Sunday, December 20, 2015

தமிழக அரசுக்கு எதிராக கொந்தளிக்கும் மக்கள்வரலாறு காணாத மழை வெள்ளம் சென்னை மக்களை  நிர்க்கதியாக்கியது என்றே முதலில் தகவல் வெளிவந்தது. ஆனால், இது இயற்கையின் சாபமல்ல அதிகாரம் இல்லாத அதிகாரிகள் மேலிட உத்தரவுக்காகக் காத்திருந்ததனால் ஏற்பட்ட அவலம் என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தமிழக அரசு இயந்திரத்தில் ஜெயலலிதாவின் உத்தரவு இல்லாமல் ஒரு சிறுதுரும்பைக்கூட தூக்கிப்போட  முடியாது. உரிய நேரத்தில்செம்பரம்பாக்கம்   ஏரியைத் திறக்காமையினாலேயே சென்னையை  வெள்ளம் சூழ்ந்தது  என்ற உண்மை இப்போபோது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதற்குயார் பொறுப்பு என்பதை தமிழக அரசு வெளிப்படுத்தவில்லை.
அதிகரித்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்தது.  நீர் வரத்து அதிகரித்தமையினால் ஏரியைத் திறந்துவிடவேண்டும்  என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை  விடுத்தனர். அவர்களின் கோரிக்கை போதுப்பணித்துறைக்கும் தலைமைச் செயலகத்துக்குமிடையே பந்தாடப்பட்டதே தவிர  யாரும் உறுதியான முடிவை எடுக்கவில்லை.
இரண்டு நாட்களில் அதிகளவி மழை பெய்யப்போவதாக  தகவல் வருகிறது  அதற்கு நாம் தயாராக வேண்டும் என என கடந்த நவம்பர் மாதம்  28  ஆம் திகதி பொதுப்பணித்துறை அதிகாரிகளினால் தலைமைச்  செயலருக்கு அறிவிக்கப்பட்டது. மறுநாளும் அதற்கடுத்த நாளும்  தலைமைச்  செயலரின் உத்தரவுக்காக அவர்கள் காத்திருந்தனர். டிசம்பர் முதலாம் திகதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொடுத்த நெருக்குதலினால் பகலில் 7500 கன  அடி தண்ணீரும்   இரவில் 29000 கன அடி தண்ணீரம் திறந்து விடப்பட்டதாக் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஒரு இரவில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதனால்தான் சென்னை வெள்ளத்தில்மூழ்கியது. அதிகாரிகளின் ஆலோசனையை  கேட்டு செயற்பட்டிருந்தால் இவ்வளவு அனர்த்தம் ஏற்பட்டிருக்காது என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர். பொதுப்பணித்துறையின் பொறியியலாளர்களும் தலைமைச்  செயலக அதிகாரிகளும் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றனர்.  மக்களின் அவலத்தைக் கண்ட தன்னார்வலத் தொண்டர்கள் உடனடியாகக் களத்தில் இறங்கினர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த அரசியல் தலைவர்கள் அனைவரும் வீதியில் இறங்கி மக்களுக்கு உதவினர். தமிழக ஆளும் கட்சியைச் சேர்ந்த எவரும் உடனடியாகக் களத்தில் இறங்கவில்லை.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும், சட்டசபையைக்  கூட்டி விவாதிக்க வேண்டும், போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோஷங்கள் செவிடன் காதில் ஊதிய சங்காக்கின. பாதிக்கப் பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் வார்த்தைக் கூறாத முதல்வர் ஜெயலலிதா வட்ஸ் அப்பில் தன்னிலைவிளக்கம் கொடுத்துள்ளார். இவை எல்லாம் மக்களின் மனதில் ஆறாத வடுவாக உள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு  அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரண உதவிகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.ஆளும் கட்சியினருக்கு  அதிகளவில் அள்ளிக் கொடுக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. எதிர்க்கட்சிகளின் இந்தக்   குற்றச்சாட்டுகள் எவற்றுக்கும் ஜெயலலிதா பதிலளிக்கவில்லை.
மத்திய  அரசு கொடுத்தா நிவாரண நிதி போதுமானதல்ல மேலும் நிவாரண நிதி தரவேண்டும் எனஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார் ஆடம்பரப் பொருட்களும் வீட்டுப் பாவனைப்போருகளும் வெள்ளத்தால் அடித்துச்  செல்லப்பட்டு விட்டன.  சிறுகச் சிறுக சேமித்ததை எல்லாம் சிறுதுளியாகி பெருமழையான் வெள்ளம் அள்ளிக் கொண்டு போனது. பணம் கொடுத்து வாங்கிய பொருட்களும் இலவசமாகக் கிடைத்த பொருட்களும் வெள்ளத்துக்கு இரையாகின. மிக்சி,கிரைண்டர் ஆகியவற்றை இலவசமாக வழங்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழம் முன்வந்துளது. இது இன்னொரு வகையான தேர்தல்   கொடுப்பனவின் முன்னோட்டமாக இருக்கும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன,
கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதற்காக மட்டும் ரூ.40 கோடி செலவாகியிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, மழை - வெள்ள நிவாரணப் பணிகள் எதுவுமே நடக்காத நிலையில் அதற்காக ரூ.100 கோடி செலவழிக்கப் பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது கண்டிக்கத்தக்கதாகும்  அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகம்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றை வீழ்த்துவேன் என சபதமிட்ட வைகோவின் கட்சி நிர்வாகிகள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து அவருக்கு அதிர்ச்சியளித்துள்ளனர். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஒரு மாற்று அணியாக மக்கள் நல கூட்டு இயக்கத்தை மக்கள் நல கூட்டணியாக மாற்ற வைகோ முடிவு எடுத்தபோது, அக்கட்சியில் இருந்து முன்னணி தலைவர்களான மாநில பொருளாளர் மாசிலாமணி, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், வைகோவின் தீவிர விசுவாசியுமான பாலவாக்கம் சோமு, சேலம் மாவட்ட செயலாளர் தாமரைக்கண்ணன்,  . மாநில மகளிர் அணி செயலாளர் விஜயகுமாரி உள்பட பலர் விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில்  இணைந்து  மறுமலர்ச்சி  திராவிட முன்னேற்றக் கழக தலைமைக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தனர்.
இந்நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக. தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஜோயல், நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் பெருமாள், நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளர் சரவணன்கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் தில்லை செல்வம் உள்ளிட்ட 12 நிர்வாகிகள், அண்ணா அறிவாலயத்தில்  திராவிட முன்னேற்றக் கழக. தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் 
மு.க.ஸ்டாலின்  ஆகியோரை சந்தித்து,  திராவிட முன்னேற்றக் கழகத்தில்  இணைந்து  கொண்டனர். இவர்களுடன் அவர்களின் ஆதரவாளர்கள் பலரும்  திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.  .இவர்களின் வெளியேற்றம்  வைகோவுக்கு பலத்த  அடியாக உள்ளது.

தூத்துக்குடியில் ஜோயலின் செல்வாக்கினால் திராவிட முன்னேற்றக் கழகம் பலமாகி உள்ளது.  திராவிட முன்னேற்றக் கழகத்துடன்  கூட்டணி சீர எந்தக்  கட்சியும் தயாராக இல்லை. கட்சி அப்படியே இருக்க கட்சியின் தலைவர்களையும்  மாவட்டச் செயலாளர்களையும் தொண்டர்களையும் வளைத்துப்போடும் போடும் கைங்கரியத்தில்   திராவிட முன்னேற்றக் கழகம் ஈடுபட்டுள்ளது.
தமிழக மக்கள் அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். மக்களின் நாடித்துடிப்பை அறிந்து சேரும் கூட்டணியே வெற்றி பெரும்.

வர்மா.
தமிழ்த்தந்தி
20/12/15

No comments: