Thursday, July 12, 2012

லண்டன் ஒலிம்பிக் உதைப்பந்தாட்டம்

ரயன் கிக்ஸ்

லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகளில் பிரித்தானிய உதைபந்தாட்ட அணிக்கு ரயன் கிக்ஸ் (Ryan Giggs) தலைமை தாங்கவுள்ளதை பிரித்தானிய உதைபந்தாட்டச் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
பிரித்தானிய அணியில் உள்ள வயது கூடிய வீரர்களான கிரெய்க் பெலாமி மற்றும் மிக்கா ரிச்சார்ட்ஸ் ஆகிய இருவரையும் பின்னுக்குத் தள்ளிய நிலையில் தனது முதலாவது சர்வதேச சுற்றுப் போட்டியில் அணித் தலைவராகப் பங்கேற்கவுள்ள கிக்ஸை அணியின் பயிற்றுவிப்பாளரான ஸ்டுவர்ட் பியர்ஸ் பெயர் குறித்துள்ளார்.

இது குறித்து கிக்ஸ் கருத்து வெளியிடுகையில், தெளிவாக கூற வேண்டுமானால் நிறைய அனுபவம் பெற்றிருக்கும் நான் எமது அணியில் இடம்பெற்றுள்ள ஏராளமான இளைய வீரர்களை வழிப்படுத்துவதுடன் தலைவர் என்ற வகையில் எனது அனுபவத்தை அவர்களுக்கும் கற்றுக் கொடுக்க முடியுமென நம்புகின்றேன்.

இதுவரை பிரிமியர் லீக் பட்டங்கள் பன்னிரண்டையும், சம்பியன் லீக் பட்டங்கள் இரண்டையும் தனதாக்கிக் கொண்டுள்ள கிக்ஸ், எதிர்வரும் 20ஆம் திகதியன்று கடந்த ஐம்பதாண்டுகளில் பிரேஸிலுக்கு எதிரான முதலாவது பயிற்சிப் போட்டியில் விளையாடவுள்ள பிரித்தானிய அணிக்குத் தலைமை தாங்கவுள்ளார். மிடில்ஸ்புரோவில் உள்ள ஆற்றங்கரையோரத்து விளையாட்டரங்கில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னரான இந்த பயிற்சி இரட்டைப் போட்டிகளில் பிரேஸிலை எதிர்த்து பிரித்தானிய ஆண்கள் அணியும், சுவீடனை எதிர்த்து பிரித்தானிய மகளிர் அணியும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஒகஸ்டில் மிலேனியம் விளையாட்டரங்கில் உருகுவேக்கு எதிரான தங்கள் குழுவின் இறுதிப் போட்டிக்கு முன்னர், பிரித்தானிய அணியினர் எதிர்வரும் 26ஆம் திகதி செனகல் அணிக்கெதிராக ஓல்ட் ட்ராபோர்ட் விளையாட்டரங்கிலும் எதிர்வரும் 29ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தை எதிர்த்து வெம்பிளி மைதானத்திலும் விளையாடவுள்ளனர்.
பயிற்றுவிப்பாளர் பியர்ஸ் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ஒலிம்பிக் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டிகளின் போது பிரித்தானிய அணியை ரயன் கிக்ஸ் தலைமையேற்று வழிப்படுத்துவார். தெரிவு செய்யப்பட்டுள்ள அணியின் அனைத்து வீரர்களும் (பதினெட்டுப் பேரும்) அபாரமான முறையில் தமது திறமைகளை வெளிப்படுத்தியவர்களாவர். அணித் தலைவர் பதவிக்குப் போட்டியிடத் தகுதியானவர்களும் இருக்கின்றனர்.
வேல்ஸ் அணிக்கு ஏரன் ராம்சி தலைமையேற்கும் அதேவேளையில், மன்செஸ்டர் அணிக்கு மிகான் ரிச்சர்ட்ஸ் பல தடவைகள் தலைமை தாங்கியுள்ளார்.

விளையாட்டு அனுபவத்தின் அடிப்படையில் கிரெய்க் பெலாமி அல்லது ஏனைய இருவர் தலைமை தாங்க வல்லவர்களாக உள்ளனர். ஆயினும், இந்தக் குழுவினரிடையே தனிச் சிறப்புப் பெற்றவராக விளங்குகின்றார். நான் தெரிவு செய்துள்ள மூன்று வயது கூடிய வீரர்கள் தேர்வு குறித்தும் நான் மிக்க மகிழ்வடைகின்றேன்.
பிரிமியர் லீக் போட்டிகளில் வீரர்கள் காண்பித்த திறமை அடிப்படையிலேயே அவர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றார். அமெரிக்காவில் லா கெலக்ஸி அணிக்காக விளையாடி வரும் டேவிட் பெக்கம் ஒலிம்பிக் அணியில் தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மெட்ரோநியூஸ்09/07/12

No comments: