காதலுக்குப்பெறோர் எதிர்ப்புத்தெரிவித்ததனால் இரகசியமாகப் பதிவுத்திருமணம் செய்து விட்டுத்தமது வீடுகளில் வசிக்கும் இளைஞனினதும் யுவதியினயதும் ஒரு வரிக்கதைதன் 2000 மாம் ஆண்டு வெளியான "அலைபாயுதே" திரைப்படம்.
நண்பனின் திருமணத்துக்காக கிராமத்துக்குச்செல்லும் மாதவன் ஷாலினியைக்கண்டு தனது மனதைப்பறிகொடுக்கிறார்.பின்னர் ஷாலினியை ரயிலில் கண்டதனால் ஷலினியைத்தேடி ரயில் நிலையத்தில் தவம்கிடக்கிறார்.நண்பர்களின் உதவியுடன் ஷாலினியைக்கண்டுபிடிக்கிறார். தன் காதலை ஷாலினியிடம் மாதவன் தெரிவிக்க முதலில் மறுத்த ஷாலினி பின்னர் சம்மதம் தெரிவிக்கிறார்.
மருத்துவக்கல்லூரியில் படிக்கிறார் ஷாலினி. ஷாலினியின் படிப்புக்காகத்திருமணம் செய்யாது வேலைக்குப்போகிறார் அக்கா சுவர்ணமால்யா.செல்வந்தக்குடும்பத்தில் உள்ள மாதவனின் விருப்பத்துக்காக ஷாலினியைப்பெண்பார்க்கப்போகின்றனர் மாதவனின் பெற்றோர். மாதவனின் தகப்பனின் அலட்சியப்பேச்சு ஷாலினியின் தகப்பனுக்குப் பிடிக்கவில்லை. அதனால் திருமணபேச்சு முறிவடைகிறது.
மாதவனை மறக்கமுடியாது மனம் வருந்துகிறார் ஷாலினி. மாதவனாலும் ஷாலினியை மறக்கமுடியவில்ல. தமது திருமணத்துக்குப்பெற்றோர் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்பதை உணர்ந்த மாதவனும் ஷாலினியும்பெற்றோருக்குத்தெரியாது பதிவுத்திருமணம் செய்யமுடிவு செய்கின்றனர்.
நணபர்களின் உதவியுடன் கோயிலில் பதிவுத்திருமணம் செய்து மாலைமற்றி தம்பதியராகின்றனர்.ஷாலினியின் அக்கா சுவர்ணமால்யாவும் இப்பதிவுத்திருமணத்துக்கு ஒப்புதலளிக்கிறார்.ய்ஹிருமணம் முடிந்து இருவரும் தமது வீட்டிலிருந்து வேலைக்குச்செல்கிறனர்.
சுவர்ணமால்யாவுக்குத்திருமண ஏற்பாடு நடைபெறுகிறது. மாப்பிள்ளை வீட்டார் பெண்பார்க்கவருகின்றனர்.பெண்ணைபிடித்ததனால் திருமணத்துக்குச்சம்மதம் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவில் வேலைசெய்யும் தன் மகனுக்கு ஷாலினியைக்கொடுப்பீர்களா என மாப்பிள்ளைவீ ட்டார்கேட்டதும் ஷாலினியின் தகப்பன் ஒப்புக்கொள்கிறார். ஷாலினி அதிர்ச்சி அடைகிறார்.
ஷாலினிக்குப்பட்டுச்சேலை உடுத்து மாப்பிள்ளைவீட்டார்முன்நிறுத்துகிறார் தாய்.ககலவெனப்பேசிய ஷாலினி அமைதியாகிறார். பெண்ணுக்கு வெட்கம் வந்து விட்டதென அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். ஷாலினியைத்திருமணம் செய்ய விருப்பம் என மாப்பிள்ளை கூறுகிறார். தனக்குத்திருமணம் முடிந்துவிட்டது என்ற உண்மையைக்கூறுகின்றார் ஷாலினி.ஷாலினியின் ரகசியப்பதிவுத்திருமணம் பற்றிய உண்மை தெரிந்ததால் சுவர்ணமால்யவின் திருமணம் தடைப்படுகிறது.
வீட்டை விட்டு வெளியேறிய மாதவனும் ஷாலினியும் தனிக்குடித்தனம் செய்கின்றனர்.வைத்தியசாலையில் டொக்டராகக்கடமையாற்றுகிறார் ஷாலினி. நண்பர்களுடன் இணைந்து ஐ ரி கொம்பனி நடத்துகிறார் மாதவன்.சின்னச் சின்னப்பிரச்சினைகளினால் குடும்பத்தில் பூசல் ஏற்படுகிறது.சண்டை சச்சரவு ஒற்றுமை மாறிமாறி வருகிறது.
தகப்பனின் உடல்நிலை பாதிக்கப்பட்டதனால்அவரைப்பார்க்கப்போகவேண்டும் என்கிறார் ஷாலினி.மாதவன் அதற்கு உடன் படவில்லை.ஷாலினியின் தகப்பன் இறக்கிறார். மரணவீட்டுக்குச்சென்ற ஷாலினியை தாய் ஏற்றுக்கொள்ளவில்லை த்மது இரகசியத்திருமணத்தால் நின்றுபோனசுவர்ணமால்யாவின் நடத்த முஇயற்சிசெய்து வெற்றிபெறுகிறார் மாதவன்.
மனைவி ஷாலினியை கூட்டி வருவதற்காக ரயில் நிலையம் செல்கிறார் மாதவன். நெடுநேரமாகக்காத்திருந்தும் ஷாலினி வரவில்லை. வைத்தியசாலைக்கும் நண்பர்களுக்கும் தொலைபேசி அழைப்பெடுத்து ஷாலினியைப்பற்றிவிசாரிக்கிறார். வைத்தியசாலையிலிருந்து ஷாலினி புறப்பட்டுவிட்டதாகக்கூறுகின்றனர்.
மாதவனும் நண்பர்களும் ஷாலினியைத்தேடுகின்றனர். பொலிஸ் நிலையத்தில் புகார் செய்கின்றனர். பொலிஸார் உரியநடவடிக்கை எடுக்காததனால் மாதவன் ஆத்திரப்படுகிறார்.
விபத்தில்காயமடைந்தஷாலினிவைத்தியசாலையில்அனுமதிக்கப்படுகிறார்ஷாலினியை மோதிவிட்டு ஓடித்தப்புகிறார் குஷ்பு.சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மனைவி செலுத்திய வாகனத்தில் அடிபட்டபெண்ணைப்பார்க்கவைத்தியசாலைக்குச்சென்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அரவிந்தசாமி காயமடைந்தபெண் தன் மனைவி எனக்கூறுகிறார்.பொலிஸுடன் தொடர்புகொண்டு உண்மையைக்கூறிய அரவிந்தசாமி ஷாலினியின் உறவினரைத்தேடும்படி கூறுகிறார்.
விபத்தில் காயமடைந்த ஷாலினி ஆபத்தான நிலையிலிருப்பதால் அரவிந்தசாமியின்மீது ஆத்திரமடைந்த மாதவன்,தன் மனைவிக்கு ஏதும் நடந்தால் அரவிந்தசாமியின் உடிர் இருக்காது என அச்சுறுத்துகிறார்.அப்போது என் கணவன் மீது தப்பு இல்லை. வாகனத்தைச்செலுத்தியதுநான்தான் என்கிறார் குஷ்பு.
கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காத அந்தத்தருணத்தை அறிந்து நெகிழ்ச்சியடைகிறார் மாதவன். அந்த நிமிடத்தில் மாதவனின் மனம் மாற்றமடைகிறது.மனைவிக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுப்பேன் என உறுதி பூணூகிறார்.
மாதவன்,ஷாலினி, சுவர்ணமல்யா,விவேக்,ஜெயசுதா,பாஸ்கர்,நடராஜ் ஆகியோ நடித்தனர்.ஒலிப்பதுவு ஏ.எல்.லக்ஷ்மி நாராயணன். கலை ராகவன். கதை செல்வராஜ் ,மணிரத்னம். ஒளீப்பதிவு பி ஸ்ரீராம்.தயாரிப்பு,எழுத்து இயக்கம் மணிரத்னம்.பாடல்கள் வைரமுத்து. இசை ஏ.ஆர்.ரஹ்மான்.
ஆஷாபோன்ஷே,சங்கர்மகாதேவன்,சுவர்ணலதா,எஸ்.பி.பாலசுப்ரமணீயம்,சரண்நவீன்,ஹரிகரன்,கிளிங்டன்,ஸ்ரீநிவாஸ்,சாதனாசர்க்கம் ஆகியோர் பாடியபாடல்கள் புகள் பெற்றன.
எவனோ ஒருவன்,செப்ரெம்பர்மாதம்,காதல் சடுகுடு,பச்சைநிறமே ஆகியா பாடல்கள் ரசிகர்களின் மனதில் இடம் பெற்றன.ஸ்ரீ நிவாஸ், சாதனா சர்க்கம் ஆகியோர் பாடிய சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே ந்ன்ற பாடலின்றும் காதில் ரீங்காரமிடுகிறது.
மணிரத்தினத்தின் கற்பனையில் உருவான கதை நடிகர் பிரசாந்தின் வாழ்க்கையில் உண்மையானது.
ரமணி
மித்திரன்
13_20/01/13
No comments:
Post a Comment