்தினால் அல்லலுறும் மக்களுக்குஉதவுவதற்கு தமிழக அரசு முன்வந்துள்ளது. இதற்காக தமிழக மக்களின் உதவியை அதுநா டியுள்ளது. தமிழக முதல்வரின்வேண்டுகோளையடுத்து இலங்கையில் அல்லலுறும் மக்களுக்கு உதவுவதற்காக தமிழக மக்கள்போட்டி போட்டு நிதி உதவி செய்து வருகின்றனர்.முதல்வர் கருணாநிதியை மூர்க்கமாக எதிர்க்கும் விஜயகாந்தும் இலங்கைத் தமிழ் மக்களுக்குஉதவத் தயார் என்று அறிவித்துள்ளார்.
தனது கட்சியின் சார்பில் சேகரிக்கப்படும்பொருட்களை மாவட்ட ஆட்சியாளரிடம்கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளார்.இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழகத்தின் குரல் உலக அரங்கில்ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது.தமிழக அரசு சேகரிக்கும் அத்தியாவசியப்பொருட்கள் யாரிடம் ஒப்படைக்கப்படப் போகின்றது என்ற கேள்விக்குரிய பதில் இதுவரைகிடைக்கவில்லை.வன்னியை யுத்த மேகம் சூழ்ந்துள்ளதால்அங்கு தொண்டு செய்த அரசு சார்பற்ற நிறுவனங்கள் அனைத்தும் இலங்கை அரசாங்கத்தின்நெருக்குதல் காரணமாக வெளியேறி விட்டன.
சுனாமியினால் இலங்கை சீரழிந்த போது உதவிக்கரம் நீட்டி உடனடியாக களத்தில் இறங்கிமக்களின் துயர் துடைத்ததில் அரச சார்பற்றநிறுவனங்களின் பங்கு அளப்பரியது.தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில்இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறது என்ற சந்தேகம்இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகளை முடக்குவதற்கு இலங்கை அரசாங்கம்பல முயற்சிகளை எடுத்தது.இலங்கை அரசாங்கத்தின் நெருக்குதல் காரணமாக சில அரச சார்பற்ற நிறுவனங்கள்இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. வன்னிமீது இலங்கை அரசங்கம் மேற்கொள்ளும்விமானத் தாக்குதல், எறிகணை வீச்சுக் காரணமாக வன்னியில் இயங்கும் தொண்டு நிறுவனங்களின் ஊழியர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலை ஏற்பட்டது. ஊழியர்களின்நன்மை கருதி அரச சார்பற்ற நிறுவனங்கள்வன்னியில் இருந்து வெளியேறிவிட்டன.
தமிழக அரசு வன்னி மக்களுக்காகச் சேகரிக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வன்னி மக்களைச்சென்றடையும் மார்க்கம் எது என்றகேள்விக்குரிய விடை இன்னமும் தெளிவில்லாமல் இருக்கிறது.இந்திய அரசாங்கம் விடுதலைப் புலிகளைஎதிர்க்கும் வேளையில் இந்திய அரசு எமதுநண்பர்கள் என மார் தட்டும்இலங்கையின் சில அரசியல்வாதிகள்வன்னியில் வாடும் தமிழ்மக்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழக அரசியல்வாதிகளை
எதிரிகளாகக் கருதுகின்றனர்.இலங்கையில் நடைபெறும்யுத்தம் இரண்டு வாரங்களில்நிறுத்தப்படாவிட்டால் தமிழகத்தின்அனைத்து நாடாளுமன்ற
உறுப்பினர்களும் பதவி துறப்பார்கள் என்ற தமிழக அரசின்மிரட்டலை இலங்கை அரசு சமாளித்துவிட்டது.வன்னி மக்களுக்கு தமிழகஅரசு அனுப்பப் போகும் அத்தியாவசியப் பொருட்கள் உரியமுறையில் அங்கு செல்வதற்குரிய ஏற்பாட்டை இலங்கை அரசுசெய்யுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழக அரசின் இந்தமுயற்சிகளை இலங்கையில்உள்ள சில அரசியல் தலைவர்கள் விரும்பவில்லை. இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடுவதை இனவாத கண்ணுடன்நோக்கும் சில அரசியல்வாதிகள் அதனைஎதிர்த்து மிகப் பரந்தளவில் பிரசாரம் செய்கின்றனர்.
இலங்கையில் அல்லல்படும் தமிழ் மக்களுக்குஉதவ வேண்டும் என்ற தமிழக அரசின்வேண்டுகோளையடுத்து பலர் ஆர்வத்துடன்உதவி செய்கின்றனர். தமிழக அரசின் இந்தமுயற்சி அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.இதேவேளை இலங்கைத் தமிழ் மக்களுக்குஅனுப்புவதற்காக பழ. நெடுமாறன்சேகரித்த ஒரு கோடி ரூபா பெறுமதியானபொருட்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான விளக்கத்தைத் தமிழக அரசு இதுவரைவெளியிடவில்லை.
பழ. நெடுமாறன் சேகரித்த பொருட்களைஇலங்கைக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கைதமிழக அரசு உடனடியாக மேற்கொள்ளவேண்டும். முதல் கட்டமாக அப்பொருட்கள்இங்கு அனுப்பப்பட்டால் தமிழக அரசு இலங்கைத் தமிழ் மக்கள் மீதுவைத்துள்ள கரிசனையை உலக அரங்குக்குஎடுத்தியம்ப ஏதுவாக இருக்கும்.
வன்னி மக்களை இலங்கை அரசு சந்தேகக்கண்ணுடனேயே பார்க்கிறது. இலங்கை அரசாங்கத்தின் மீது வன்னி மக்கள் நம்பிக்கைவைக்கவில்லை. இந்த நிலையில் தமிழக அரசுஅனுப்பி வைக்கும் அத்தியாவசியப் பொருட்கள் முழுமையாக வன்னி மக்களைச் சென்றடையுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
வன்னியில் அல்லப்படும் தமிழ் மக்களுக்குஅத்தியாவசியப் பொருட்களை அனுப்பிவைத்தால் போதாது. அங்குள்ள அதிகாரமிக்கஅரசியல்வாதிகள் உணவுப் பொருட்களுடன்வன்னிக்குச் சென்று அங்கு துயரப்படும் மக்களின்கண்ணீரைத் துடைத்தால்தான் தமிழக அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுக்கு உலகஅங்கீகாரம் கிடைக்கும்.மத்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்கநாடாளுமன்ற இராஜினாமாவை ஒத்தி வைத்ததமிழக முதல்வர் வன்னி மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை எப்படி அனுப்பிவைக்கப் போகிறார் என்பதை அறிவதற்கு உலகமே ஆவலாக உள்ளது. அதேவேளை வன்னிக்குச்சென்று பொதுமக்களுக்கு மருத்துவசேவையாற்றத் தயார் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்அறிவித்துள்ளது.இவ்விடயத்தை தமிழக அரசு எவ்வாறுகையாளப்போகிறதெனத் தெரியவில்லை.தமிழக அரசின் செயற்பாடுகளுக்கு மத்தியஅரசு துணை போகுமா என்ற கேள்விக்கானவிடையும் இன்னமும் தெளிவாகவில்லை.
வர்மா
02 11 2008

No comments: