தமிழக அரசியலைப்புதியபாதையில் அழைத்துசென்றபெருமை தமிழ்சினிமாவையேசாரும். பிரிக்கமுடியாதிருந்த தமிழ் சினிமாவும் தமிழகமும் வேறுவேறு பாதையில் புறப்படத்தயாராகிவிட்டன.வந்தாரை வரவேற்கும் தமிழகத்திலிருந்து வெளியேறத்தயாராகிவிட்டார் கமல்.சர்ச்சைகள் வரும் முன்னே கமல்படம் வரும் பின்னே என்பது அண்மைக்காலப் பதிவாக உள்ளது.விஸ்வரூபம் படத்துக்கான எதிர்ப்பு விஸ்வரூபமாக வியாபித்துள்ளது.
விஸ்வரூபம் படக்கதை ஆப்கானிஸ்தானைச்சுற்றி நடப்பதனால் முஸ்லிம்களைப்புண்படுத்தும் கொச்சைப்படுத்தும் காட்சிகள் வசனங்கள் இருக்கலாம் என்று சந்தேகித்த முஸ்லிம் அமைப்புகள் தாம் பார்த்தபின்பே படத்தைத்திரயிடவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். விஸ்வரூபம் முஸ்லிம்களுக்கு எதிரான படம் அல்ல என்று அடித்துக்கூறினார் கமல்.படத்தைப்பார்த்த முஸ்லிம் அமைப்புகள் தாம் சந்தேகப்பட்டது உண்மைதான் என்பதை ஊர்ஜிதப்படுத்தின.முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி படத்தைத்திரையிட கமல் முயற்சி செய்ததனால் முஸ்லிம் அமைப்புகள் தமிழக அரசிடம் மனுக்கொடுத்தன.
விஸ்வரூபப்பிரச்சினையைக்கையில் எடுத்த தமிழக அரசு படத்தித்திரையிட அதிரடியாகத்தடை விதித்தது.சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அன்பதைக்காரணம் காட்டி தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை அமுல் செய்தது.தமிழக அரசின் தடை உத்தரவினால் அதிர்ச்சியடைந்த கமல் ரசிகர்கள் அண்டை மாநிலங்களான ஆந்திரா,கேரளா, கர்நாடகம் ஆகியவற்றுக்குப்படை எடுத்தனர். தமிழக அரசின் தடை காரணமாக விஸ்வரூபத்தைத்திரையிட கர்நாடக அரசு தயங்கியது.இரண்டு நாட்களின் பின் பலத்தபதுகாப்புடன் படத்தித்திரையிட்டது. தமிழக் அரசின் தடை தமிழக அரசைக்கட்டுப்படுத்தவில்லை
தமிழக அரசின் தடையை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் கமல். இரவோடு இரவாக மேல்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து தான் நினைத்ததைச்சாதித்தது தமிழக அரசு. விஸ்வரூபம் திரையிடப்பட்டால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று தமிழக அரசு கூறியது. ஆனால்,விஸ்வரூபம் திரையிடப்படாமலே சட்டம் ஒழுங்கு சீர் குலைந்தது.
தமிழக அரசின் தடையை நீதிமன்றம் நீக்கியதால் சிலதியேட்டர்களில் படம் திரையிடப்பட்டது. பொலிஸாரின் தலையீட்டினால் படக்காட்சி இடை நிறுத்தப்பட்டது.தியேட்டர்கள் மீது கல் வீசப்பட்டது,கண்ணாடி அடித்துநொருக்கப்பட்டது,பனர் தீயிட்டுக்கொளுத்தப்பட்டது, பெற்றோல் குண்டு வீசப்பட்டது,பெற்றோல் குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன.திரை அரங்குகளுக்குப்போதிய பாதுகாப்பு வழங்காது அலட்சியமாக இருந்தது தமிழக அரசு.
தமிழக அரசியல் பிரமுகர்களும்,சினிமா உலகமும் கமலின் பின்னால் அணிதிரண்டுள்ளனர்.துப்பாக்கி படத்துக்கு முஸ்லிம்கள் எதிர்ப்புக்காட்டியபோது அமைதியாகத்தீர்த்து வைத்த தமிழக அரசு கமலுக்கு தொடர்ச்சியாகத்தொல்லை கொடுக்கிறது.
விஸ்வரூபம் பிரச்சினை விரைவில் முடிவுக்கு வந்துவிடும் தமிழக அரசின் நடவடிக்கையினால் கொதித்துப்போயுள்ள கமலின் ரசிகர்கள் தமிழக அரசைவீழ்த்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துள்ளனர்.அரசியலும் ஆன்மீகமும் வேண்டாம் என்றிருக்கும் கமலை தனது அரசியல் பலத்தால் அசைத்துப்பார்த்துள்ளது தமிழக அரசு.
No comments:
Post a Comment