Wednesday, February 17, 2016

என்ன செய்யப்போகிறார் மனித உரிமைகளுக்கான செயலர் இலங்கை அரசியல் விவகாரம் இன்று சர்வதேசத்தினால் உன்னிப்பாக அவதானிக்கப்படும் சூழ்நிலை எழுந்துள்ளது  இலங்கையின் சகல அரசியல் நகர்வுகளையும் உலக நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. உலக  நாடுகளின் சந்தேகப் பார்வையிலிருந்து இலங்கையை விடுவிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் இணைந்து முயற்சி செய்கிறார்கள். அவர்களின் முயற்சிக்கு இலங்கையின் சில அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள். இலங்கையில் நடைபெறுவதை அவதானிப்பதற்கு உலகத்தலைவர்கள் பலர்  விஜயம் செய்கிறார்கள்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான  செயலர் இளவரசர் செயிட் ராட் அல்ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்தது வரலாற்று முக்கியத்துவம் மிக்கது. ஐ.நா என்று உச்சரித்தாலே சிலர் சீறிச்சினந்து எச்சரிக்கை விடுத்த காலம்  ஒன்று இருந்தது.  ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான செயலாளராக நவநீதம்பிள்ளைஇருந்தபோது முன்னைய அரசாங்கம் கடும் போக்கை  கடைப்பிடித்தது. ஐ.நாவில் இலாங்கைக்கஈ எதிராக நிறைவேற்றப்பட்ட அனைத்துத் தீர்மானங்களும் அவரின் வழி நடத்துதலிலே தான் நிறைவேற்றப்பட்டன. ஆகையினால் அவரின் மீது கடும் சீற்றத்தில்இருந்தது. இன்று அந்த நிலைமை மாறி விட்டது.

ஐ.நாவைச் சேர்ந்த எவரும் இலங்கையில் காலடி வைக்க அனுமதிக்க மாட்டோம் என கடந்த அரசு சவால் விடுத்தது. உலக நாடுகள்   இலங்கை மீது  கொண்ட தவறான பார்வையை தவிர்க்க நல்லிணக்க அரசாங்கம் பிரயத்தனப்படுகிறது. அதன் ஒரு படியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான  செயலர் இளவரசர் செயிட் ராட் அல்ஹுசைனுக்கு விரித்த செங்கம்பளம். கொழும்பு,யாழ்ப்பாணம்,திருகோணமலை,கண்டி .ஆகிய இடங்களுக்குச்சென்ற அவர் அரசியல்  தலைவர்களையும் மதகுருமாரையும்,சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்தார்.  உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம் பெயர்ந்து அகதி முகாமில் வசிப்பவர்களைக் கண்டு ஆறுதல் தெரிவித்தார்.

வெளிநாட்டலுவல்கள்  அமைச்சர் மங்கள சமரவீர, வடமாகாண  ஆளுநர் பளிஹக்கர, வடமாகாண முதலமைச்சர் சிசீ.வி.விக்னேஸ்வரன், கிழக்கு  மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ,  கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமத், பாதுகாப்பு அமைச்சு செயலர், முப்படைத்தளபதிகள் ஆகியோரை முதலில் சந்தித்தார்.  பின்னர் ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் ஆகியோரையும் தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

காணமல் போனவர்களின் உறவினர்களை  யாழ்ப்பணத்தில் சந்தித்து அவர்களின் வலியை உணர்வதாகக்  குறிப்பிட்டார். சபபதிப்பிள்ளை  முகாமுக்குச்சென்ற அவர் அடுத்த முறை நான் இங்கு வரும்  போது இம்முகாம் இருக்கக்கூடாது  என்றார். காணமல் போன நாலாயிரம் பேர் பற்றிய விபரங்களை முதலமைச்சர் ஐ,நா மனித உரிமைகளுக்கான  செயலாளரிடம் முதலமைச்சர்  விக்கினேஸ்வரன் கையளித்தார்.
ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான மூன்று தீர்மானங்கள் நிலுவையில் இருக்கும் நிலையில் அதன் மனித  உரிமைகளுக்கான செயலாளரின் இலங்கை விஜயம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதபடுகிறது. இலங்கையில்நடை பெற்றவைகளை அறிக்கைகள் மூலம் பார்த்துத்  தெரிந்து கொண்ட அவர்  யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில்  சந்தித்து உரையாடியவைகளை அறிக்கைப்படுத்துவார்.

 ஐ.நா  மனித உரிமைகள் செயலாளரின் இலங்கை விஜயத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் விசுவாசிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களின் எதிர்ப்பை எல்லாம் புறக்கணித்த அரசாங்கம் அவரை நல்லபடி வரவேற்று அனுப்பி வைத்தது. இலங்கை மீதான் வெளிநாடுகளின் அழுத்தம் வெகுவாகக்  குறைந்துள்ளது. அந்த அழுத்தத்தை இல்லாமல் செய்வதே அரசின் முக்கிய பணியாகும்  இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான  செயலர் இளவரசர் செயிட் ராட் அல்ஹுசைனின் அறிக்கை மென்மையாக இருக்கும் என இலங்கை நினைக்கிறது. ஆனால் இலங்கை அரசாங்கம் நினைப்பது  போல மிக மென்மையாக அவரது அறிக்கை இருக்காது.

பொறுப்புக் கூற வேண்டிய அவசியம் இலங்கைக்கு இருக்கிறது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.  கலப்பு வீதி மன்ற விசாரணையை அவர் வலியுறுத்துகிறார். சர்வதேச விசாரணை உள்ளக விசாரணை என்ற இலங்கையின் இழுபறியை அவர் விரும்பவில்லை. இது நல்லிணக்க அரசு இல்லை மனித உரிமைகள் இப்போழுத்தும் மீறப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது. நல்லிணக்கம் மனித உரிமைகள் விஷயத்தில் இலங்கை முன்னேற்றமடைந்துள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான  செயலர் இளவரசர் செயிட் ராட் அல்ஹுசைன்  நற் சான்றிதழ் வழங்கி உள்ளார்.

 இறுதிக்கட்ட யுத்தத்தில் நடைபெற்றதை பற்றிய மனித உரிமைகளை உரிய முறையில் விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை  வழங்க வேண்டும் என்பதே உலக நாடுகளின் விருப்பம் மனித உரிமை மீறல் எதுவும் நடைபெறவில்லை பயங்கரவாதிகளை அழித்தோம் என்பதே அன்றைய இலங்கை அரசின் நிலைப்பாடு நல்லிணக்க அரசு இதற்கொரு முடிவைத் தரும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடம் உள்ளது.  பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை மீட்ட இராணுவ வீரனுக்கு தணடனை வழங்க  முடியாது என்ற கோஷத்தால்  விசாரணைகளை முன்னெடுக்க முடியாத நிலை உள்ளது.

இதே வளை சர்வதேச விசாரணைக்கு எதிராக கையெழுத்து வேட்டை தலை நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ  தலைமையில் இதற்கான ஆரம்பவிழா விகாரையில் நடைபெற்றது.  மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருந்தபோத்து வரின் ஆட்சிக்கு எதிராக இதே போன்று கையெழுத்து வேட்டை நடைபெற்றது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான  செயலர் இளவரசர் செயிட் ராட் அல்ஹுசைன் ஐ.நாவில் சமர்ப்பிக்கு அறிக்கையிலேதான் இலங்கை அரசியலின் எதிர்காலம் தங்கி உள்ளது. இலங்கை அரசியல் சர்வதேச வலையில் விழுந்துள்ளது. அந்த வலையில் இருந்து மீழ்வது எப்படி என நல்லிணக்க அரசு யோசிக்கிறது. இலங்கை அரசின் மீது நாம எதையும் திணிக்கவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான  செயலர் இளவரசர் செயிட் ராட் அல்ஹுசைன் தெரிவித்துள்ளார். ஐ.நாவின் அறிக்கையில்  கூறப்பட்டவைகளை நடை முறைப்படுத்தினால் சிக்கல் இல்லை என மறை முகமாக சுட்டிக்காட்டியுள்ளார். உள்ளகப் பொறி முறையில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதை சர்வதேசம்  நம்புகிறது. உள்ளகப்பொறிமுறை சில சமயம் குற்றவாளிகளை தப்ப வைத்துவிடும் என்பதை சர்வதேசம் அறியும்.

ஆயுத்தப் போரில் மோசமான மனித உரிமைகள் நடைபெற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை நடத்திய அனுபவம் ஐ.நா மனித உரிமைகள்  ஆணையத்துக்கு உண்டு. நீதியான விசாரணையை இலங்கை முன்னெடுத்தால் தலையீடு எதுவும் இருக்காது.

சர்வதேசத்துக்கு மட்டுமல்லாது இலங்கை மக்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டிய கடமை லல்லினக்க அரசுக்கு இருக்கிறது.
வானதி
சுடர் ஒளி
பெப்ரவரி 17/பெப்ரவரி 23
No comments: