Friday, July 27, 2012

லண்டன் ஒலிம்பிக் இன்று ஆரம்பம்


உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றுவருகிறது. முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டி 1896ஆம் ஆண்டு கிரீஸ் தலைநகர் எதென்ஸில் நடந்தது.
முதல் உலகப்போர் காரணமாக 1916ஆம் ஆண்டும், 2ஆவது உலகப்போர் காரணமாக 1940 மற்றும் 1944ஆம் ஆண்டும் ஒலிம்பிக் போட்டி நடைபெறவில்லை.
கடைசியாக 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி சீன தலைநகர் பீஜிங்கில் நடந்தது. இந்த ஆண்டுக்கான (2012) 30ஆவது ஒலிம்பிக் போட்டி லண்டன் நகரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. ஓகஸ்ட் 12ஆம் திகதி வரை இந்த ஒலிம்பிக் திருவிழா நடைபெறுகிறது.
இந்த ஒலிம்பிக் போட்டியில் 5 கண்டங்களிலுள்ள 204 நாடுகள் பங்கேற்கின்றன. மொத்தம் 10,490 வீர, வீராங்கனைகள் இந்தப் போட்டியில் கலந்து கொள்கிறார்கள். 26 விளையாட்டில் 39 பந்தயத்தில் 302 பிரிவுகளில் போட்டி நடக்கிறது.
உலகில் எந்தவொரு சர்வதேச நிகழ்வினதும் தொடக்க விழா என்பது அதனை நடாத்தும் நாட்டினது சிறப்பியல்புகளையும் ஆளுமைத்திறனையும் எடுத்துக் காட்டும் ஒரு கொண்டாட்டமாகும். அந்த வகையில் இன்று சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளை பொறுத்தவரையில் அதில் போட்டியிடும் நாடுகளின் அணிவகுப்பொன்றையும் கடாரத்தில் கொளுத்தப்பட்டு போட்டிகளின் ஆரம்பத்தை சமிஞ்ஞை செய்து காட்டும் ஒலிம்பிக் தீபத்தின் பிரவேசத்தையும் இந்த ஆரம்ப வைபவம் எடுத்தியம்புகின்றதெனலாம். இன்று வெள்ளிக்கிழமை 27ஆம் திகதி அன்று நடைபெறுகின்ற கோலாகலமான முறையில் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கம் வைபவத்திற்கென உலகின் கண்களெல்லாம் லண்டனையே மொய்த்த வண்ணம் இருக்கப்போகின்றன. இந்த ஆரம்ப வைபவமானது ஐக்கிய இராச்சியம் லண்டன் மாநகர் மற்றும் கலாசார கலை வனப்பு நெறியாளர் டொனி போய்ல்  மற்றும் அவரது குழுவினரின் கலைத்துவ வெளிப்பாடுகளையும் கண்டு களிப்பதற்கான அரிய வாய்ப்பை உலகத்திற்கு வாரி வழங்க போகின்றது. சர்வதேச ஒலிம்பிக்குழு சாசனத்தில் சுருக்கமாக குறிப்பிட்டுள்ளவாறு ஒவ்வொரு ஆரம்ப விழாவின்போதும் வெளிப்படுத்தப்பட வேண்டிய சில குறிப்பிட்ட மூலங்கள் (ஆதாரப் பொருட்கள்) இருக்கின்றன. அதன் பின்னர் தொடக்க விழாவில் தனது வனப்பு வெளிப்பாடு இடம்பெற்றதுடன் அது லண்டன் 2012 போட்டிகளுக்கு உலக மக்களை அன்புடன் வரவேற்கின்றது.
அதிசயத் தீவுகள் எனும் பெயரால் ஒலிம்பிக் ஆரம்ப வைபவக் காட்சி அமையவுள்ளதுடன் உலகளாவிய ஒளிபரப்பு லண்டன் நேரப்படி ஒன்பது மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ஐரோப்பாவில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் இசையின்பத்தை சுருதி கூட்டி ஒலிக்கச் செய்யும் வைட்சப்பல் வார்ப்படச்சாலை (பட்டறை) யால் உற்பத்தி செய்யப்பட்ட அந்தப் பென்னாம் பெரிய மணியோசையுடன் ஆரம்ப வைபவம் களை கட்டத் தொடங்கவுள்ளது. அத்துடன் நிஜமான விவசாய முற்றத்து விலங்குகளைக் கொண்டுள்ள பசுமையானதும் மனதிற்கு மகிழ்வூட்டும்  ஆரம்பக் காட்சிக்கான போட்டிக் கதீமான அந்த விளையாட்டரங்கு பிரித்தானிய நாட்டுப்புறமாக மாற்றப்பட்டுள்ளது.
லண்டன் ஒலிம்பிக்கின் கலை வளர்ப்பு இயக்குநரான டொனி போய்லி கூறுகையில் எமது அதிசயத் தீவுகள் ஆரம்ப வைபவத்துடன் மக்கள் தலை வணக்கத்துடன் இயற்கையான திறமைமிக்க எதனையும் நூதனமாகக் கண்டு பிடிக்கும் ஆற்றல் மிக்க பிரித்தானிய மேதாவிகளின் செழிப்பு மிகு ஆக்க வேலைப்பாடுகளை கொண்டிருக்கின்றார் என்றார்.
இன்றைய ஒலிம்பிக் போட்டிகளில் இயங்கி வரும் ஆக்கத்திறன் மிக்க அணி பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.
அரச தலைவரை வரவேற்றல்
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவரால் ஒலிம்பிக் விளையாட்டரங்க நுழைவாயிலில் பிரித்தானிய அரசுத் தலைவர் வரவேற்கப்படுகின்றார். லண்டன் 2012 ஒலிம்பிக் ஆரம்ப வைபவத்திற்கென மேன்மை தங்கிய இரண்டாம் எலிஸபெத் மகாராணியார் ஜாக்குலிஸ் ரொக்கேயால் வாழ்த்தப்படுவார். 
மெய்வல்லூநர்களின் 
அணி வகுப்பு 
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் ஒவ்வொன்றாக ஊர்வலத்தில் கலந்து கொள்கின்றன. இந்த அணிகள் இங்கிலாந்தின் மொழியான ஆங்கில அகர வரிசைப்படி விளையாட்டரங்கினுள் நுழைகின்றன. இந்த அணிவகுப்பின் போது ஒலிம்பிக் முதற் போட்டியை நடத்தியதிலிருந்து கிரேக்க நாட்டு அணி முதலாவதாகவும் இந்த ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் பிரித்தானியாவில் போட்டி அணி இறுதியாகவும் ஒலிம்பிக் விளையாட்டரங்கினுள் நுழைகின்றன. 
உரைகள் / சொற்பொழிவுகள் 
விளையாட்டரங்கினுள் அனைத்து நாட்டு அணிகளும் (204) வந்தடைந்ததும் சர்வதேச ஒலிம்பிக் தினத்தை ஜாக்குவில் ரொக்கேயைத் தொடர்ந்து லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாட்டுக்குழுத் தலைவரான சொஸ்டியன் கோ பிரபு உரையொன்றை ஆற்றவுள்ளார். ஒலிம்பிக் கீதமும் கொடியும் 
போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் விளையாட்டரங்கிற்குள் ஒலிம்பிக் கொடியினை கொண்டு வரப்பட்டு அந்தந்த நாடுகளின் தேசிய கீதம் இசைக்கப்படுகையில் அது ஏற்றப்படுகின்றது. பிரதான விளையாட்டரங்கில் வெளிப்படையாகத் தெரியும் ஓரிடத்தில் ஒவ்வொரு நாட்டினதும் தேசியக் கொடியானது போட்டியின் போதும் பறக்க விடப்பட வேண்டுமென ஒலிம்பிக் சாச‌னம் தெரிவிக்கின்றது. 
சத்திய பிரமாணங்கள் 
ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் மெய்வல்லுநரொருவர் பிரசங்க மேடையில் நின்றவாறு சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கொடியின் மூலையொன்றைத் தனது இடது கையில் பிடித்தவாறும் வலது கையை உயர்த்தியவாறும் அவரவர் போட்டிகளின் விதிகளுக்குக் கட்டுப்பட்டுவ தாக ச‌த்தியப்பிரமாணம் எடுக்கின்றனர். 
ஒலிம்பிக் தீபமும் கடாரமும் 
கடந்த எழுபது நாட்களாக பிரித்தானியா முழுவதும் உலா வந்த ஒலிம்பிக் தீபமானது ஒலிம்பிக் விளையாட்டரங்க நுழைவாலை வந்தடைதலே அதன் இறுதி அங்கமாகும். அந்த திருப்பத்தை ஏந்துதலுடன் இறுதியாக ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமானதைக் குறிக்கும் வகையில் ஒலிம்பிக் ஸ்ரேடியத்தில் தீபம் ஏற்றப்படும்.
ஆக்கத்திறன்மிக்க அணி 
லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப வைபவத்தினை கோலாகலமான முறையில் அரங்கேற்றவென உலகத்தில் இந்த அரிய போட்டிகளை நடத்தும் கலை வனப்பு மிக்க அணியை உலகத்தரம் வாய்ந்த பிரித்தானிய இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் முன்னெடுத்துச் செல்கின்றனர். 
பங்கேற்கும் அணிகளுக்கு அணி சேர்க்கும் வீர வீராங்கனைகள் லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் 15000 வீர வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளதுடன் இவற்றை நான்கு பில்லியன் பார்வையா ளர்கள் பார்த்து இரசிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

மெட்ரோநியூஸ் 27/07/12

No comments: