Friday, March 28, 2014

மெக்ஸிகோ 1986

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்ற பின் கடவுளின் கைஎன மரடோனா கூறியது இன்றும் உலகக்கிண்ண வரலாற்றில் கறை படிந்த அத்தியாயமாக  உள்ளது. இங்கிலாந்துக்குச் சொந்தமான  போக்லண்ட் தீவுகளை ஆர்ஜென்ரீனா ஆக்கிரமித்தது. சினங்கொண்ட இங்கிலாந்து, ஆர்ஜென்ரீனாவை விரட்டிவிட்டு  போக்லண்டட் தீவுகளை  தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தலைக்குப் பதிலாக கையால் கோல் அடித்தார் மரடோனா.
உலகக்கிண்ணப் போட்டியை நடத்தும் வாய்ப்பு கொலம்பியாவுக்கு வழங்கப்பட்டது.  நிலநடுக்கம்  காரணமாக மிகவும் மோசமாக கொலம்பியா பாதிக்கப்பட்டதனால் அந்தச் சந்தர்ப்பத்தை மெக்ஸிகோ பெற்றுக்கொண்டது. 16 வருடங்களின் பின்னர்  மெக்ஸிகோவில் இரண்டாவது முறையாக உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி நடைபெற்றது. 308 தகுதிகாண் போட்டிகள் நடைபெற்றன. 801 கோல்கள் அடிக்கப்பட்டன.

உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்காக 121 நாடுகள் இறுதித் தகுதிகாண் போட்டிகளில்  விளையாடின. 24 நாடுகள் மெக்ஸிகோவில்  விளையாடத் தகுதிபெற்றன.
1986ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 29ஆம் திகதிவரை 52 போட்டிகள் நடைபெற்றன. 132 கோல்கள் அடிக்கப்பட்டன. 23,94,031 பேர் பார்வையிட்டனர்.
நெதர்லாந்து தகுதி பெறவில்லை. கனடாவும், ஈராக்கும் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடின. ஈரானுடனான  யுத்தம் காரணமாக தகுதிகாண் போட்டிகளில்  விளையாடாத ஈராக்,  உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டது. 24 அணிகள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.  ஒரு அணியில்  தலா நான்கு அணிகள்  முதல் இரண்டு இடம்பிடிக்கும்  அணிகளுடன்  அதிகூடிய புள்ளிகளுடன் மூன்றாம் இடம்பிடிக்கும் நான்கு அணிகள்  இணைந்து  16 அணிகள்  இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின.
குழு ''ஏ'யில் ஆர்ஜென்ரீனா, பல்கேரியா, இத்தாலி, தென்கொரியா, குழு ''பீ'யில் மெக்ஸிகோ, பரகுவே, பெல்ஜியம், ஈரான்,  குழு ''சி'யில் ÷Œõவியத் ரஷ்யா, பிரான்ஸ், ஹங்கேரி, கனடா, குழு ''டி'யில் பிரேஸில், ஸ்பெ#ன், நெதர்லாந்து, அல்ஜிரியா, குழு ''ஈ'யில்  டென்மார்க், மே.ஜேர்மனி, உருகுவே, ஸ்கொட்லாந்து,  குழு ''எப்'இல் மொராக்கோ, இங்கிலாந்து, போலந்து, போத்துகல்  ஆகியன  மோதின.
மெக்ஸிகோ, பல்கேரியா, சோவியத் ரஷ்யா,பெல்ஜியம், ஆர்ஜென்ரீனா, உருகுவே, பிரேஸில்,  போலந்து, இத்தாலி, பிரான்ஸ், மொராக்கோ, மே.ஜேர்மனி, இங்கிலாந்து,  பரகுவே, டென்மார்க், ஸ்பெ#ன் ஆகிய 16 நாடுகள் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகின. இதில் வெற்றிபெற்ற நாடுகள் கால் இறுதியில் விளையாடத் தகுதிபெற்றன.

பிரேஸில், பிரான்ஸ், மே.ஜேர்மனி, மெக்ஸிகோ,   ஸ்பெ#ன், பெல்ஜியம்   ஆகியவற்றுக்கிடையேயான  கால் இறுதிப்போட்டி சமநிலையில் முடிவடைந்ததனால் பிரேஸில், மே.ஜேர்மனி, பெல்ஜியம்  ஆகியன பெனால்ரியில் வெற்றிபெற்று அரை இறுதிக்குத் தெரிவாகின. ஆர்ஜென்ரீனா, இங்கிலாந்து,  ஆகியவற்றுக்கிடையேயான  போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து பரபரப்பாக இருந்த வேளையில் 86ஆவது நிமிடத்தில் உயர்ந்து வந்த பந்தை தலையால் மோதுவதற்குப் பதிலாக கையால் தட்டி கோலாக்கினார் மரடோனா.
தலா இரண்டு முறை சம்பியனான ஆர்ஜென்ரீனாவும், மே.ஜேர்மனியும் இறுதிப்போட்டியில் மோதின. 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஆர்ஜென்ரீனா  சம்பியனானது. மூன்றாவது முறை சம்பியனாகும் சந்தர்ப்பத்தைத் தவறவிட்ட  மே.ஜேர்மனி, மூன்றாவது முறை இரண்டாம் இடம்பிடித்து ஆறுதலடைந்தது. பெல்ஜியம், பிரான்ஸ் ஆகியவற்றுக்கிடையேயான போட்டி சமநிலையில் முடிந்ததனால் பெனால்டி மூலம் 4-2 என்ற கோல்களால்  வெற்றிபெற்ற பிரான்ஸ் மூன்றாம் இடம் பிடித்தது.
ஐந்து கோல்கள் அடித்த மரடோனாவுக்கு கோல்டன் போல் விருது வழங்கப்பட்டது.  ஆறு கோல்கள் அடித்த இங்கிலாந்து வீரர் சரிலிங்கர் கோல்டன்  ஷூ விருது பெற்றார்.
ரமணி 
சுடர் ஒளி 23/03/14

No comments: