Tuesday, March 4, 2014

எஃப் குழுவின் சிறந்த வீரர்கள்

ஆர்ஜென்ரீனா  (தென்னமெரிக்கா), பொஸ்னியா (ஐரோப்பா), நைஜீரியா (ஆபிரிக்கா), ஈரான் (ஆசியா) ஆகியன குழு எஃப் பில் மோதவுள்ளன. நான்கு கண்டங்களைச் சேர்ந்த நான்கு நாடுகள் மோதுவதால் ரசிகர்களின் பதற்றம் சற்றுக் குறைவடைந்துள்ளது. அதிர்ஷ்டம் செய்த ஆர்ஜென்ரீனா என  ரசிகர்கள் குதூகலிக்கின்றார்கள். பொஸ்னியா   சற்று பலமான நாடாக உள்ளது. ஏனைய இரண்டு நாடுகளையும் ஆர்ஜென்ரீனா சுலபமாக வீழ்த்திவிடும். 

இந்த நான்கு நாட்டு வீரர்களையும் உள்ளடக்கிய அணி விவரம்.
கோல்கீப்பர் அஸ்மிர் பெகோவிச் (ஆர்ஜென்ரீனா), பின்களவீரர்கள் பப்லோ  செபரெலா (ஆர்ஜென்ரீனா), பெட்ரிகோ பெர்னாண்டஸ் (ஆர்ஜென்ரீனா), ஐவியர் மஸ்சரானோ (ஆர்ஜென்ரீனா), மார்கஸ் ரோஜோ (ஆர்ஜென்ரீனா), மத்தியகள வீரர்கள் அஞ்சல் டி மரியா (ஆர்ஜென்ரீனா), மிரனிம் பஜனிக்  (ஆர்ஜென்ரீனா), லவெஸி (ஆர்ஜென்ரீனா), முன்களவீரர்கள் செஜியோ அகியூரோ (ஆர்ஜென்ரீனா), லயனல் மேஸி (ஆர்ஜென்ரீனா), மேலதிக வீரர்கள் சேர்ஜி யோ ரொமேரோ (ஆர்ஜென்ரீனா),  நிகோ லஸ் ஒடமென்டி (ஆர்ஜென்ரீனா), ஜோன் ஒப மிக்கல் (நைஜிரியா), எரிக்லமெலா (ஆர்ஜென் ரீனா), எடின் டெஸிகோ (பொஸ்னியா).
இந்த அணியை ஆர்ஜென்ரீனா  வீரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். பன்கள வீரர்கள் நான்கு பேர் ஆர்ஜென்ரீனாவைச் சேர்ந்தவர் களாதலால் ஊடறுத்துச் செல்வது கடினம்.

இரண்டு முன்கள வீரர்களும், மூன்று மத்தியகள வீரர்களும்  ஆர்ஜென்ரீனா வீரர் களாதலால்  அதிக கோல்களை எதிர்பார்க் கலாம். பொஸ்னியாவின் ஒரே ஒரு பலம் கோல்கீப்பர் மட்டுமே. நைஜிரியா, ஈரான் வீரர்கள் இந்த அணியில் இல்லை என்பது அந்த அணிகளுக்குப் பாதகமானது. மேலதிக வீரரில் நைஜிரியா வீரர் ஒருவர் உள்ளார். அங்கேயும் ஈரான் வீரர்கள் எவரும் இல்லை.
பொஸ்னியா அன்யஹர்சிகேரவினா முதல் முதலாக உலகக்கிண்ண உதை பந்தாட்டப் போட்டியில் விளையாடவுள்ளது. ஆர்ஜென்ரீனா, நைஜிரியா ஆகியன ஒரே ஒருமுறை உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடின. அப்போட்டியில் ஆர்ஜென்ரீனா, வெற்றிபெற்றது. ஏனையவை இப்போதுதான் முதல்முதலாக சந்திக்கவுள்ளன. 

ரமணி 
சுடர் ஒளி 02/03/14

No comments: