Wednesday, June 27, 2018

ஆர்ஜென்ரீனாவைக் காப்பாற்றிய வெற்றி


டி பிரிவில் நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றதால் ஆர்ஜென்ரீனா அடுத்த சுற்றுக்குச் செல்லத் தகுதி பெற்றது. முதல் போட்டியில் அறிமுக நாடான ஐஸ்லண்ட் 1-1 என்ற   கோல்கணக்கில் சமப்படுத்தியதால் உதைபந்தாட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த அதிர்ச்சி மறைவதற்குள் 3-0 என்ற கோல்கணக்கில் குரோஷியாவிடம் ஆர்ஜென்ரீனா தோல்வியடைந்தது. வெறி பெறவேண்டிய கட்டாயத்தில் நைஜீரியாவுடன் மோதொய ஆர்ஜென்ரீனா 2-1 எனும் கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

ஆர்ஜென்ரீனா பெரிதும் நம்பி இருந்த மெஸ்ஸி, முதல் இரண்டு போட்டிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தவில்லை.  இந்தத் தொடரில் முதலாவது கோலை அடித்து  நம்பிக்கை ஊட்டினார். ஆர்ஜென்ரீனா வெற்றி பெற்றது. ஆனால், அதனுடைய உணமையான விளையாட்டைக் காணமுடியவில்லை. போட்டியைச் சமப்படுத்துவதிலே நைஜீரியா ஆர்வம் காட்டியதால்  கோல் அடிக்கும் வாய்ப்புகலைத் தவறவிட்டது.  கால் இறுதிக்கு முந்தைய போட்டியில்  பிரான்ஸுடன்  ஆர்ஜென்ரீனா  மோதுகிறது. பிரான்ஸுடன் இதே  போன்று விளையாடினால் அடுத்த சுற்றுடன் ஆர்ஜென்ரீனா வெளியேற வேண்டி ஏற்படும்.

 அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்ற  குரோஷியா ஐஸ்லாண்டை எதிர்த்து விளையாடிய 2-1 என்ற கோல்கனக்கில் வெற்றி பெற்றது.
சி பிரிவில் பிரான்ஸ், டென்மாக் ஆகியவற்றுக்கிடையேயான போட்டி கோல் அடிக்கப்படாமல் வெற்றி தோல்வியின்றி முடிந்தது.  இந்தத் தொடரில் கோல்கள் இன்றி சமநிலையில் முடிந்த ஒரேஒரு போட்டி இதுவாகும்.  வெற்றி அல்லது சமநிலை என்ற இக்கட்டான நிலையில் விளையாடிய டென்மாக் தப்பிப் பிழைத்தது. பிரான்ஸும்  டென்மாக்கும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றன. அடுத்த சுற்றுக்குத் தெரிவானது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 2-0 என்றகோல்கணக்கில் பெரு வெற்றி பெற்றது. இரண்டு நாடுகளும் முதல் சுற்றுடன் நாடுதிரும்புகின்றன.

No comments: