இந்திய ,அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே பேர்த்தில் நடைபெறும் முத்லாவது டெஸ்ட் போட்டியில் 3 ஆம் நாள் முடிவில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்
7 முறை 5 விக்கெட்ஸ் பும்ரா
வெளிநாட்டில்
அபாரம்
இப்போட்டியில் பும்ரா
எடுத்த 5 விக்கெட்டுகளையும் சேர்த்து தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து உள்ளிட்ட சேனா நாடுகளில் நாடுகளில் ஜஸ்ப்ரித் பும்ரா 7 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் மூலம் சேனா நாடுகளில் அதிக
முறை 5 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர் என்ற கபில் தேவ் வாழ்நாள் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
இதற்கு
முன் கபில் தேவும் சேனா நாடுகளில் 7 முறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவர்களுக்கு அடுத்த இடத்தில் ஜாகீர் கான் ,பிஎஸ் சந்திரசேகர் ஆகியோர் தலா 6 விக்கெற்கள் எடுத்துள்ளார்கள்.
இந்திய
மண்ணில் பும்ரா
2 முறை மட்டுமே 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆனால் ஒட்டுமொத்த வெளிநாட்டு மண்ணில் அவர் 11 முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
கிங் விராட் கோலி படைத்த 3 சாதனைகள்
அவுஸ்திரேலிய
மண்ணில் விராட் கோலி 7 சதங்கள் அடித்து சாதனை
படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 6 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். மேலும் வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சுனில் கவாஸ்கர் சாதனையையும் அவர் சமன் செய்தார்.
1. சுனில்
காஸ்கர் : 7, வெஸ்ட் இண்டீஸில்
1. விராட்
கோலி: 7, அவுஸ்திரேலியாவில்
2. ராகுல்
டிராவிட்: 6, இங்கிலாந்தில்
2. சச்சின்
டெண்டுல்கர்: 6, அவுஸ்திரேலியாவில்
டெஸ்ட்
கிரிக்கெட்டில் 3வது அதிக கேட்ச்களை பிடித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர் சாதனையை உடைத்த விராட் கோலி புதிய சாதனை படைத்தார்.
1. ராகுல்
டிராவிட்: 210
2. விவிஎஸ்
லக்ஷ்மன்: 135
3. விராட்
கோலி: 116*
4. சச்சின்
டெண்டுல்கர்: 115
5. சுனில்
கவாஸ்கர்: 108
கம்பீரின் 16 வருட சாதனையை முறியடித்த ஜெய்ஸ்வால்
ஜெயஸ்வால்
மிகவும் நிதானமாக விளையாடி 1273* ஓட்டங்கள் அடித்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய இடதுகை பேட்ஸ்மேன் என்ற கௌதம் கம்பீர் சாதனையை உடைத்து புதிய
சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2008ஆம் ஆண்டு தற்போதைய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் 1134 ஓட்டங்கள் அடித்ததே முந்தைய சாதனை.
1. யசஸ்வி
ஜெய்ஸ்வால்: 1273*
(2024)
2. கௌதம்
கம்பீர்: 1134 (2008)
3. சௌரவ்
கங்குலி: 1106 (2007)
15பவுண்டரி
3 சிக்சருடன் அவர் 161 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதையும் சேர்த்து 2023 – 2025 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் அதிக முறை 50க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற ஜோ ரூட் உலக
சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார். அந்த இருவருமே இதுவரை 12 முறை 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்துள்ளார்கள்.
இளம்
வயதில் அரை சதம் அடித்த இந்திய இடது கை பேட்ஸ்மேன் என்ற
பெருமையும் ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். டெஸ்ட்
கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற மெக்கல்லம் சாதனையை உடைத்துள்ள ஜெய்ஸ்வால் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
1. யசஸ்வி
ஜெய்ஸ்வால்: 35
(2024)
2. ப்ரெண்டன்
மெக்கல்லம்: 33
(2014)
3. பென்
ஸ்டோக்ஸ்: 26 (2022)
சேவாக் சாதனையை சமன் செய்த ராகுல்
ஜெய்ஸ்வாலுடன்
சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 201 ஓட்டங்கள்
எடுத்தார் ராகுல். இதன்
மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 20 வருடங்கள் கழித்து அவுஸ்திரேலிய மண்ணில் 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற சாதனையை ராகுல் – ஜெய்ஸ்வால் படைத்துள்ளனர். கடைசியாக 2004ஆம் ஆண்டு வீரேந்திர சேவாக் – ஆகாஷ் சோப்ரா அவுஸ்திரேலியாவில் 100+ ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார்கள்.
2000ஆம் ஆண்டு
ஆண்டுக்குப் பின் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா எனப்படும் சேனா நாடுகளில் அதிக முறை 100+ ஓட்டங்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைக்க உதவிய இந்திய வீரர் என்ற வீரேந்திர சேவாக் சாதனையையும் ராகுல் சமன் செய்துள்ளார். சேவாக், ராகுல் ஆகிய இருவருமே 2000ஆம் ஆண்டுக்குப்பின் சேனா நாடுகளில் இந்தியா தலா 3 முறை 100+ ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைக்க உதவியுள்ளார்கள்.
ஜெய்ஸ்வால் –
ராகுல்
ஜோடி
38 வருட
சாதனையை
முறியடித்தது.
அவுஸ்திரேலியாவில் ஒரு இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற சுனில் கவாஸ்கர் – ஸ்ரீகாந்த் சாதனையையும் அந்த ஜோடி உடைத்துள்ளது. இதற்கு முன் 1986ஆம் ஆண்டு சிட்னி மைதானத்தில் அவர்கள் 191 ஓட்டங்கள் அடித்ததே முந்தைய சாதனை
No comments:
Post a Comment