Sunday, February 21, 2016

மக்களை ஏமாற்றும் தேர்தல்கால கருத்துக்கணிப்புகள்

தேர்தல் நெருங்கும் பொது கூடவே கருத்துக்கணிப்புகளும் வெளிவரத் தொடங்க்கிவிடும். யாருக்கு வாக்களிப்பது என கடைசி நேரத்தில் முடிவெடுப்பவர்கள்கருத்துகணிப்பை மையமாக வைத்து வாக்களிப்பார்கள். நடுநிலைஅயந கருத்துக்கணிப்புகள் தேர்தல் முடிவை  வெளிப்படுத்தும் தன்மை வாய்ந்தவை. சில சமயங்களில் கருத்துக்கணிப்பை வாக்காளர்கள் பொய்யாக்கிய சந்தர்ப்பங்களும் உள்ளன. தமக்குச்சாதகமான கருத்துக்கணிப்புகளை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் தலைவர்கள் தமக்கு எதிரான கருத்துக்கணிப்புகளை புறந்தள்ளிய வரலாறுகளும் உள்ளன.

தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்கத்தொடங்கி விட்டது. தேர்தலை மயமாக வைத்து கருத்துக்கணிப்புகளும் வெளிவரத் தொடங்கிவிட்டன. திராவிட முன்னேற்றக் கழக‌த்துடனும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்துடனும் கூட்டணி சேரும் கட்சிகள் அவை என்ற கருத்துக்கணிப்பு அண்மையில் வெளியானது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இப்படியான கருத்துக் கணிப்பு உதவும். என்றாலும்  அதிக தொகுதிகளை ஒதுக்கும் பிரதான கட்சியுடன் தான் கூட்டணி என்பதே கட்சித் தலைவரின் நிலைப்பாடு. தேர்தல் செலவை பிரதான கட்சி ஏற்றுக்கொண்டால் கட்சித்தலைவர் மிகவும் மகிழ்ச்சியடைவார்.  தேர்தல் அறிவிப்பு வெளிவரமுன்னமே தமிழகத்தில் கருத்துக்கணிப்புகள் வெளியாகத் தொடங்கிவிட்டன.

விகடனின் கருத்துக்கணிப்பு ஜெயலலிதாவை எரிச்சலடைய  வைத்தது. ஐந்து வருடகால ஆட்சியை விமர்சித்து விகடனில் வெளியான கட்டுரைகள் அண்ணா  திராவிட முன்னேற்றக் கழக‌த் தலைவர்களை சங்கடப்படுத்தின. விகடன் பிரசுரங்களை கைப்பற்றிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்  தலைவர்கள் அவற்றை மக்கள் பார்க்க விடாது தடுத்தனர். ஜெயலலிதா ஒருபடி மேலே போய் விகடனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார்.

குமுதத்தின் கருத்துக்கணிப்பு ஜெயலலிதாவை குளிரவைத்தது. விகடனின் கருத்துக் கணிப்பை மூர்க்கமாக எதிர்த்த அஜெயலளித்த குமுதத்தின் கருத்துகணிப்பை மெளனமாக ஏற்றுக்கொண்டார்.  சென்னை லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு தேர்தல் முடிவுடன் ஓரளவுக்கு ஒத்துப் போகும் தன்மை வாய்ந்தவை.  லயோலா கல்லூரியின் பழைய மாணவர்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு திராவிட முன்னேற்றக் கழக‌த்துக்கு சார்பாக வெளியானது. இக்கருத்துக் கணிப்பு திராவிட முன்னேற்றக் கழக‌ அனுதாபிகளால் திட்டமிட்டு வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. பழைய மாணவர்களால் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புக்கும் லயோலா கல்லூரிக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்ற அறிக்கை வெளியானதால் இது திட்டமிடப்பட்ட கருத்துக்கணிப்பு என்பது புலனாகியது
 புதிய தலைமுறையின் கருத்துகணிப்பு முற்று முழுதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்துக்கு சார்பானதாக உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌கத்தின் கடந்த ஐந்து வருட ஆட்சி மிகவும் சிறப்பானது. அடுத்த முதல்வராக ஜெயலலிதா வருவார்.  அண்ணா  திராவிட முன்னேற்றம் தான் தமிழகத்தில் நல்லாட்சியை வழங்கியது. என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு அண்ணா  திராவிட முன்னேற்றக் கழக‌ஆட்சியில் மிகவும் சிறப்பாக உள்ளது என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியை மக்கள் மறந்து விட்டார்களா அலது புதிய தலைமுறை அதனை இருட்டடிப்பு செய்து விட்டதா எனத்தெரியாது தமிழக மக்கள் குழம்பியுள்ளனர்.

இந்தியாவின் கிங் மேக்கர் என இன்றும் பெருமையாகப் பேசப்படும்  காமராஜருடன்எந்த  ஒரு அரசியல் தலைவரையும் ஒப்பிட முடியாது. தமிழக முதலமைச்சராக  இருந்தபோது அவரது கையில் பணம் இல்லை.  இறக்கும் போதும் அவரது கையில் பணம் இல்லை. இன்றைய  அரசியல் தலைவர்கள்மீது வருமானத்துக்கு மீறிய சொத்துச்சேர்த்த வழக்குகள் உள்ளன. சிலர் தண்டனை பெற்றுள்ளார்கள்.

தமிழகத்தின் அடுத்த முதல்வராகர் ஜெயலலிதா வரவேண்டும் என புதியதலைமுறையின் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. ஜெயலலிதவுக்கு  ஆதரவாக  32.63  சத வீதத்தினர்   கருத்துத் தெரிவித்துள்ளனர்.18.88சத வீதமானோர் ஸ்டாலின்  முதல்வராக வேண்டும் எனவும்   15.21சத வீதமானோர் கருணாநிதி முதல்வராக வேண்டும் எனவும் கருத்துத் தெரிவித்துள்ளனர்  ஜெயலலிதாவுக்கான அதரவு வீழ்ச்சிடியடைந்துள்ளது.. இது ஜெயலலிதாவுக்கும் தெரிந்த உண்மை.

 திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல்வர் வேட்பாளர் கருணாநிதியா  ஸ்டாலினா என்ற விவாதம் திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் கொதிநிலையில் உள்ளது..  அதனை தூண்டிவிடுவது போன்ற கருத்துகணிப்புகள் அடிக்கடி வெளிவந்து சர்ச்சையை கிளப்பும் புதிய தலை முறையின் கருத்துக்கணிப்பும் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே  விரிசலை ஏற்படுத்தும்வகையில் அமைந்துள்ளது. தினகரன் நாளிதழ்  கொளுத்திப் போட்ட இந்தக் கருத்துக்கணிப்பு  இன்று வரை தொடர்கிறது.

   ஊழல் வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம்   தீர்ப்பளித்த போது நடைபெற்ற வன்செயலில் மூன்று மாணவிகள் பஸ்ஸுடன் எரித்துக் கொல்லப்பட்டது புதியதலைமுறைக்குத் தெரியாதா. வருமானத்துக்கு அதிகமாக சொத்துச்சேர்த்த வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என கடந்த ஆண்டு பெங்களூர் நீதிமன்றம்  தீர்ப்ளித்த   போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்களினால் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட  வன்செயல்களை மக்கள் மறக்கவில்லை. புதியதலைமுறைக்கு கருத்துக் கூறியவர்கள் வசதியாக மறந்துவிட்டார்கள்.

சில கருத்துக் கணிப்புகள் ஜெயலலிதாவையும் சில கருத்துக் கணிப்புகள் ஸ்டாலினையும் முன்னிலைப்படுத்தி வெளியாவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளன. இவர்களுக்குச் சாதகமானவர்கள் திட்டமிட்டி இப்படியான கருத்துக்கணிப்புகளை வெளியிடுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது. தமிழகத்தில் கருணாநிதியை  விட ஸ்டாலினுக்கு   அதிக செல்வாக்கு இருப்பதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்டாலினுக்கு அதரவனவர்கள் ஈதன் பின்னணியில் இருப்பது ஒன்றும் இரகசியமானதல்ல.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்த  வாரிசுபோட்டியில் ஸ்டாலின் முன்னணியில் இருக்கிறார். ஸ்டாலினுக்குப் போட்டியாக இருந்த சகோதரர் அழகிரி கட்சியில் இருந்து  வெளியற்றப்பட்டதால்  அவர் இளவரசராக ஜொலிக்கிறார். இதனை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள ஸ்டாலினின் ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர். ஸ்டாலினின் மருமகன் சபரீசன் சமூக  வலைத்தளங்களின் ஊடக ஸ்டாலினின்  செல்வாக்கை உயர்த்துகிறார். 

தேர்தல்கால கருத்துக்கணிப்புகளை மக்கள் நம்பிய  காலம் மாறிவிட்டது. அரசியல் கட்சிக்கும் தலைவர்களுக்கு சார்பான கருத்துக் கணிப்புகளால்  எந்தவிதமான மாற்றமும் ஏற்படப்போவதில்லை.
ரமணி
தமிழ்த்தந்தி
21/02/16



No comments: