மனைவியின் தங்கைமீது ஏற்படும் விபரீத ஆசையால் குடும்பமே சின்னாபின்னமாகிய கருவுடன் 1995ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "ஆசை."
பூரணம் விஸ்வநாதனின் மகள் ரோகினி. கணவன் பிரகாஷ்ராஜ், டில்லியில் இராணுவ மேஜராகப்பணிபுரிகிறார். பல வருடங்களின் பின் ஊருக்கு குடும்பத்துடன் வருகிறார் ரோகினி. ரோகினியின் தங்கை சுவலக்ஷ்மியைக்கண்டதும் பிரகாஷ்ராஜின் காமத்தீ கொளுந்துவிட்டு எரியத்தொடங்கியது.ரோகினியின் கைக்குழந்தையை மிகவும் நேசிக்கிறார். விடுமுறை முடிந்ததும் ரோகினிகுடும்பத்துடன்டில்லிக்குச்செல்கிறார்.டில்லியில் வேலை செய்தாலும் பிரகாஷ்ராஜின் மனம் சுவலக்ஷ்மியையேசுற்றிவந்தது.
பஸ்ஸில் ரிக்கெற்றைத்தொலைத்துவிட்டு தேடும் சுவலக்ஷ்மிக்குத்தனது ரிக்கெற்றைக்கொடுத்து உதவி செய்கிறார் அஜித்.ரிக்கெற்பரிசோதகரிடம் அகப்பட்டுச்செல்லும் அஜித்தைப்பரிவிடன் பார்க்கிறார் சுவலக்ஷ்மி. சுவலக்ஷ்மியின் மீது காதல் வசப்படுகிறார் அஜித்.தனது காதலைப்பலமுறை சொல்ல முயன்று தோற்றுப்போகிறார். அஜித்தன்மீது கொண்டகாதலை அறிந்ததும் பச்சைக்கொடி காட்டுகிறார் சுவலக்ஷ்மி.
ரோகினியின் திருமணத்துக்காகக் கடனாக வாங்கிய பணத்தைக்கொடுக்க முடியாது திண்ட்டாடுகிறார் பூரணம் விஸ்வநாதன்.பூரணம் விஸ்வநாதனுக்கு வட்டிக்குப்பணம் கொடுத்தவர்கள் வீடு தேடிச்சென்று மிரட்டுகிறர்கள்.இதனை அறிந்த பிரகாஷ்ராஜ் வட்டியுடன் பணத்தைக்கொடுக்கிறார்.வீட்டுக்குத்தொலைபேசி இணப்பையும் ஏற்படுத்திக்கொடுக்கிறார். கணவனின் விபரீத ஆசையை அறிந்த ரோகினிபதறுகிறார்.தனது ஆசைக்கு மனைவி ரோகினி ஒப்புக்கொள்ளாமையினால் அவளைக்கொலை செய்கிறார்.
பாலில் மயக்க மருந்து கொடுத்து ரோகினி மயங்கியபின் முகத்தை பொலித்தீனால் மூடி கழுத்தையும் கையையும் காலையும் சப்பாத்து லேசினால்கட்டி மூச்சுத்திணறி ரோகினி மரணமடைகிறார்..ரோகினிக்கு அடிக்கடி நெஞ்சுவலி வருவதனால் நெஞ்சு வலியினால் ரோகினி மரணமானதாக பிரகாஷ்ராஜ் கூறுகிறார்.மனைவி ரோகினியின் இறுதிக்கிரியைகளை முடித்துவிட்டு டில்லிக்குச்செல்லும் பிரகாஷ்ராஜ், மாமனையும் சுவலக்ஷ்மியையும் கூட்டிச்செல்கிறார்.
தங்கள் குடும்பப்பிரச்சினைகளைத்தீர்த்துவைத்த பிரகாஷ்ராஜ்மீது நம்பிககைவைத்து பூரணம் விஸ்வநாதனும் சுவலக்ஷ்மியும் பின்னால் செல்கின்றனர்.பிரகாஷ்ராஜின் காமத்தீக்குத்தான் பலியாகப்போவதைத்தெரியாத சுவலக்ஷ்மி குழந்தையை அரவணைத்தபடி சென்றார்.
சுவலக்ஷ்மி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது கதவை மெதுவாகத்திறந்து ரசித்துப்பார்த்தார் பிரகாஸ்ராஜ்.காற்றிலே மேலாடை விலகுவதைக்கண் வெட்டாமல் பார்த்தார்.ஆழ்ந்த உறககத்தில் இருந்த சுவலக்ஷ்மி திடீரெனக்கண் விழித்துப்பார்த்தபோது பிரகாஷ்ராஜ் தன்னை வெறித்துப்பார்ப்பதைக்கண்டு அதிர்ச்சியடைகிறார்.
எதுவிதா பதற்றமுமின்றி மிக நிதானமாக அறையினுள் நுழைந்த பிரகாஷ்ராஜ் குழந்தையைத்தூக்கிச்சென்றார்.குழந்தையின் மீது பிரகாஷ்ராஜ் கொண்ட பாசத்தை உணர்ந்து பூரனம் விஸ்வநாதனும் சுவலக்ஷ்மியும் மகிழ்சியடைந்தனர்.
சுவலக்ஷ்மியைத்தேடி டில்லிசெல்லும் அஜித் நண்பனின் உதவியுடன் அவளைக்கன்டு பிடிக்கிறார்.சுவலக்ஷ்மியைத்தான் திருமணம்செய்யும் விருப்பத்தைத்தெரிவிப்பதற்காக அவளின் திருமணம் பற்றி மாமனிடம் கதைக்கிறார் பிரகாஷ்ராஜ்.அப்போது சுவலக்ஷ்மி அஜித்தைக்காதலிப்பதைக்கூறிய பூரணம் விஸ்வநாதன் இரவு விருந்துக்கு ஏற்படு செய்த தகவலையும் தெரிவிக்கிறார்.சுவலக்ஷ்மியின் காதலை அறிந்து அதிர்ச்சியடைந்த பிரகாஷ்ராஜ் தனனைச்சுதாகரித்துக்கொண்டு அஜித் எற்பாடுசெய்த இரவு விருந்தில் கலந்து கொள்ளச்சம்மதிக்கிறார்.
அஜித்தும் பிரகாஷ்ராஜும் கதைத்துக்கொண்டு செல்லும்போது அஜித்தின் மீது ஒருவர் மோதுகிறார். அந்தநேரம் அஜித்தின் பர்ஸை பிரகாஷ்ராஜ் உருவுகிறார்.சாப்பிட்டு முடிந்ததும் பர்ஸ் இல்லாமையால் அஜித் அதிர்ச்சியடைகிறார்.தன்னுடன் மோதியவனைக்கண்டு சந்தேகத்தில் அவனைச்சோதிக்கிறார். அவனிடம் பர்ஸ் இல்லை.பிரகாஷ்ராஜ் மீது சந்தேகம் கொண்டு பிரகாஷ்ராஜைச்சோதிக்கவேண்டும் என்கிறார்.பூரணம் விஸ்வநாதன் தடுக்கிறார். ஹோட்டல் பில்லை பிரகாஷ்ராஜ் கட்டுகிறார்.
பிரகாஷ்ராஜைப்பற்றிய உண்மைகளை மேலதிகாரி நிழல்கள் ரவியிடம் அஜித் கூறியதை அவர் நம்பமறுக்கிறார்.சுவலக்ஷ்மியின் படத்துடன் தனது படத்தை பிரகாஷ்ராஜ் இணைப்பதைப்பார்த்த நிழல்கள் ரவி அதுபற்றி வினவுகிறார். மனைவி ரோகினியின் மரணத்திலும் சந்தேகமடைகிறார்.பிரகாஷ்ராஜின் ஏற்பாட்டில் விபத்து என்றபெயரில் நிழல்கள் ரவி கொல்லப்படுகிறார்.
மேலதிகாரியிடம் பிரகாஷ்ராஜைப்பற்றிக் கூறிய அஜித்மீது பூரணம் விஸ்வநாதன் வெறுப்படைகிரார்.பிரகாஷ்ரஜ் நல்லவர் என்று அஜித்துக்கு உணரவைக்க சுவலக்ஷ்மி முயற்சிசெய்கிறார்.
அஜித்தின்வீட்டில்போதைவஸ்துவைத்துஅவரைபொலிஸில்பிடித்துக்கொடுக்கிறார் பிரகாஷ்ராஜ்.சுவலக்ஷ்மியின் எதிகாலம் பற்றி பூரனம் விஸ்வநாதன் கவலையடைந்திருந்த வேளையில் குழந்தையை சுவலக்ஷ்மி அதிகம் நேசிப்பதைக்கூறி இரண்டாம் தாரமாக சுவலக்ஷ்மியைத்திருமணம் செய்யப்போவதாகக்கூறுகிறார் பிரகாஷ்ராஜ். சந்தர்ப்ப சூழ்நிலையால் பீரணம் விஸ்வநாதன் ஒப்புதலளிக்கிறார்.
அஜித்தைவிடுதலை செய்வதாகக்கூறி சுவலக்ஷ்மியை சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்கிறார் பிரகாஷ்ராஜ்.காரிலேசுவலக்ஷ்மி இருக்க சிறைக்குச்சென்ற பிரகாஷ்ராஜ் சகல உண்மைகளையும் அஜித்திடம் கூறுகிறார்.தன்னைத்திருமணம்செய்வதற்க்காக அக்காவைக்கொலை செய்த பிரகாஸ்ராஜின் சூழ்ச்சியால் அஜித் சிறையிலிருக்கும் உண்மையை அறிந்த சுவலக்ஷ்மி அதிர்ச்சியடைகிறார்.
பிரகாஷ்ராஜின் சுயரூபத்தைத்தெரிந்து கொண்ட பூரணம் விஸ்வநாதனும் சுவலக்ஷ்மியும் குழந்தையுடன் சென்னைக்குச்செல்லத்தயாராகின்றனர். அப்போது அங்கே வந்த பிரகாஸ்ராஜ் பூரணம் விஸ்வநாதனை அடித்து மயக்கமடையச்செய்து விட்டு சுவலக்ஷ்மியின் மீது தன் ஆசையை த்தீர்க்க முயற்சிசெய்கிறார். சிறயிலிருந்து தப்பிவந்த அஜித் சுவலக்ஷ்மியைக்காப்பாற்றுகிறார். அஜித்தின் தாக்குதலால் பிரகாஷ்ராஜ் மயக்கமடைகிறார்.
குழந்தை பேச்சுமூச்சு இல்லாமல் கிடப்பதைக்கண்ட அஜித்தும் சுவலக்ஷ்மியும் குழந்தையை வைத்தியசாலைக்குக்கொண்டுசெல்கின்றனர்.மயக்கம் தெளிந்த பூரணம் விஸ்வநாதன் கதவி யன்னல் ந்ல்லாவற்றையும் முடிவிட்டு காஸைத்திறந்துவிடுகிறார். மயக்கம் தெளிந்த பிரகாஷ்ராஜ் காஸ் மணத்தின் மூலம் விபரீதத்தை உணர்கிறார்.பிரகாஸ்ராஜின் கொடூரமுகத்திக்கூறிவிட்டு தீப்பெட்டியைப்பற்ற வைக்கிறார் பூரணம் விஸ்வநாதன். வீடு தீப்பற்றி இருவரும் இறக்கின்றனர்.
வித்தியாசமான கதைக்கருவைக்கொண்ட இப்படம் பெரு வெற்றிபெற்று அஜித்துக்குப்புகழைத்தேடிக்கொடுத்தது. அஜித்தின் ஆறாவது படம் ஆசை. மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்த அஜித்தின் முதலாவது வெற்றிப்படம் ஆசை. அதன்பின் அஜித்மீது ரசிகைகள் ஆசைப்பட்டனர்.
அஜித்,அறிமுகநாயகி சுவலக்ஷ்மி,பூரணம் விஸ்வநாதன்,பிரகாஷ்ராஜ், நிழல்கள் ரவி,வடிவேலு பாபிலோனா,பூஜாபத்ரா,ஆகியோர் நடித்தனர். பிரகாஸ்ராஜின் வில்லத்தனம் பிரமிக்கவைத்தது. வடிவேலு நடித்துள்ளார் ஆனால் மனதில் நிற்கவில்லை.கதை,திரைக்கதை,வசனம் உதவி சங்கர் ராமன். இசை தேவா. பாடல்கள் வாலி, வைரமுத்து.கதை,திரக்கதை வசனம், இயக்கம் வஸ்ந்த்.
எஸ்.பி,பாலசுப்ரமணியம்,.சித்ரா, ஹரிஹரன்,சொர்ணலதா,அனுராதா ஸ்ரீராம், சுரேஸ் பீட்டர், சுஜாதா,அனுபமா, மாஸ்டர் ஜி.வி.பிரகாஸ் அகியோடின் குரலில் கொஞ்ச நாள் பொறுதலைவா, புல் வெளி தன்னில் புல்வெளி தன்னில், ஓஹோ ஒரு முறை எந்தன், மீனம்மா அதிகாலையில், அய்யோ அய்யய்யோ ஷோக்கடிக்குது சோனா ஆகியபாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்தன.
ஹரிகரன் பாடிய கொஞ்ச நாள் பொறுதலைவா, சித்ரா உன்னிகிருஷ்ணன் பாடிய புல்வெளி புல் வெளி தன்னில் ஆகியபாடல்கள் இன்றும் மன்தில் நிற்கின்றன.
மனைவி ரோகினி இறந்ததும் கைக்குழந்தையை மடியில் வைத்து பிரகாஷ்ராஜ் இறுதிக்கிரியை செய்தது மனதை உறுத்தியது. ஆசை படத்தில் சூர்யாவை நடிக்கவைக்க வஸந்த் முயற்சிசெய்தார். சினிமாவில் விருப்பம் இல்லாததனால் சூர்யா மறுத்துவிட்டார். அஜித்துக்காக எழுதப்பட்ட நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமானார் சூர்யா.
ஜெமினி,பத்மினி,பி.எஸ்.வீரப்பா,என்.எஸ்,கிருஷ்ணன், டி,ஏ, மதுரம் ஆகியோர் நடித்த ஆசை எனும் திரைப்படம் 1956 ஆம் ஆண்டு வெளிவந்தது.
ரமணி
மித்திரன் 06/01/13
No comments:
Post a Comment