Tuesday, November 5, 2024

தமிழகத்தைப் புரட்டிப் போட்ட விஜயின் அரசியல் கட்சி மாநாடு

சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்க வைத்திருக்கும் விஜய், அரசியல் களத்திலும் தனது பலத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக மாநாடு பிரமாண்டமான மக்கள்  கூட்டத்துடன் அசம்பாவிதம் எதுவும் இன்றி நடைபெற்றுள்ளது. தேர்ந்த அரசியல்வாதியைப் போன்று  விஜய் பேசி அனைவரையும் கவர்ந்தார். இளம் தலைமுறைக்கு விஜய் ஏதாவது வழிகாட்டுவார் என்ற எதிர்பார்ப்பு எகிறியது.

திராவிட முன்னேற்றக் கழகத்தை மிக மோசமாக விமர்சித்தர். வாரிசு அரசியல், ஊழல்  போன்றவை பற்றி எடுத்துரைத்தார்.  பாரதீய ஜனதாவை பட்டும் படாமலும் விமர்சனம் செய்தார். மத்தியில் ஆலும் கட்சியையும், தமிழக ஆளும் கட்சியையும் எதிர்த்தால் அரசியல் செய்யலாம் என்ற கணக்குடன் அரசியல் மேடையில் கால் வைத்துள்ளார் விஜய்.தமிழகத்தின் மிகப் பெரிய கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பறி விஜய் வாய் திறக்கவில்லை. எம்.ஜி.ஆர் ரசிகர்கள்  கோபித்துக்கொள்வார்கள் என்ற எச்சரிக்கை  உணர்வாக  இருக்கலாம்.

தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப்போவதாக அறிவித்திருக்கும் விஜய், ஆட்சியில் பங்கு  என்று மற்றக் கட்சிகலுக்கு வலை விரித்துள்ளார். துணை முதல்வராகும் தகுதி திருமாவுக்கு இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள்  பகிரங்கமாக கூறிவருகின்றனர். அதனால்தான் உதயநிதியை துணை முதல்வராக்கி அந்தப் பதவி  காலி இல்லை என்பதை ஸ்டாலின் வெளிப்படுத்தினார்.

 தமிழகத்தில் இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் அல்லது ஆட்சியில் பங்கு  வேண்டும் என தமிழக காங்கிரஸார் அடிக்கடி பேசுகின்றனர். அவர்களுக்கும் சேர்த்து விஜய்  வலை விரித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து யாராவது வருவார்களா என வழி  மேல் விழி வைத்துக் காத்திருக்கும் எடப்பாடி அதிர்ந்து போயுள்ளார். எடப்பாடி பலம் வாய்ந்த தலைவர் என அண்ணா திராவிடக் கட்சியினர்  பரப்புரை செய்கிறார்கள். ஆனால், ஏனையவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகத்தை மிகக் கடுமையாக விமர்சித்த விஜய்,  ஒரே ஒரு விடயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துட ஒத்துப் போகிறார்.  சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவி தேவையில்லை என்ற செயல் திட்டத்தில் விஜய் திராவிட முன்னேற்றக் கழகத்திடன் ஒத்துப் போகிறார்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் உள்ள வி.சாலை பகுதியில் நடைபெற்றது. மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த அரசியல் மாநாட்டில் வழக்கமான அரசியல் மாநாடு போல் அதிகமானவர்கள் மேடையில் அமர்வது, நிறைய பேர் பெரிய பெயர் பட்டியல் வாசித்து, பேசிக் கொண்டே இருப்பது போன்ற எதுவும் இந்த மாநாட்டில் இல்லை.

சினிமா பஞ்ச் டையலாக் இல்லாமல், வழக்கமான அரசியல் மாநாடு போல் யாரையும் தாக்கி பேசாமல், அநாகரீகமான விமர்சனம் வைக்காமல், யாரையும் குறை கூறாமல்.. நான் என்ன பண்ணப் போறேன், நாங்க என்ன பண்ணப் போறோம் என்பதை எளிமையாக‌, அதேசமயம், அதிரடியாக அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தி தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டிலேயே யதார்த்தமாக பேசி அனைவரையும் கவர்ந்துள்ளார்  விஜய். யாரையும் குறை சொல்ல வரவைல்லை என்ரு   அனைவரையும் கவர்ந்தார் விஜய். வழக்கம்  போல் குட்டிக் கதைகள் ஆங்காங்கே சிதறின.

வழக்கமாக விஜய் தன்னுடைய டிரேட் மார்க் டயலாக்கான, "என் நெஞ்சில் குடியிருக்கும்" என்று தான் தன்னுடைய முதல் அரசியல் உரையை துவக்குவார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் நினைப்புகள் அனைத்தையும் பொய்யாக்கி, சென்டிமென்டாக ஒரு உதாரணத்தை சொல்லி, சிம்பிளாக தன்னுடைய ஸ்டாண்ட் இது தான் என காட்டும் வகையில் பேச்சை துவக்கினார் விஜய்.

தன்னுடைய அரசியல் பயணத்திற்கு தனது சினிமா வசனங்களைக் கூட அவர் பயன்படுத்த விரும்பவில்லை என்பதை தெளிவாக நிரூபித்து விட்டார் விஜய். தன்னுடைய அரசியல் எதிரி யார், யாரை தான் எதிர்க்க போகிறேன், தன்னை பற்றி வைக்கப்படும் அரசியல் விமர்சனங்கள் என அனைத்திற்கும் ஒட்டுமொத்தமாக பதில் அளித்து விட்டார் விஜய்.

வழக்கமாக யாராவது புதிதாக அரசியலுக்கு வந்தால் அவர்களுக்கு எதிராக என்னென்ன விமர்சனங்கள் முன் வைக்கப்படும் என்பதை சரியாக பட்டியலிட்டு, அவற்றிற்கு ஓப்பனாக மேடையில் பதில் கூறி விட்டார் விஜய். மொத்தத்தில் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்து துவம்சம் செய்துள்ளார் விஜய். பேச்சை முடிக்கும்போது நாங்க டீசன்ட்டான அரசியல் தான் செய்வோம்.. டீசன்ட்டாதான் தாக்குவோம்.. ஆனால் டீப்பா தாக்குவோம்.. எங்களுக்கு பயமெல்லாம் கிடையாது என்றும் சொல்லி பல தலைவர்களுடைய தூக்கத்துக்கு அணுகுண்டு வைத்து விட்டுச் சென்றார் விஜய்.

கழக மாநாடு வெற்றி என தகவல்கள் வரும் வேளையில் சில அசம்பாவிதங்களும் நடைபெற்றன. தமிழக வெற்ரிக் கழகநிர்வாகிகள் இருவர்  பேர் உயிரிழந்தனர். அதேபோல சென்னையில் நிகழ்ந்த சாலை விபத்தில்   தொண்டர் ஒருவர் பலியானார். இவற்றுக்கு மாநாட்டில் விஜய் அனுதாபம் தெரிவிக்க வில்லை என  உறவினர்கள்  குரல் எழுப்பினார்கள். மறுநாள்  புஸ்லி ஆனந்  சென்ரு ஆறுதல்  தெரிவித்தார்.

விஜயின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் வந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டி, வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். இந்த மாநாட்டின்போது பலருக்கும் குடிநீர் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் 100க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தார்கள் எனவும் கூறப்பட்டது.

மாநாடு நடைபெறும் இடத்தில் பல்வேறு தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், மன்னர்களின் கட்-அவுட்கள் இடம் பெற்றிருப்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது.

மாநாடு நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்-அவுட்கள் குறித்து சமூக ஊடகங்களிலும் அரசியல் அரங்கிலும் பரவலாக விவாதிக்கப்படுகிறது. ஒருபுறம் வேலுநாச்சியார், காமராஜர், பெரியார், மறுபுறம் அம்பேத்கர், சுதந்திர போராட்டர் வீரர் அஞ்சலை அம்மாள் ஆகியோருக்கு நடுவே விஜய் நிற்பது போன்று கட்-அவுட் அமைக்கப்பட்டுள்ளது.

 தான் குறிவைக்கும் வாக்கு வங்கியை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அம்பேத்கர் மூலம் தலித் வாக்கு வங்கியை குறிவைக்கிறார். பெரியார் மூலம் சமூக நீதியை முன்னிறுத்துகிறார். காமராஜரை முன்னிறுத்துவதன் வாயிலாக, காங்கிரஸ் மற்றும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகளை குறிவைக்கிறார். வேலுநாச்சியார் மூலமும் குறிப்பிட்ட சமூக வாக்கு வங்கி குறிவைக்கப்படுகிறது.

அண்ணா, எம்ஜிஆர் குறித்து நேர்மறையான கருத்துகளைக் கூறி வரும் விஜய், அவர்களுக்கு கட்-அவுட் வைக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏற்கெனவே, விஜய் திரைப்படங்களில் எம்ஜிஆர் பாடல்கள், அவர் குறித்த குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. மேலும், தவெக கொடி பாடலில், எம்ஜிஆர், அண்ணாவின் படங்கள் பின்னணியில் இடம் பெற்றிருந்தன. மேலும், செப்டம்பர் 15 அன்று அண்ணாவின் பிறந்த நாளன்று அவரை நினைவுகூர்ந்து விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

 அண்ணா, எம்ஜிஆருக்கு கட்-அவுட் வைப்பது நியாயமும் இல்லை. அண்ணா ஆரம்பித்த கட்சியும் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியும் ஏற்கெனவே தமிழகத்தில் உள்ளது. இவர்களை முன்னிறுத்தி வாக்கு கேட்பதாக அக்கட்சியினர் சொல்லிவிடக்கூடாது என்பதால் தவிர்த்திருக்கலாம்.

இதுதவிர, தமிழ்த்தாய், சேர, சோழர், பாண்டிய மன்னர்களுக்கும் கட்-அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 மாநாட்டு பந்தலின் நுழைவுவாயிலில் சுதந்திர போராட்ட வீரர்கள், சுந்தரலிங்கம், வீரபாண்டிய கட்டபொம்மன், அழகுமுத்துகோன், மன்னர் பெரும்பிடுகு முத்தரையர், தீரன் சின்னமலை, மன்னர் பூலித்தேவன், மருது சகோதரர்கள், ஒண்டிவீரன் உள்ளிட்டோரின் கட்-அவுட்களும் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தவெக மாநாட்டிற்காக சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த சார்லஸ் (34) என்பவர் வந்திருந்தார். ஆனால் அதிக வெயில் காரணமாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி சார்லஸ் உயிரிழந்தார்.

கர்ப்பிணிகள்,குழந்தைகள், மதுப் பிரியர்கள்  மாநாட்டுக்கு வர வேண்டாம் என விஜய் அறிவித்திருந்தார். குழந்தைககுடன் கூட்டம் கூட்டமாக மக்கள் சென்றனர். மதுப் பிரியர்களும் தமது கைவரிசையைக் காட்டினார்கள். பரீட்சைக்குச் செல்லாமல் விஜயைப்  பார்க்கச் சென்றார்கள்.   விடுமுறை கிடக்காததால் வேலை  போனாலும் பரவாயில்லை என விஜயைத் தேடிச் சென்றார்கள். இதெல்லாம் வாக்குகளாகுமா என்பது கேள்விக்குறியே.

கூட்டணி  இல்லாமல் தேர்தலில் வெற்றி பெற முடியாது. விஜய் தனது கட்சியுடன்  எந்தக் கட்சியை கூட்டணி சேர்க்கப்போகிறார் என்பதை அறிய அனைவரும் ஆர்வமாக  இருக்கிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம், பாரதீய ஜனதா ஆகியவற்றுக்கு எதிரான வாக்குகளை  விஜய் எதிர் பார்க்கிறார். விஜயில் அரசியல் பிரவேசத்தால் சீமான் மிக  மோசமாகப் பாதிக்கப்படப் போகிறார். சீமானை நம்பிய  இளைஞர் படை விஜயை நோக்கிச் செல்லக் கூடும் வாய்ப்பு மிக அதிகமாக  உள்ளது.

ராமதாஸ், பிரேமலதா, பாரிவேந்தர்  போன்றவர்கள் விஜயின் பக்கம் சாயும் சாத்தியக் கூறு அதிகமாக  உள்ளது.கட்சி  என்ற பெயரில் இயங்கும் சாதிக் கட்சிகளும் விஜய்க்கும்  பின்னால் அணிவகுக்கத் தயாராகி விட்டன.

ரமணி

   

No comments: