Wednesday, June 20, 2018

அதிசயங்கள் ஆச்சரியங்கள் நிறைந்த உலகக்கிண்ணப் போட்டி


ரஷ்யாவில் நடைபெறும் உலகக்கிண்னப் போட்டியில்  ரஷ்யா, எகிப்து ஆகியவை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளன. ஏனைய நாடுகள் தல ஒரு போட்டியில் விளையாடியுள்ளன. இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற ரஷ்யா அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது. இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த எகிப்து கடைசிப் போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் உள்ளது.

உலகக்கிண்ணச் சம்பியனான ஜேர்மனி, இம்முறையும் சம்பியனாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்த வேளையில் தோல்வியடைந்தது. பலமான் அணிகளான ஆர்ஜென்ரீனா, போத்துகல்,ஸ்பெய்ன்,பிறேஸில் ஆகியனமுதலாவது  போட்டியில் வெற்றி பெறாமல் சம நிலையில் முடித்துக்கொண்டன. செனகல்,தென்.கொரியா ஆகியன வியக்கத்தகும் வகையில் முதல் போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கின்றன.

பிரிவு

 இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்திலேயே பரபரப்பு தொற்றிக் கொண்டது. ரஷ்யா 5-0 என சவுதி அரேபியாவை வென்றது. அதற்கடுத்த ஆட்டத்தில் நட்சத்திர வீரர் மொகம்மது சாலாஹின் எகிப்தை 1-0 என உருகுவே வென்றது. ரஷ்யாவுக்கு எதிரான போட்டியிலும் எகிப்து தோல்வியடைந்தது.தற்போதைக்கு ரஷ்யா 6 புள்ளிகளுடனும், உருகுவே தலா 3 புள்ளிகளுடனும் உள்ளன.

பி பிரிவு

இந்தப் பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் ஈரான் 1-0 என மொராக்கோவை வென்றது. நடட்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனி ஆளாக விளையாடி ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில்  3-3 என போர்ச்சுகலை தோல்வியில் இருந்து மீட்டார். ஈரான் 3 புள்ளிகளுடன்  முன்னிலையில் உள்ளது.

சி பிரிவு

பிரான்ஸ்-அவுஸ்திரேலியா ஆட்டம். 2018 ஆம்  ஆண்டு உலகக்கிண்ண வரலற்றில் நிச்சயம் பதிவுசெய்யப்படும்  உதைபந்தாட்ட உலகில் ரீப்பிளே செய்துபார்த்து பெனால்டி கொடுத்த முதல் ஆட்டம் என்பதால். 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் ஃபிரான்ஸ் அவுஸ்திரேலியாவை ஜெயித்ததற்கு உதவியது.
பிரான்ஸ் முதல் கோலை அடித்தது. கிரீஸ்மேனின் முதல் உலகக் கிண்ணக் கோல். இதுவரை 6 முறை உலகக் கிண்ணப்போட்டியில் விளையாடி இருந்தாலும்,  இதுதான் கிரீஸ்மேனின் முதல் கோல்.
பயிற்சியாளர் ஓகே ஹாராய்தின் வழிகாட்டுதலில்  கடந்த 15 போட்டிகளில் ஒன்றில்கூட டென்மார்க் அணி தோல்வி பெறவில்லை . பெருவுக்கு பெனால்ரி வாய்ப்பு கிடைத்தது.இதுவரை பெனால்டி வாய்ப்பை பெரு அணி தவறவிட்டதேயில்லை. 1-0 என முதல்பாதியில் முன்னிலை பெற்றுவிடலாம் என்பதே பெரு ரசிகர்களின் நம்பிக்கையாக இருந்தது. கோய்வாவினால் . அந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. பந்து கோலுக்கு மேலே எங்கோ சென்றது. இதனால் இரு அணிகளுக்கும் கோல் எதுவும் இன்றி முதல்பாதி முடிந்தது. இதற்கு முந்தைய ஆட்டத்தில் ஐஸ்லாந்துக்கு எதிராக ஆர்ஜென்ரீனாவின் மெஸ்சியும் பெனால்டி வாய்ப்பைத் தவறவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என அவுஸ்திரேலியாவை வென்றது. பெருவை 1-0 என டென்மார்க் வென்றது. பிரான்ஸ், டென்மார்க் ஆகியன தலா 3 புள்ளிகளுடன் உள்ளன.

டி பிரிவு

அறிமுக நாடான ஐஸ்லாண்டுக்கு எதிரான பெனால்ரியை கோல்கீப்பர்   ஹால்டர்சன் தடுத்தார்.உலகக்கிண்ண வரலாற்றில் இதுவும் முக்கியமானது.. ஆர்ஜென்ரீனாவுக்காக விளையாடும் போட்டிகளில் மெஸ்ஸி தவறவிடும் மூன்றாவது மிக முக்கியமான பெனால்ட்டி வாய்ப்பு இது. பார்சிலோனாவுக்காக ஆடும்போது பெனால்ட்டியை எல்லாம் கோலாக்கிகிறார்..ஆர்ஜென்ரீனா என்றால் மட்டும் கோட்டைவிடுகிறாரே என மெஸ்ஸி மீதான விமர்சனங்கள்  அதிகமாக உள்ளன.

இளம் வீரர்கள் அடங்கிய நைஜீரியா அணி, அனுபவம் வாய்ந்த குரோஷியாவின் யுக்தியை சாதுர்யமாக சமாளிக்க முடியாமல் தடுமாறியது. 13-வது நிமிடத்தில் குரோஷிய வீரர் பெரிசிச் அடித்த நல்ல ஷாட் மயிரிழையில் கம்பத்திற்கு மேலாக பறந்தது. இது போன்ற மேலும் சில வாய்ப்புகளை குரோஷிய வீரர்கள் வீணடித்தனர்.
32-வது நிமிடத்தில் கார்னர் பகுதியில் இருந்து வந்த பந்தை முதலில் குரோஷியாவின் ஆன்ட் ரிபிச்சும் பிறகு சக வீரர் மரியோ மான்ட்ஜூகிச்சும் தலையால் முட்டி தள்ளினர். அப்போது வலை அருகில் நின்ற நைஜீரியா வீரர் ஒஹெனகரோ எடிபோ காலால் தடுக்க முயன்ற போது அது துரதிர்ஷ்டவசமாக அவரது காலில் பட்டு வலைக்குள் புகுந்து சுயகோலாக (ஓன்கோல்) மாறியது.

கடந்த உலக கோப்பையில்நாக்-அவுட்சுற்றில் பிரான்சுக்கு எதிராக தோல்வி அடைந்த ஆட்டத்தில் நைஜீரியா அணி இதே போல் சுயகோல் போட்டது. உலகக்கிண்ண வரலாற்றில் அடுத்தடுத்த இரு ஆட்டங்களில் சுயகோல் அடித்த முதல் அணி நைஜீரியா தான்.

சூப்பர் ஈகிள்ஸ்என்று செல்லமாக அழைக்கப்படும் நைஜீரியா அணியினரால்  குரோஷியாவின் கோல் பகுதிக்குள் அவ்வளவு எளிதில் ஊடுருவ முடியவில்லை. சொல்லப்போனால் முதல்பாதியில் அந்த அணி இலக்கை நோக்கி துல்லியமாக ஒரு ஷாட் கூட உதைக்கவில்லை.
முடிவில் குரோஷியா 2-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை வென்று   வெற்றியுடன் தொடங்கியது. 1998-ம் ஆண்டுக்கு பிறகு உலகக்கிண்ணப்  போட்டியில் தங்களது தொடக்க ஆட்டத்தில் குரோஷியா ருசித்த முதல் வெற்றி இது தான்.


கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் சிறந்த வீரர் விருதைப் பெற்ற லியோனல் மெஸ்ஸியின் மாயம் முதல் ஆட்டத்தில் பலிக்கவில்லை. அவர் கோல் ஏதும் அடிக்கவில்லை. மெஸ்சி அடித்த பனால்ரி மிஸ்ஸானது. அவருடைய அர்ஜென்டினா அணி 1-1 என ஐஸ்லாந்துடன் சமன் செய்தது.. மற்றொரு ஆட்டத்தில் நைஜீரியாவை 2-0 என வென்ற குரேஷியா 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

பிரிவு

 செர்பியா 1-0 என கோஸ்டாரிகாவுக்கு அதிர்ச்சி தோல்வியை அளித்தது.   பிறேஸில் அணி 1-1 என சுவிட்சர்லாந்துடன் சமன் செய்தது. . செர்பியா 3 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது.

எஃப் பிரிவு

நடப்பு சம்பியன் ஜேர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 33 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் ஜேர்மனியை வெற்றி கொண்டது மெக்சிகோ.
ஏகப்பட்ட அரைவாய்ப்புகளை கோலாக மாற்ற முடியாமல் தவித்த மெக்சிகோ லோசானோவின் கோல் மூலம் ஜேர்மனி முகாமில் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. இந்தத் தோல்விக்கு முன்னதாக 8 உலகக்கிண்ணப் போட்டிகளில் தோற்காமல் ஆடிவந்த ஜேர்மனி தோற்க நேரிட்டது. 1982க்குப் பிறகு ஜேர்மனி உலகக்கிண்ணப் போட்டியில்முதல் போட்டியைத் தோற்றுள்ளது. !
2006-ல் ஜோக்கிம் லோ பயிற்சியாளர் பொறுப்பில் அமர்ந்தத பிறகே எந்த ஒரு முக்கிய  பெரிய கால்பந்து தொடரின் முதல் ஆட்டத்தில் வெற்றி பெறுவதே ஜேர்மனியின் வழக்கம்.  இலக்கு நோக்கி அடித்தல் கோலுக்கான முனைப்புகள் பாஸ் துல்லியம் என்று ஜேர்மனி ,மெக்சிகோவைக் காட்டிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கடைசியில் பினிஷிங்இ கோல்தானே வெற்றி பெறச்செய்யும்.

மெக்சிகோவை விட நிறைய ஷாட்டுகளை (25) ஜெர்மனி அணியினரே அடித்தனர். பந்தும் இவர்கள் (60 சதவீதம்) வசமே அதிகமாக இருந்தது. இருப்பினும் இவர்களின் எல்லா வியூகங்களுக்கும் தங்களது ஆர்ப்பரிப்பான ஆட்டத்தின் மூலம் மெக்சிகோ அணியினர்வேட்டுவைத்தனர்.

  
பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் மெக்சிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. நடப்பு உலக கோப்பையில் மிகப்பெரிய அதிர்ச்சி தோல்வி இதுவாகும். 1982-ம் ஆண்டுக்கு பிறகு உலகக்கிண்ண முதல்  ஆட்டத்தில் ஜேர்மனி சந்தித்த முதல் தோல்வியாக இது பதிவானது. அதே சமயம் ஜேர்மனி அணியை மெக்சிகோ வீழ்த்துவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 1985-ம் ஆண்டு நட்புறவு ஆட்டத்தில் வென்று இருந்தது.

 நடப்பு சாம்பியனான ஜேர்மனி  மெக்ஸிகோவிடம்அதிர்ச்சி தோல்வி அடைந்தது. மெக்ஸிகோ அணி 1-0 என ஜேர்மனியை அபாரமாக வென்றது. மற்றொரு ஆட்டத்தில் சுவீடன் 1-0 என தென் கொரியாவை வென்றது. சுவீடன், மெக்ஸிகோ ஆகியன தலா 3 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கின்றன.

ஜி பிரிவு

பெல்ஜியம் அணி 3-0 என பனாமாவை வென்றது. கடைசி நேர கோலால் 2-1 என துனீஷாவை இங்கிலாந்து வென்றது. பெல்ஜியமும்  இங்கிலாந்தும்  தலா 3 புள்ளிகளுடன் உள்ளன.

எச் பிரிவு

  ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. மற்றொரு ஆட்டத்தில் போலந்தை 2-1 என செனகல் வென்றது. ஜப்பானும் செனகலும்  தலா 3 புள்ளிகளுடன் உள்ளன.

No comments: