Friday, May 6, 2022

தமிழக ஆளுநரின் அதிகாரத்தைப் பறிக்க சட்டசபையில் தீர்மானம்.

திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்ததும் மத்திய மாநில அரசுகளுக்கிடையில்  முறுகல் நிலை உருவாகியது. பாரதீய ஜனதாக் கட்சி நினைத்த அனைத்தையும்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நிறைவேற்றியது. திராவிட முன்னேற்றக் கழகம் அட்சி பீடம் ஏறியதால் வெறுத்துப் போன மத்திய அரசு  தனக்கு விசுவாசமான ரவி என்பவரை தமிழக ஆளுநராக நியமித்தது.

மத்திய அரசின் அட்டவணைப்படி ரவி செயற்பட்டார். ஆரம்பத்தில்   திராவிட முன்னேற்றக் கழகம் அவருக்கு ஈடு கொடுக்காது செயற்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் பணிந்து விட்டதென விமர்சித்தார்கள்.சட்டப்படி செல நடவடிக்கை அடைக்கைகளை முன்னெடுத்த   திராவிட முன்னேற்றக் கழகம் ஆளுநரை முடக்கும் வகையில் காய்நகர்த்தியுள்ளது.

தமிழ்நாடு அரசே துணை வேந்தர்களை நியமனம் செய்யும் வகையில் சட்டசபையில் புதிய மசோதாவை ஆளும் திமுக அரசு   சட்டசபையில் தாக்கல் செய்து ஆளுநரின் அதிகாரத்தில் கைவைத்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த மசோதா ஆளுநர் தரப்பிற்கு வைக்கப்படும் மிகப்பெரிய செக்காக பார்க்கப்படுகிறது.தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவிக்கும் ஆளும் திமுக தரப்பிற்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. நீட் விலக்கு மசோதா, ஏழுபேர் விடுதலை  உள்ளிட்ட 9 முக்கிய மசோதாக்களை ஆளுநர் ரவி இதுவரை ஏற்கவில்லை.  இதற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் பல மேடைகளில் பேசிவிட்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தில்  அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியும் பல்வேறு விமர்சன கட்டுரைகளை எழுதியது.

 திராவிட முன்னேற்றக் கழ்கத்துக்கு அழைப்பு விடுக்காமல் பல்கலைக் கழக துணை வேந்தர்கள்  மாநாட்டை ஆளுநர் ரவி நடத்திய அன்று அவருக்கு எதிரான புதிய மசோதா தமிழக சட்ட சபையில் தாக்கல் செய்யப்படது.

ஆனால் துணைவேந்தர்கள் நியமன சட்ட மசோதாவிற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், பாரதீய ஜனதாக் கட்சியும் எதிர்ப்புத் தெரிவித்தன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்ததர். அனால் , இதே சட்டம் மோடியில் மாநிலமான குஜராத்தில் அமுல் படுத்தப்படுகிறதென முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்தார். குஜராத்தில்  உள்ள சட்டத்தை அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகமும், பாரதீய ஜனதாவும் எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது.

  முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சில்,. குஜராத்தில் மாநில அரசுதான் துணை வேந்தர்களை நியமிக்கிறது. இப்போது சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் வெளியேறி இருக்கும் பாஜக எம்எல்ஏக்களுக்கு ஒன்று சொல்கிறேன். இது பிரதமர் மோடியின் மாநிலத்தில் உள்ள சட்டம்தான். குஜராத் ரூல்ஸ் பிரதமர் மோடியின் சொந்த குஜராத் மாநிலத்தில் தேடுதல் குழு பரிந்துரைக்கு மூவரில் ஒருவரை மாநில அரசே நியமிக்கிறது. பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் இருப்பது போல தமிழ்நாட்டிலும் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவ்வளவுதான். இதை இங்கே பாஜக எதிர்த்து உள்ளது. பல மாநிலங்களில் இதே நிலைதான் உள்ளது.  ஆந்திர பிரதேசத்திலும் அரசின் பரிந்துரை அடிப்படையில்தான் நியமனம் நடக்கிறது. இப்போது அரசின் மசோதாவை எதிர்க்கும் அதிமுக, முன்பு துணை வேந்தர்களை அரசுதான் நியமிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தது. துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கே வழங்க வேண்டும் என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பூஞ்சியின் பரிந்துரைத்தார்.   இது பற்றி ஒன்றிய அரசு மாநில அரசுகளிடம் கருத்து கேட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்கள் இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டன. கடந்த அதிமுக ஆட்சியிலும் இதில் கருத்து தெரிவிக்கப்பட்டது. நாங்கள் சொன்ன கருத்தைதான்.  அதாவது மாநில அரசே துணை வேந்தரை நியமிக்க வேண்டும் என்றுதான் அப்போது அதிமுகவும் சொன்னது. இதனால் அதிமுகவிற்கு இந்த மசோதாவில் நெருடல் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை, என்று முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்திய  நாடாளுமன்றத்திலும் தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுத்தனர். மேலும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனே திரும்பப் பெறவும் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர். தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி செல்லும் இடங்களில் எதிர்க்கட்சிகள் கறுப்புக் கொடி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அண்மையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மீது கறுப்பு கொடிகள் வீசப்பட்டதாகவும் சர்ச்சைகள் வெடித்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் துறைத் தலைவர்களாக உள்ள பேராசிரியர்கள் கூட்டத்தினை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஊட்டியில் கூட்டியிருக்கிறார். தமிழக முதல்வர் அல்லது உயர் கல்வித்துறை அமைச்சர் இக்கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக தமிழக அரசின் ஒப்புதலைப் பெறாமல் தமிழக அரசை புறந்தள்ளிவிட்டு தன்னிச்சையாக ஆளுநர் இந்த கூட்டத்தை கூட்டியிருக்கிறார். இது மாநில அரசை அவமதிக்கும் செயல்; ஆளுநருக்கு அப்படியான எந்த ஒரு அதிகாரமும் இல்லை என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிரடி மசோதா நிறைவேற்றம் இதனிடையே ஆளுநரின் இந்த போக்குக்கு பதிலடி தரும் வகையில் தமிழக அரசு சட்டசபையில் இன்று சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதாவது தமிழக பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை ஆளுநர்தான் தற்போது வரை நியமித்து வருகிறார். ஆளுநருக்கான இந்த அதிகாரத்தைப் பறித்து இனி தமிழக பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு அதிமுக, பாஜக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் இந்த மசோதா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

ஏற்கனவே கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மாநிலங்கள் ஆளுநர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளன. இந்த நிலையில் தமிழக அரசும் ஆளுநரின் அதிகாரத்தைப் பறிக்கும் மசோதா இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இம்மசோதா மீது விரிவான விவாதமும் நடைபெற்றது

No comments: