Saturday, May 14, 2022

சென்னையை வெளியேற்றிய பவர்கட்


 ஐபிஎல் 2022 தொடரில் ஆரம்பத்தில் இருந்தே சரியான தீர்ப்பை வழங்க வேண்டிய அம்பயர்கள் பல தருணங்களில் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருவது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. அதன் உச்சகட்டமாக  மே 12-ஆம் திக‌தி நடைபெற்ற 59-வது லீக் போட்டியில் நடப்பு ச‌ம்பியன் சென்னைக்கு எதிராக அம்பயர்கள் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதால் சென்னை தோல்வியடைந்தது.

 புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு முதல் ஓவரிலேயே டேவோன் கான்வே எல்பிடபிள்யூ முறையில் கோல்டன் டக் அவுட்டானார்.

அந்த பந்து பிட்ச்சிங் அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் என்பதால் பெரும்பாலான அம்பயர்கள் அவுட் கொடுக்க மாட்டார்கள். ஆனால் எந்தவித யோசனையுமின்றி அம்பயர் கையை உயர்த்தியதும் அதிர்ச்சியான டேவோன் கான்வே அதை எதிர்த்து மறுபரிசீலனை செய்ய டிஆர்எஸ் கோரினார்.

ஆனால் அதற்கு வான்கடே மைதானத்தில் இரவை பகலாக்கும் மின்விளக்குகளை எரியும் அளவுக்கு மின்சாரம் இருந்த நிலையில் டிஆர்எஸ் செய்யும் அளவுக்கு பவர் இல்லாத காரணத்தால் நீங்கள் பெவிலியன் திரும்பலாம் என்று அம்பயர் பதிலளித்தது மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. அதனால் அனைவரும் அதிர்ச்சியடைய 2.4 ஓவர்கள் வரை பவர்கட் நீடித்ததால் அதற்குள் ரொபின் உத்தப்பாவும் அதே மாதிரியான எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகி சென்றார்.

 12 போட்டிகளில் 8-வது தோல்வியை பதிவு செய்த சென்னை 2020க்கு பின் வரலாற்றில் மீண்டும் 2-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. ‍   அப்பட்டமான அநீதி:

1.முதலில் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான கோடிகளை வருமானமாக கொட்டித்தரும் ஐபிஎல் போன்ற உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் தொடரில் பவர்கட் என்பதால் டிஆர்எஸ் எடுக்க முடியவில்லை என்பதே மிகப்பெரிய அவமானம் நிறைந்த தவறாகும். 2. சரி மின்வெட்டு என்பது எதிர்பாராத ஒன்று என்ற நிலையில் சென்னைக்கு 2.4 ஓவர்கள் வரை டிஆர்எஸ் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலையில் அம்பயர்கள் நியாயமாக என்ன செய்திருக்க வேண்டும். ஒன்று எஞ்சிய போட்டி முழுவதும் டிஆர்எஸ் அனுமதிக்கப்படாது என்று அறிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். -

 3. அல்லது குறைந்தபட்சம் சென்னைக்கு கிடைக்காத அதே 2.4 ஓவர்கள் வரை மும்பை பேட்டிங் செய்யும் போது டிஆர்எஸ் அனுமதித்திருக்கக் கூடாது. ஆனால் சென்னைக்கு அநீதி இழைக்கும் வகையில் அந்த அணிக்கு முழுமையாகக் கிடைக்காத டிஆர்எஸ் மும்பை பேட்டிங் செய்யும்போது முழுமையாக கிடைக்க அம்பயர்கள் வழிவிட்டனர்.

 4. குறிப்பாக 98 என்ற இலக்கை துரத்திய மும்பை இஷான் கிசான் 6 (5) ரோஹித் சர்மா 18 (14) டேனியல் சாம்ஸ் 1 (6) ட்ரிஷன் ஸ்டப்ஸ் 0 (2) என சென்னையின் அதிரடித் பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பவர்ப்ளே ஓவர்களில் முக்கியமான 4 விக்கெட்டுகளை இழந்தது.

 5. அதனால் போட்டியில் சென்னை வெற்றி பெறும் சூழலும் உருவானது. அப்போது திலக் வர்மா ஒற்றை இலக்க ரன்களில் டோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானபோது பந்து பேட்டில் படவில்லை என்ற நிலைமையில் அம்பயர் அவுட் கொடுத்திருந்தார். ஆனால் அந்த சமயத்தில் டிஆர்எஸ் அனுமதிக்கப்பட்டதால் அதைப் பயன்படுத்தி தப்பிய திலக் வர்மா முக்கிய 34* (32) ஓட்டங்களை அடித்து சென்னையை தோற்கடித்து விட்டார்..

 6. ஒருவேளை அந்த சமயத்தில் டிஆர்எஸ் மறுக்கப்பட்டிருந்தால் அடுத்ததாக பொல்லார்ட் இல்லாத சமயத்தில் நிச்சயம் சென்னை வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கும். இது ஒரு அப்பட்டமான அநீதி இல்லையா? ஒருதலைப்பட்சமான அம்பயரிங் இல்லையா?

7. இதையே பல முன்னாள் வீரர்களும் வல்லுனர்களும்  று சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இதுமட்டுமல்லாமல் இடுப்புக்கு மேலே நோ பால், பேட்ஸ்மேன் நகர்ந்தும் ஒய்ட் கொடுத்தது என இந்த வருட ஐபிஎல் தொடரில் அம்பயர்களின் அட்டகாசங்கள் உச்சகட்டத்தில் நிகழ்ந்து வருகின்றன.

8. டி.ஆர்.எஸ் வரும்வரை போட்டியை நிறுத்தி இருக்கலாம்

9 ஐபிஎல் போன்ற தரமான தொடரில் இதுபோன்ற அம்பயரிங் குளறுபடிகள் வெற்றியையே தலைகீழாக மாற்றக் கூடியது என தெரிந்தும் தரமில்லாதா அம்பயர்கள் இஷ்டத்துக்கு செயல்பட்டு வருகின்றார்கள். இதை ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தும் கூட பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி கண்டு கொள்ளாமல் தொடர்ந்து மௌனம் காப்பது வியக்க வைக்கிறது.

No comments: