Tuesday, May 24, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி

நாடக உலகில் இருந்து சினிமவுகுச் சென்று கலக்கியவர்களில் எம்.ஆர்.ராதாவும் ஒருவர். தமிழ் சினிமாவுல் கதாநாயகனுக்குக் கொடுத்த அதே மரியாதை எம்.ஆர்.ராதாவுக்கும் கொடுக்கப்பட்டது.

  எம்.ஆர்.ராதாவின் தாயார் திட்டி விட்டதால்  வீட்டைவிட்டு ஓடி சென்னை எழும்பூர் ரயில்வே  ஸ்டேஷனில் சுமைதூக்கும் வேலைசெய்தார்.எம்.ஆர்.ராதா முதலில் பார்த்து வந்தார். அந்த நேரத்தில்தான் “ஆலந்தூர் டப்பி ரங்கசாமி நாயுடு” என்கின்ற நாடக முதலாளியுடன் அறிமுகம் கிடைத்தது. எம்.ஆர்.ராதாவின் வேலை திறமையை பார்த்த ரங்கசாமி நாயுடு அவரைக் கூட்டிக்கொண்டு சிதம்பரத்திற்கு பயணம் செய்தார். ரயில் கிளம்புவதற்கு முன்னால் எம்.ஆர்.ராதாவுக்கு நடிக்கும் ஆர்வம் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொண்டார்.

பின்னர் நாடக குழுவில் ராதாவையும் சேர்ந்துகொண்டார் ரங்கசாமி நாயுடு. அங்கு நடிப்பதற்கு ராதாவுக்கு பல வேஷங்கள் தரப்பட்டன முக்கியமாக வயிற்றிற்கு சோறு கிடைத்தது.. அரிச்சந்திரன் நாடகத்தில் லோகிதாசனாக வந்து “அம்மா பசிக்குது அப்பா பசிக்குது” என்று அழுது நடித்தார். அடுத்து நல்லதங்காள் நாடகத்தில் ஏழு குழந்தைகளில் ஒருவராக இருந்து கிணற்றில் விழுந்து சாகும் வேடம் போட்டு நடித்தார்.  ஒரு நாள் ராதாவின் பெற்றோர் அவரை அவீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள்.  அவருக்கு நடிப்பின் மீது இருந்த அந்த ஆசை அவரை விட்டு போகவில்லை. பின்னர் மறுபடியும் வீட்டை விட்டு வெளியேறியவர் கூடவே தன்னுடைய தம்பியையும் மைசூருக்கு கூட்டிச் சென்றார். அங்கு சாமுண்னா ஐயர்  நாடகக் கம்பெனி இருவருக்கும் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்கள். அங்கே நாடகம் நன்றாக நடிக்கவில்லை என்றால் அடி உதை தான் கிடைக்கும்.. இதையெல்லாம் அவருடைய தம்பியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை, அதனால் நாடக கம்பெனியை விட்டு தம்பி வெளியேறி விட்டார். எம்.ஆர்.ராதா நாடகம் தான் தன்னுடைய வாழ்க்கை என்பதில் தெளிவாக இருந்தார். அத்தகைய தெளிவு தான் இன்றைக்கு அவரை தமிழ் திரையுலகம் கொண்டாடுகிறது.

பின்னர் ஜெகன்நாதன் ஐயர் நாடக கம்பெனியில் வேலை கிடைத்து மதுரை ஸ்ரீ பால மீன ரஞ்சனி சங்கீத சபாவில் எம்.ஆர்.ராதாவுக்கு நடிக்க அடுத்த வாய்ப்பு கிடைத்தது. திரைப்படத்துறையில் பெரும்புகழ் பெற்ற பலரையும் உருவாக்கி விட்ட அந்த கம்பெனிதான் எம்.ஆர்.ராதா என்கின்ற பெரிய கலைஞரையும் செதுக்கியது. இவருடைய நடிப்பு திறமையை பார்த்த கம்பெனி முதலாளி எம்.ஆர்.ராதாவை தன்னுடைய அன்புக்கு பத்திரம் ஆக்கிக்கொண்டார்.. வெறும் நடிகராக இருந்த எம்.ஆர்.ராதா அப்பொழுது ஓட்டுநர், மெக்கானிக், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பல வேலைகளை எல்லாம் ராதாவிடம் நம்பிக் கொடுத்தார் முதலாளி. 5 ரூபாய் சம்பளத்தில் தொடங்கிய எம்.ஆர்.ராதாவின் நாடக வாழ்க்கை அப்பொழுது 25 ரூபாயாக உயர்ந்தது.

 

இப்படி போய்க்கொண்டிருந்த பயணத்தில் திடீரென ஒரு நாள் அதிர்ச்சி காத்திருந்தது.. அரசாங்கம் போட்டதமாஷா வரிஅதாவது ((Entertainment Tax) எல்லாம் கட்ட முடியாது என சொல்லிவிட்டு கம்பெனிய கலைத்து விட முடிவு செய்கிறார் ஜெகநாத ஐயர்.. பிறகு கம்பெனியின் நிர்வாகம் அனைத்தும் நாகலிங்கம் செட்டியார் என்பவர் கையில் சென்றது. முதலாளி மாறினாலும் எம்.ஆர்.ராதா கம்பெனியிலேயே தொடர்ந்தார்.. நாடக கம்பெனி ஒரு முறை ஈரோட்டுக்கு சென்றது. அங்கதான் ராதாவுக்கு பெரியாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கை மீது எம்.ஆர்.ராதாவுக்கு ஈர்ப்பு ஏற்படத் தொடங்கியது அதன்பிறகுதான். பிறகு அந்த இடத்தில் ரவுடிகள் சிலரிடம் கைகலப்பு ஏற்பட்டதன் காரணமாக ராமலிங்க செட்டியார் ராதாவ சென்னைக்கு அனுப்பிவைத்து விட்டார்.

அப்போதுபொன்னுசாமி பிள்ளைஎன்பவர் புதிய நாடக கம்பெனி ஒன்றை ஆரம்பித்திருந்தார்.. ராதாவின் வருகை அவரை உற்சாகத்தின் உச்சியில் கொண்டு போய் நிற்கவைத்தது. உடனே அவரிடம் போய் பேசி கம்பெனியில சேர்ந்து விடுகிறார். அங்கு தான் அவருக்கு மனேஜர் பொறுப்பு கிடைத்தது. இந்த சமயத்தில்தான் எம்.ஆர்.ராதாவுக்கு திருமணத்திற்கு பெண் பார்க்க தொடங்குகின்றனர். ஆனால் யாரும் இவருக்கு பெண் கொடுக்க முன் வரவில்லை. காரணம் கூத்தாடிகளுக்கு எல்லாம் பொண்ணு கொடுக்க முடியாது என அனைவரும் மறுத்தனர். பின்னர் மேனேஜர் பதவிய வைத்து  விழுப்புரத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்ற பெண்ணை ராதா திருமணம் செய்து கொள்கிறார்.

எம்.ஆர்.ராதா சுயமரியாதை கொண்டவர். இவர் நாடகம் நடிக்கும்போது இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இவர் நடிக்கும் நடிப்பை திரும்ப நடிக்கச் சொல்லி பலர் கேட்பார்கள். அப்பொழுது அவர் நடிக்க மறுத்துவிடுவார். காரணம், பாராட்டுகிறார்கள் என்பதற்காக ஒரு காட்சியை மீண்டும் நடிக்க முடியாது என்று மறுத்து விடுவார். விளைவு கம்பெனி முதலாளிகளுடன் மோதல் உருவானது. பிறகு டி.ஆர் மகாலிங்கம் உள்ளிட்ட தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ஒரு தனி நாடகக் கம்பெனி உருவாக்குகிறார். அந்த சமயத்தில் எம்.ஆர்.ராதா வுக்கு     சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ராஜசேகரன் என்கின்ற பெயரில் சண்டைக் காட்சிகள் நிரம்பிய படத்திற்கு ஒன்று தயாராகிக் கொண்டிருந்தார்.. நாடகங்களில் சிறந்த அனுபவசாலியான இவருக்கு திரைப்படம் எந்தவொரு சவாலையும் கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.. பிறகு படத்தின் இயக்குனருடன் புரிந்துணர்வு இல்லை, அதன் காரணமாக அந்த படம் அவருக்கு நன்றாக அமையவில்லை. முதல் படத்தில் எப்படி இருந்தாரோ அதே போல கடைசி வரை இருந்தார் எம்.ஆர்.ராதா. தன்னுடைய கொள்கையிலிருந்து மாறவில்லை. பொதுவாக நாடகத்தில் நடிபவர்கள் ரசிகர்களை மட்டுமே பார்த்துப் பேச வேண்டும்.. எந்த ஒரு காரணத்திற்கும் திரும்பி நின்றபடி பேசக்கூடாது அந்த மரபை அடியோடு உடைத்தெறிந்தார் எம்.ஆர்.ராதா.. ஒரு நாடகக் காட்சி ஒன்றில் முழுக்க முழுக்க முதுகை காட்டி நின்றபடியே வசனம் பேசினார்.. அப்போது அவருடைய முதுகுக்கு பதிலாக அவருடைய சுருள்முடி நடித்தது ரசிகர்களை கொண்டாட செய்தது.. அந்த நாடகத்தை அரங்கத்திற்கு வந்து பார்த்துவிட்டு, தான் பணியாற்றிய பத்திரிகையில் பாராட்டி எழுதினார் ஒரு அரசியல் தலைவர் அவர்தான் அண்ணா என்கின்ற சி.என்.அண்ணாதுரை.

எம்.ஆர். ராதா நடித்த முதல் படம்ராஜ சேகரன்ய (1937), கடைசிப் படம் பஞ்சா மிர்தம்ய (1979), சினிமா வாய்ப்பு கிடை த்ததும் பலரும் நாடகத்தை விட்டுவிடு வார்கள். ஆனால், சினிமாநாடகம் இர ண்டையும் விடாமல் வைத்திருந்தவர் இவர் மட்டும்தான்!

உலக பாட்டாளி மக்களே ஒன்று சேருங்கள் என்று சொல்லி, அரி வாள் சுத்தியல் சின்னத்தைக் காட்டுவதைத் தனது ஆரம்ப கால நாடகங்களில் வழக்கமாக வைத்திருந்த ராதா, அதன் பிறகு திரா விடர் கழகக் கொடியையும் பெரியார் படத்தையும் காட்டி விட்டுத் தான் நாடகத்தை ஆரம்பிப்பார்!

ரத்தக்கண்ணீர் நாடகம் 3 ஆயிரத்து 21 நாட்களும், தூக்குமேடை நாடகம் 800 நாட்களும், லட் சுமி காந்தன் நாடகம் 760 நாட்களும் நடைபெற்றன

ப்ளைமெளத், அம்பாஸடர், இம்பாலா எனப் பலப்பல கார் களை வைத்திருந்தார். இம் பாலாவில் ஒரு நாள் எருமை மாட்டுக்கு வைக்கோல் எடுத்துச் சென்றதைப் பார்த்துப்பலரும் ஆச்சர்யப் பட்டார்கள்.

நமக்குப் பயன் படுறதுக்குத்தானப்பா கார். தகரத்துக்கு கலர் பெயி ன்ட் அடிச்சதுக்காக, தலையிலயா தூக்கிட்டுப்போக முடியும்? என்று கேட்டார்!

நாடகம் நடந்துகொண்டு இருக் கும்போது செருப்பு, கல், அழு கிய முட்டை போன்றவை எதி ரிகளால் வீசப்படுவது வாடிக் கை அந்தப் பொருட்களை மறு நாள் கண்காட்சியாக வைப்பா ர். ‘நேற்று பேடிகள் விட்டுச் செ ன்ற சாமான்கள் என்று அதில் எழுதிவைப்பார்

எம்.ஜி.ஆரைராமச்சந்திரா என்றும், சிவாஜியைகணேசா என்றும் அழைப்பார். மற்ற நடிகர்களை எல்லாம் வாடா, போடாதான்

இவரது நாடகங்களைத் தடை செய்வதற்காகவே காங்கிரஸ் ஆட்சி நாடகத் தடைச் சட்டம் கொண்டு வந்தது. அந்தச் சட்டம் விவாதத் துக்கு வந்தபோது டவுசர், பணியனோடு சபை வளா கத்துக்குப் போய் விட்டா ர். ஒரு நாடகத்தைத் தடை செய்தால், அதை யே பெயர் மாற்றி மறு நாள் போடுவார்

 

என்.எஸ். கிருஷ்ணனைச் சுடுவதற்காக உளுந்தூர் பேட்டையில் கள்ளத் துப்பாக்கி வாங்கினார். விஷயம் தெரிந்து, ‘நண்பன் கையால் சாகக் கொடுத்து வைத்திருக்கணும்

என்று என்.எஸ்.கே சொன்னதும், மனம் மாறி கட்டி அணைத்தார் ராதா. திருப்பதி கோயிலுக்கு குண்டு வைக்கப் போய் வெடி மருந் தைக் காயவைத்து, அது வெ டித்துச் சிறுவிபத்தான சம்ப வமும் உண்டு

எம்.ஜி.ஆரை அவரது ராமா வரம் தோட்டத்தில் சுட்டு, தானும் சுட்டுக்கொண்டதா கப் பதிவான வழக்கில் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்ட னை தரப்பட்டது.

நண்பர்கள் ரெண்டு பேரும் துப்பாக்கியை வெச்சு விளையாடிக் கிட்டோம். என்னடா துப்பாக்கி கண்டு பிடிக்கிறானுங்க. நானும் சாகலைராமச்சந்திரனும் சாகலை. இதுல எல்லாமா டூப்ளிகேட் வர்றது? என்று அதற்கும் காமெடி விளக்கம் கொடுத்தார்

நான்கரை ஆண்டு காலம் சென்னை மத்தியச் சிறையில் இருந்தார் அவர் மீது ஆர்வம்கொண்டவராகக் காட்டிக் கொண்ட கைதி ஒருவர், ஒரு நாள் சமையல் செய்து கொடுத்தார். ராதா வளர்த்த பூனை அதை முதலில் சாப்பி ட்டதும் சுருண்டு விழுந்து செத்துப்போ னது. ஆய்வுக்கு அனுப்பப்பட்ட அந்த உணவில், விஷம் கலக்கப்பட்டு இருந்தது பின்னால் தெரிய வந் தது

அடியே காந்தாஃபாரின்ல நீராவியில் கப்பல் விடுறான்நீங்க நீராவியில புட்டு செஞ்சு வயித்துக்குள்ள விடுறீங்கய,

ஊருக்கு ஒரு லீடர்அவனவனுக்கு ஒரு கொள்கை. அவனவனுக் கு ஒரு பட்டினிப் பட்டாளம்…. நான்சென்ஸ் இப்படி ராதாவின் வார் த்தைகளைவைத்தே மிமிக்ரி நடிகர் ஆனவர்கள் அதிகம்

ராமாயணத்தை அதிகப்படியாகக் கிண்டலடி த்தவர். ‘கீமாயணம் என்று நாடகம் போட்டார். ராமன் வேடத்தில் இருக்கும் போதே கைது செய்தார்கள். பக்தர்கள் மனம் புண்படுகிறது என்று வழக்குப் போட்டார்கள். மனம் புண்படு பவர்கள் யாரும் வர வேண்டாம்என்று விளம்பரம் கொடுத்தார்!

No comments: